From Wed Sep 15 05:12:31 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 15 Sep 1999 12:15:28 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 928 invoked from network); 15 Sep 1999 12:15:12 -0000
Received: from law-f61.hotmail.com (HELO hotmail.com) (209.185.131.124) by qh.egroups.com with SMTP; 15 Sep 1999 12:15:12 -0000
Received: (qmail 63989 invoked by uid 0); 15 Sep 1999 12:15:11 -0000
Message-ID: <19990915121511.63988.qmail@...>
Received: from 209.144.226.180 by www.hotmail.com with HTTP; Wed, 15 Sep 1999 05:15:10 PDT
X-Originating-IP: [209.144.226.180]
From: "Nagamanickam Ganesan"
To: tamil@...
Cc: agathiyar@egroups.com
Date: Wed, 15 Sep 1999 05:15:10 PDT
Mime-Version: 1.0
Subject: [agathiyar] pAlum, theLi thEnum ...
Mime-Version: 1.0
Content-Type: text/plain; format=flowed
Content-Transfer-Encoding: 7bit
X-Yahoo-Message-Num: 2041


பாலும், தெளிதேனும்: தருவது யார்?
-----------------------------------------------

சோழர்கால அவ்வைப் பாட்டி விநாயகரிடம் சங்கத் தமிழ்
வேண்டும் வெண்பா மிகப்புகழ் பெற்றது.

பாலும், தெளிதேனும், பாகும், பருப்பும்இவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீஎனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா.

இப்பாடலின் சிறப்பு என்னவென்றால், குழந்தை உள்ளத்தை
அவ்வை அப்படியே படம் பிடித்துள்ளார். ஒரு சிறுமி தன் நண்பனிடம்
உள்ள பொம்மை ஒன்றைப் பெற வேண்டும் என நினைத்தால்,
"நான் வேறு இரண்டுபொருள்களைத் தருகிறேன்,
நீ ஒன்றைத் தந்தால் போதுமே" என்று பேசி வேண்டியதை அடையும்.

அதே நயத்தை இங்கு படைத்துள்ளார் அவ்வை:
"கணேசா! பால், தேன், பாகு, பருப்பு இவை *நாலும்*
தருகிறேன்; நான் கேட்பது *மூன்று* தானே? நான்கு தருகிறேன்;
முத்தமிழைத் தா!" என்று சாமர்த்தியமாக வாதாடுகிறதாம்.

ஆனால், இந்தக் காலத்தில் தமிழுக்கு மதிப்பில்லை,
மளிகை விலைகள் ஏறியுள்ளது என வாடும் புலவர் ஒருவர்
பாடுவதாக, வெண்பாவை மாற்றிப் பாடிச் சிறு வயதில்
பாராட்டுப் பெற்றிருக்கிறேன்: அவ்வெண்பா இது.

பாலும், தெளிதேனும், பாகும், பருப்பும்இவை
நாலும் கலந்தெனக்கு நல்கிடுவாய் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நான்தந்தேன்
சங்கத் தமிழ்மூன்றும் தான். :-)

(நா. கணேசன்)

வாக்குண்டாம், நல்ல மனமுண்டாம் என்ற பாடலுக்கும்
சித்த வைத்தியப் பொருள் ஒன்று உண்டு. தெரிந்தோர்
எழுதவும்.

வணக்கத்துடன்,
நா. கணேசன்


______________________________________________________