From Tue Sep 14 22:15:33 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 15 Sep 1999 05:18:29 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 31363 invoked from network); 15 Sep 1999 02:29:50 -0000
Received: from relay7.jaring.my (192.228.128.117) by qg.egroups.com with SMTP; 15 Sep 1999 02:29:50 -0000
Received: from jaring.my (j40.glg33.jaring.my [161.142.199.234]) by relay7.jaring.my (8.9.3/8.9.3) with SMTP id KAA24049; Wed, 15 Sep 1999 10:29:10 +0800 (MYT)
Date: Wed, 15 Sep 1999 10:29:10 +0800 (MYT)
Message-Id: <199909150229.KAA24049@...>
X-Sender: subas@...
X-Mailer: Windows Eudora Pro Version 2.1.2
Mime-Version: 1.0
To: Tamil iNaiyam
From: "DrK.Loganathan"
Cc: agathiyar@egroups.com
Subject: [agathiyar] Thaththuvak Kavithai 235
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2038

அன்பர்களே,

மலேசியாவில் நடக்கக் கூடாதவொன்றுநடந்து கொண்டிருக்கின்றது. அரசியல்வாதிகள் இப்படியெல்லாம் நடந்துக்
கொள்ளவேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆளுங்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள் வானொலியையும்
தொலைக்காட்சியையும் முற்றாக ஆக்ரமித்து தங்களது சாதனைகளை பட்டியலிட்டுவிரிவாக விளக்குகின்றனர்.
எதிர்கட்சியினருக்கு அறவே இடமில்லை. மக்கள் இருவரது கூற்றையும் கேட்டு சிந்தித்து பிறகு நல்லவோர்
முடிவிற்கு வரட்டுமே என்ற எண்ணம் அறவேஇல்லை. ஓர் நியாயமான அரசியல்போராட்டத்தில் குதிப்பதற்கு
அஞ்சுகின்ற கோழைகளாக இருக்கின்றனர். எப்படியாவது மீண்டும் ஆட்சியைப்பிடிக்கவேண்டும்கென்பதே அவர்கள்
குறிக்கோளாக இருக்கின்றது. இது இங்குமாத்திரம் அல்ல உலகின் பல இடங்களில் நடக்கவுஞ் செய்கின்றது.
கண்டுங் கேட்டும் மன நோக ஒர் கவிதையும் பிறந்தது. அன்பர்களுக்கு அனுப்பி வைக்கின்றேன்.

தத்துவராயன்


235: ஏழைகளே!


ஏழைகளே உங்கள் உயிர் மிக அற்பம்
குண்டடிபட்டு வீழ்ந்தாலும்
குண்டர்களால் தாக்குண்டு மாய்ந்தாலும்
அழுவதற்கு யாருமில்லை உங்களுக்கு
அன்பு காட்ட யாருமில்லை!

உங்களின் உரிமையாக இருக்கின்ற
அந்தவோர் ஓட்டிற்காக இந்த
அரசியல்வாதிகள் உங்களை அணுகுகின்றனர்
எதிர்கட்சியினர் யாரும் உங்கள்
கண்களில் படாதவாறு அவர்கள் கூற்று
காதுகட்கு எட்டாவாறும்
அனைத்தையும் அடைத்து அவர்களே
அவற்றை ஆக்ரமித்து!

கேட்பதெல்லாம் அவர்கள் புகழ்
காண்பதெல்லாம் அவர்கள் காட்சி
சிந்திக்கத் தெரியாதவர்களாக
உங்களை ஆக்கி தங்களையே
வந்திக்கும்படியாக வெட்கங்கெட்டு
வழங்குகின்றனர் செய்திகளை வானொலியிலும்
வண்ணத் தொலைக் காட்சியிலும்!

இவர்கட்கு ஒன்றுத் தெரியாது போலும்!

எத்தர்களாக அனைத்தையும் ஏழை
மக்களிடமிருந்து மறைக்கலாம் மா
வீரனென வேடம் ஆடலாம்
வெற்றிவாகை சூடலாம் ஆயினும்
அனைத்தையும் அந்நியமின்றி
உள்ளதை உள்ளவாக் காணும்
ஒருத்தன் இருக்கின்றான் அவனிடமிருந்து
எதையும் மறைக்கமுடியாது
எங்குவோடியும் தப்பிக்க முடியாது
எமனாய் வருவன் விரைவில் இந்த
எமகாதார்களைக் கண்டிக்க!

கருங்குழியில் வீழ்ந்து அவர்கள்
கதறிக் கதறி அழ நீங்கள்
ஏழையாக இருப்பினும் எந்நோயுமின்றி
இன்பமாக வாழ்வீர் இந்த
எழில் உலகில்!






------------------------------------------------------------------------------
Please visit Dravidian Philosophy Campus at [
http://members.tripod.com/loga/tindex.htm] New additions at metaphysical
poetry and Cultural Reflections. Also a new section on Islamic Studies.
Bring your friends there too. This is one of the BEST services you can do
for the world.

DrK.Loganathan