From Thu Sep 16 02:58:59 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 16 Sep 1999 10:01:56 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 9619 invoked from network); 16 Sep 1999 10:01:46 -0000
Received: from usm.my (161.142.14.30) by qh.egroups.com with SMTP; 16 Sep 1999 10:01:46 -0000
Received: from kgesu ([161.142.13.141]) by usm.my (8.9.3/8.9.0) with SMTP id RAA47182 for ; Thu, 16 Sep 1999 17:45:47 +0800
Message-Id: <3.0.3.32.19990916180818.0073e588@...>
X-Sender: kgesu@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Thu, 16 Sep 1999 18:08:18 +0800
To: agathiyar@egroups.com
From: "R.Karthigesu"
In-Reply-To: <199909160919.RAA16575@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: [tamil] Thaththuvak Kavithai 233
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2061

At 05:19 PM 16/09/1999 +0800, DrK.Loganathan wrote:
>என்ன ரெ.கா,
>
>இதுகூடவா புரியவில்லை? அதனால் தான்அந்தக் காலத்திருந்து சொல்லிக்கொண்டிருக்கேன், கொஞ்சம் கனவு
>ஆராய்ச்சி பண்ணுங்கோன்னு. "தலையால்நடகிறது" என்பது உள்ளூவமம்(= உள்ளுறை உவமம்).
>உணர்ர்த்தப்படுவடுவது என்னவென்றால் சிந்தனை வாழ்க்கை அதுவும் மெய்யறிவு விசாரணை வாழ்க்கை, அதுவும்
>சிவஞான விசாரணை வாழ்க்கை. இங்கு மூளைப் பகுதிக்கே அதிகம் வேலை என்பதால் தலையாலே
>நடப்பதாகின்றது.



தத்துவராயர் இப்படி "சுர்"ரென்று கோபப்படக் கூடாது. இந்த லோகத்தில் என்னைப்போன்ற
ச ல அபிஷ்டுகளும் இருக்கிறார்கள்.அவர்களுக்கெல்லாம் நீங்கள்தானே பொறுமையாக வழி காட்டிச்
செல்லவேண்டும்!

அப்படியானால் காரைக்காலம்மையாரும்அப்பரும் தலையால் உண்மையில் நடக்கவில்லை. இது ஓர் அடையாளக்
குறிதானோ? இப்படிச் சிந்திக்க ஆரம்பித்தால் பெரிய புராணத்தின் பல அற்புதங்கள் (அப்பர் சுண்ணாம்புக்
காளவாயிலிருந்து மீண்டது, காரைக்காலம்மையார் பேயுருவம் பெற்றது, சிறுத்தொண்டரின் மகன்
உயிர்த்தெழுந்தது) இப்படி உள்ளுவமங்கள் ஆகி விடுமே! அப்படித்தானா? உண்மையில் நடக்காதவையா?

"இங்கு மூளைப் பகுதிக்கே அதிகம் வேலைஎன்பதால் தலையாலே நடப்பதாகின்றது"என்கிறீர்கள்.
அப்படியானால் "மனத்தினால் கடிது சென்று", "காலின் நடையினை" இந்த இரண்டும்
உள்ளுவமம் ஆகத்தானே இருக்க வேண்டும். இவை எதனைக் குறிக்கின்றன, உடலின் எந்தப் பகுதியின்
வேலைகளைக் குறிக்கின்றன என்பதை விளக்கி அருள வேண்டும்.

கனவு ஆராய்ச்சி பண்ணினால் இதெல்லாம்எப்படித் தெளிவாகும் என்பதையும் தயைகூர்ந்து விளக்க வேண்டும்.
அதாவது கனவு ஆராய்ச்சிக்கும் புராணங்களைப் புரிந்து கொள்வதற்கும் ஏதோ தொடர்பு இருப்பதாகச்
சொல்கிறீர்கள். மர மண்டைக்குத் தெரிய மாட்டேன் என்கிறது.

தெளிவு பெற விரும்பும்

ரெ.கா.


>>>வடதிசை தேசம் எல்லாம் மனத்தினால்கடிது சென்று
>>>தொடை யவிழ் இதழி மாலைச் சூலபாணியனார் நிலவும்
>>>படரொளிக் கயிலை வெற்பின் பாங்கணைந்து காலின்
>>>நடையினைத் தவிர்த்து பார்மேல் தலையினால் நடந்து சென்றார்.
>