From Wed Sep 15 00:01:43 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 15 Sep 1999 07:04:39 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 25013 invoked from network); 15 Sep 1999 07:04:35 -0000
Received: from dfw-ix10.ix.netcom.com (206.214.98.10) by qh.egroups.com with SMTP; 15 Sep 1999 07:04:35 -0000
Received: (from smap@localhost) by dfw-ix10.ix.netcom.com (8.8.4/8.8.4) id CAA02829 for ; Wed, 15 Sep 1999 02:04:32 -0500 (CDT)
Received: from sji-ca1-194.ix.netcom.com(209.109.232.194) by dfw-ix10.ix.netcom.com via smap (V1.3) id rma002812; Wed Sep 15 02:04:11 1999
Message-ID: <00ae01beff48$1ffdaf80$c2e86dd1@namakkal>
From: "Mani M. Manivannan"
To:
Date: Wed, 15 Sep 1999 00:01:23 -0700
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3612.1700
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3612.1700
Subject: [agathiyar] On Worship
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2039

எது தெய்வம், எதை வணங்க வேண்டும், எது குப்பை,
எதை நினைக்க வேண்டும், எதை மறக்க வேண்டும்
என்றெல்லாம் இந்த மாபெரும் பாவலன் தத்துவக்
கவிதைகளைப் பாடிச் சென்றுவிட்டான். அவன்
பாடல் தொகுப்பில் "அறுபத்தாறு" என்பவற்றில்
இருந்து சில வரிகள்:

கேளப்பா, சீடனே! கழுதை யொன்றைக்
''கீழான'' பன்றியினைத் தேளைக் கண்டு
தாளைப்பார்த் திருகரமுஞ் சிரமேற் கூப்பிச்
சங்கரசங் கரவென்று பணிதல் வேண்டும்;
கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும்;
கூடிநின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்
மீளத்தான் இதைத் தெளிவா விரித்துச் சொல்வேன்;
விண்மட்டும் கடவுளன்று மண்ணும் அஃதே.

உயிர்களெல்லாம் தெய்வமன்றி பிறவொன் றில்லை;
ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;
பயிலுமுயிர் வகைமட்டு மன்றி யிங்குப்
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;
வெயிலளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்
மேலுமிங்கு பலபலவாம் தோற்றங் கொண்டே
இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;
எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்!

மற்றொருநாள் பழங்கந்தை யழுக்கு மூட்டை
வளமுறவே கட்டியவன் முதுகின் மீது
கற்றவர்கள் பணிந்தேத்தும் கமல பாதக்
கருணைமுனி சுமந்துகொண்டேன் னெதிரே வந்தான்;
சற்றுநகை புரிந்தவன்போல் கேட்ப லானேன்:
''தம்பிரா னே! இந்தத் தகைமை என்னே?
முற்றுமிது வித்தருடைச் செய்கை யன்றோ?
மூட்டைசுமந் திடுவதென்னே? மொழிவாய்'' என்றேன்:

புன்னகைபுத் தாரியநும் புகலுகின்றான்:
''புறத்தேநான் சுமக்கின்றேன்; அகத்தி னுள்ளே,
இன்னதொரு பழங்குப்பை சுமக்கி றாய்நீ''
என்றுரைத்து விரைந்தவனும் ஏகி விட்டான்.
மன்னவன்சொற் பொருளினையான் கண்டு கொண்டேன்;
மனத்தினுள்ளே பழம்பொய்கள் வளர்ப்ப தாலே
இன்னலுற்ற மாந்தரெல்லாம் மடிவார் வீணே,
இருதயத்தில் விடுதலையை இசைத்தல் வேண்டும்.

சென்றதினி மீளாது; மூடரே, நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர் சென்றதனைக் குறித்தல் வேண்டா;
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
அஃதின்றிச் சென்றதையே மீட்டும் மீட்டும்,

மென்மேலும் நினைத்தழுதல் வேண்டா, அந்தோ!
மேதையில்லா மானுடரே! மேலும் மேலும்
மென்மேலும் புதியகாற் றெம்முள் வந்து
மென்மேலும் புதியவுயிர் விளைத்தல் கண்டீர்,
ஆன்மாவென் றேகருமத் தொடர்பை யெண்ணி
அறிவுமயக் கங்கொண்டு கெடுகின்றீரே?
மான்மானும் விழியுடையாள் சக்தி தேவி
வசப்பட்டுத் தனைமறந்து வாழ்தல் வேண்டும்.

---

குள்ளச்சாமிதாசரே, நீர் வாழ்க!

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
நூவர்க், கலி., அ.கூ.நா.