From Wed Sep 15 18:45:26 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 16 Sep 1999 01:48:23 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 6948 invoked from network); 16 Sep 1999 01:48:21 -0000
Received: from relay7.jaring.my (192.228.128.117) by qg.egroups.com with SMTP; 16 Sep 1999 01:48:21 -0000
Received: from jaring.my (j44.byb33.jaring.my [161.142.146.118]) by relay7.jaring.my (8.9.3/8.9.3) with SMTP id JAA14267; Thu, 16 Sep 1999 09:47:53 +0800 (MYT)
Date: Thu, 16 Sep 1999 09:47:53 +0800 (MYT)
Message-Id: <199909160147.JAA14267@...>
X-Sender: subas@...
X-Mailer: Windows Eudora Pro Version 2.1.2
Mime-Version: 1.0
To: Tamil iNaiyam
From: "DrK.Loganathan"
Cc: agathiyar@egroups.com
Subject: [agathiyar] Thaththuvak Kavithai236
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2054

அனப்ர்களே,

என் விழிக்கனவுகளில் சிவபெருமான்நீலசிவனாராக ஆனால் அதே பொழுதுதட்சிணாமூர்த்தி கோலத்தில்
அமர்ந்து ஏதேதோ உபதேசித்தவாறுஇருக்கின்றார். எல்லா சிவமூர்த்தங்களையும் விட மிக உயர்ந்ததாக இந்த
நீலசிவனார் வடிவம் காட்டப்படுகின்றது. இதனை சிந்தித்தவாறு இருந்து அதனால் வெடிக்கும் இன்னும் சில
கருத்துக்களைத் தாங்கி இன்றைய கவிதை.தமிழச் சிந்தனையின் போக்குகளுக்கு வடிவு கொடுத்துவர் நம்
திருவள்ளுவர். அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைப் பண்பும் பயனும் அது வென்றார். அத்தோடு எப்பொருள்
யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றார்.அன்பு அறம் அறிவு என்ற இந்த
மூன்றே வள்ளுவத்தின் மூன்றுத் தூண்கள். இல்லறமாத்திரம் அல்லாது இந்த உலக வாழ்க்கையே இந்த மூன்றையும்
வளர்ப்பதற்குத்தான். ஒன்றை புறக்கணித்துபிறிதொன்றை மாத்திரம் வளர்த்துச்சென்றால், முடிவில்
ஆணவமாலத்தை நீக்கியும் திரோபவத்தைக் கடந்தும் சிவப்பரம்பொருளொடும் ஏனைய உலகத்தோடும்
அன்னியமில்லா அத்துவித நிலையில்நித்தியமாக இருக்கமுடியாது. த்மிழகத்தில் தோன்றிய இருபெரும்
சமயங்களில், திருமாலியம் பிரபத்திஎன்றபெயரில் உணர்வின் வளர்ச்சியை மிகைப்படுத்தி சிந்தித்துத்
தெளிதல் என்பதை குறைபடுத்தி சரணாகதியை வாழ்க்கை முறையை வளர்த்தது. சைவமோ இதற்கு மாறாக
சிந்தனை வாழ்க்கையை மிகைப்படுத்திஅதன் பொருட்டு துறவு வாழ்க்கையும் வற்புறுத்திச் சென்றுள்ளது. இப்படிப்
பட்ட துருவங்களில் விழாது நல்ல பல சித்தர்கள் அன்பு அறிவு அறம் என்ற மூன்றையும் தவராறே வளர்க்கும் ஓர்
வாழ்க்கை நெறியை வாழ்ந்து காட்டி சென்றுள்ளனர். பெரும்பாலான சித்தர்கள் பாடல்களில் திருமாலியம்
சைவம் சாக்தம் என்ற பேதங்களையும் பார்க்க முடியாது. ஏன் சமயபேதங்களையேக்காணமுடியாது. சமயாதீதா
சைவத்தையே அவர்கள் போற்றிச் சென்றுள்ளனர். துறவு வாழ்க்கையும் அவர்கள் வீணாக வற்புறுத்தவிலை. போகர்
கோரக்கர் கொங்கணர் போன்ற பெரும்பெரும் சித்தர்கள் இறுதி காலம் வரைஇல்லறத்திலேயே
இருந்தவர்கள்., அவ்வாறு இருந்துகொண்டேஅழமான பல ஆய்வுகளை ஞான நூற்களாகப்பல எழுதி சென்றவர்கள்.

அன்பு அறம் அறிவு என்ற இந்த மூன்றையும்ஒருங்கே வளர்த்துச் செல்லவேண்டும் என்பதியே இந்த நீலசிவனர் வடிவம்
உணர்த்துவதாகக் கொண்டு இன்றைய கவிதை

அன்பே சிவம், அறிவே வழி உண்மையேப்பொருள் என்று ஓதியே ஓர் பதினைந்துஆண்டுகளுக்கு முன்பே
குழந்தைகளுக்கு சமயபாடங்கள் போதித்து மகிழ்ந்தேன். அதனை மீண்டும் நினைத்துப் பார்க்கின்றேன்.

தத்துவராயன்

236: கார்மேனிச் சிவன்!

தளராத் தறுகண்மையோடு தவறாவரும்
அருளின் அன்பும் அறன் பிழையாமையும்
உண்மையையேப் பேணிப்பேணி
உள்ளதையேக் காணும் உயர் அறிவும்
வணங்கா முடியோடு யாண்டும் வெறி
வழங்கிடாச் சிறப்பும்
உறுதித் தூணாக நிற்கும்போது வேண்டுங்கால்
ஒசிந்து ஒழுகும் பண்பும்
உனக்கென வாழென்று
உள்ளெழுந்து உணர்த்துகின்றான்
செம்மேனிச் சிவன் இன்று
கரிய மாலோடுக் கலந்து
கார்மேனிச் சிவனாய்!

அன்பின் நீலம் அகமெங்கும் படர
திங்களோடு கங்கை சிகையில் தங்க சுத்த
கனக அரவம் கண்டத்தில் தவழ
நெடிது வளர் வைரத் திருசூலத்தில்உடுக்கை
ஒடியாது ஒலிக்கின்றது
புதுப் புது உண்மைகளை
பூரிக்க இவ்வுலகமே!

அண்டமே நிறைந்து நிற்கும்
அழகிய குருமூர்த்தியாய்
அழியா திறத்தின் ஓர் அற்புத
பீடத்தில் அமர்ந்து பெரும்பொருள்உணர்த்த
பார்வதிகளாகப் பலர் பாங்குற
வீழ்ந்த இடத் தாள் விரைந்துப் பற்றி
வினையறுக்கின்றனர் விளையாடி அதனோடு
வேட்கையெல்லாந் தீர்த்து!

இவ்வுலகிற்கு இனி வேண்டியது
அன்போடு பிழையாது யாண்டும்
அறிவையும் அறத்தையும் வளர்க்கும்
அழகுத் தமிழ் சைவம் இனி
அகிலமெல்லாம் பரவும் அதற்கென என்
அடியனாய் அமைந்து
அயராது உழைப்பாய் நீ! என்கின்றான்
எந்தன் அன்பன் அயராது எனை
ஆட்டுவித்தவா ஆடும்
அரியரன்!





------------------------------------------------------------------------------
Please visit Dravidian Philosophy Campus at [
http://members.tripod.com/loga/tindex.htm] New additions at metaphysical
poetry and Cultural Reflections. Also a new section on Islamic Studies.
Bring your friends there too. This is one of the BEST services you can do
for the world.

DrK.Loganathan