From Tue Sep 14 18:26:31 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 15 Sep 1999 01:29:24 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 20840 invoked from network); 15 Sep 1999 01:09:53 -0000
Received: from relay7.jaring.my (192.228.128.117) by qg.egroups.com with SMTP; 15 Sep 1999 01:09:53 -0000
Received: from jaring.my (j54.glg87.jaring.my [161.142.207.128]) by relay7.jaring.my (8.9.3/8.9.3) with SMTP id JAA12007; Wed, 15 Sep 1999 09:09:44 +0800 (MYT)
Date: Wed, 15 Sep 1999 09:09:44 +0800 (MYT)
Message-Id: <199909150109.JAA12007@...>
X-Sender: subas@...
X-Mailer: Windows Eudora Pro Version 2.1.2
Mime-Version: 1.0
To: Tamil iNaiyam
From: "DrK.Loganathan"
Cc: agathiyar@egroups.com
Subject: [agathiyar] Thaththuvak Kavithai 234
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2037

அன்பர்களே,

என்னை பல ஆண்டுகளாக அரித்துக் கொண்டிருக்கும் ஓர் கேள்வி: சமயம் என்றால் என்ன?அதிலும் குறிப்பாக
சைவம் சமயம் என்றால் என்ன? என்பது. இதனைக் கேட்டுக் கேட்டு பலவாறு தெளிந்துவருகின்றேன். பெற்றத்
தெளிவுகளை கட்டுரைகளாக கவிதைகளாக எழுதி மகிழ்கின்றேன். சைவ வேடங்கள் தேவையா? பட்டைப்
பட்டையாக திருநீறு அணிவதும் சுத்தபோசனம் உண்பதும் போதுமா? இல்லை தீக்கை பெற்று அக்கமாலை
அணிந்து கசாயம் உடுத்தி சில தேவாரப்பாடல்களை மனப்பாடம் செய்து கொண்டும்பாடிக்கொண்டும் இருந்தால்
போதுமா? இல்லை ஓர் ஆதீனம் அமைத்துஅதற்குரிய வேடத்தையும் போட்டு பலரிடமிறுந்து பணத்தை வசூலித்து
சமயம் என்ற பெயரில் ஏதாவது செய்வதுதான் சைவ சமய வாழ்க்கையா? இல்லை ஓர்கோயிலை எழுப்பி அங்கு
அர்ச்சனைகள் செய்வது திருவிழாக்கள்எடுப்பதுதான் சமய வாழ்க்கையா? இப்படிப்பட்டக் கேள்விகள் எழ
எனக்குத் தோன்றிய விளக்கத்தை இக்கவிதை வடிவில் தருகின்றேன், அன்பர்களின்சிந்தனைக்கு.

தத்துவராயன்

234: சைவம் எங்கே?

சைவ வேடங்கள் இருக்கின்றன அய்யனே ஆனால்
உன்னை உளமார நினைக்கும்
சைவந்தான் இல்லை என் செய்வேன்?

வேடங்கள் போட்டு பலவித
வித்தைகளைக் காட்டி மக்களை
வீழ்ச்சிப் பாதையில் கொண்டுசெல்கின்றனர்!
அநீதியென அநியாயமென நான்
அடங்காச் சினத்தோடு எழுந்து
ஆழச் சிந்தனை திறத்தோடு
அறிவுத் தமிழ் கவி பாட அதற்கும்
எங்கிருந்தெல்லாமோ எதிர்ப்பு!
எது நடந்தாலும் நமக்கென்ன என்றவோர்
அலட்சியம்!

வேடத்தில் இல்லை சைவம் உள
வீரத்தில் இருக்கின்றது
நீதிக்கும் நேர்மைக்கும் போராடும்
ஊக்கத்தில் இருக்கின்றது யாண்டும் எதிலும்
உண்மையையேக் காணும்
உறுதியில் இருகின்றது! அதனை ஓயாது
உணர்த்திக் கொண்டே இருக்கும்
திறத்தில் இருக்கின்றது!

ஊழல் ஆதீனங்களின் உதவா
அருளுரைகளும் மற்றவர்
அலங்கார அர்ச்சனை ஆர்ப்பாட்டங்களும்
அருளின் வெளிப்பாடுகள் அல்ல
ஆணவத்தின் வெளிப்பாடுகள்! அவை
அழிவின் வழிகாட்டிகள்!
நீதிக்கும் நேர்மைக்கும்
நெஞ்சில் இடமில்லை என்றால்
நேரிதல்ல அவர்கள்
நிகழ்த்தும் அனைத்தும்!

புயலென எழுந்து
புவியெல்லாம் நிறைந்து
ஊதி தள்ளுங்கள் இந்த உதவாப் பொய்யர்களை!
உண்மை சைவம் விளங்கிட
உறுதித் தமிழ் ஓங்கிட உணர்வில்
உள்ளொளிப் பெருகி உயர்ஞானம்
சிறந்திட!






------------------------------------------------------------------------------
Please visit Dravidian Philosophy Campus at [
http://members.tripod.com/loga/tindex.htm] New additions at metaphysical
poetry and Cultural Reflections. Also a new section on Islamic Studies.
Bring your friends there too. This is one of the BEST services you can do
for the world.

DrK.Loganathan