From Thu Sep 16 05:29:04 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 16 Sep 1999 12:32:01 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 32120 invoked from network); 16 Sep 1999 12:31:57 -0000
Received: from relay7.jaring.my (192.228.128.117) by qh.egroups.com with SMTP; 16 Sep 1999 12:31:57 -0000
Received: from jaring.my (j20.byb34.jaring.my [161.142.146.34]) by relay7.jaring.my (8.9.3/8.9.3) with SMTP id UAA07604; Thu, 16 Sep 1999 20:31:53 +0800 (MYT)
Date: Thu, 16 Sep 1999 20:31:53 +0800 (MYT)
Message-Id: <199909161231.UAA07604@...>
X-Sender: subas@...
X-Mailer: Windows Eudora Pro Version 2.1.2
Mime-Version: 1.0
To: agathiyar@egroups.com
From: "DrK.Loganathan"
Cc: Tamil iNaiyam
Subject: [agathiyar] Re: [tamil] Thaththuvak Kavithai 233
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2068

அன்புள்ள ரெ.கா'

ஓர் நிம்மதி பெருமூச்சு. நீங்கள் குறிப்பிடும் சில பெரிய புராண விசயங்கள்உள்ளுவங்கள் தாம்.
கனாவியலோடு தொடர்புடையது. பெரும்பாலான புராணங்களும் உள்ளுவம்தான். இதைப்பற்றி விரிவாக எழுத
திட்டமிட்டுள்ளேன். ஆனால் இப்பொழுதுஇசுலாத்திற்கும் சைவத்திற்குமிடையேஉள்ள ஒற்றுமை வேற்றுமைகளைப்
புரிந்து கொள்ள தலையாலே நடந்துகொண்டிருக்கின்றேன். அதே கண்ணுங் கருத்துமாகஇருந்தால்தான் என்னால்
ஆழமான நுழைவுகளைப் பெற முடிகின்றது.நல்லக் கட்டுரைகளகவும் எழுத முடிகின்றது.அந்த நடை முடிந்ததும் இந்த
நடைக்கு வருகின்றேன். அதற்கிடையே நான் டாகடர் கண்ணனொடு நடத்திய உருவகம் உள்ளுவமம் பற்றிய
உறழ்கலியை வளாகத்திலும் கனாவியல்தொடர்பான பல கட்டுரைகளை ஆகம உளவியல் வளாகத்திலும் படித்து
வாருங்கள். உள்ளுவமச் சிந்தனை (metaphoricalthinking) தமிழப் பண்பாட்டில் மிக அடிப்படையானது.
Metaphysical Thinking எனப்படும் மெய்யறிவுச் சிந்தனைக்கு மூலமானது. சற்று பொறுமையாகஇருக்கவும்.

லோகா


At 06:08 PM 16-09-99 +0800, you wrote:
>At 05:19 PM 16/09/1999 +0800, DrK.Loganathan wrote:
>>என்ன ரெ.கா,
>>
>>இதுகூடவா புரியவில்லை? அதனால் தான்அந்தக் காலத்திருந்து சொல்லிக்கொண்டிருக்கேன், கொஞ்சம் கனவு
>>ஆராய்ச்சி பண்ணுங்கோன்னு. "தலையால்நடகிறது" என்பது உள்ளூவமம்(= உள்ளுறை உவமம்).
>>உணர்ர்த்தப்படுவடுவது என்னவென்றால் சிந்தனை வாழ்க்கை அதுவும் மெய்யறிவு விசாரணை வாழ்க்கை, அதுவும்
>>சிவஞான விசாரணை வாழ்க்கை. இங்குமூளைப் பகுதிக்கே அதிகம் வேலை என்பதால் தலையாலே
>>நடப்பதாகின்றது.
>
>
>
>தத்துவராயர் இப்படி "சுர்"ரென்று கோபப்படக் கூடாது. இந்த லோகத்தில் என்னைப்போன்ற
>ச ல அபிஷ்டுகளும் இருக்கிறார்கள்.அவர்களுக்கெல்லாம் நீங்கள்தானே பொறுமையாக வழி காட்டிச்
>செல்லவேண்டும்!
>
>அப்படியானால் காரைக்காலம்மையாரும்அப்பரும் தலையால் உண்மையில் நடக்கவில்லை. இது ஓர் அடையாளக்
>குறிதானோ? இப்படிச் சிந்திக்க ஆரம்பித்தால் பெரிய புராணத்தின் பல அற்புதங்கள் (அப்பர் சுண்ணாம்புக்
>காளவாயிலிருந்து மீண்டது, காரைக்காலம்மையார் பேயுருவம் பெற்றது, சிறுத்தொண்டரின் மகன்
>உயிர்த்தெழுந்தது) இப்படி உள்ளுவமங்கள்ஆகி விடுமே! அப்படித்தானா? உண்மையில் நடக்காதவையா?
>
>"இங்கு மூளைப் பகுதிக்கே அதிகம் வேலைஎன்பதால் தலையாலே நடப்பதாகின்றது"என்கிறீர்கள்.
>அப்படியானால் "மனத்தினால் கடிது சென்று", "காலின் நடையினை" இந்த இரண்டும்
>உள்ளுவமம் ஆகத்தானே இருக்க வேண்டும். இவை எதனைக் குறிக்கின்றன, உடலின் எந்தப் பகுதியின்
>வேலைகளைக் குறிக்கின்றன என்பதை விளக்கி அருள வேண்டும்.
>
>கனவு ஆராய்ச்சி பண்ணினால் இதெல்லாம்எப்படித் தெளிவாகும் என்பதையும் தயைகூர்ந்து விளக்க வேண்டும்.
>அதாவது கனவு ஆராய்ச்சிக்கும் புராணங்களைப் புரிந்து கொள்வதற்கும் ஏதோ தொடர்பு இருப்பதாகச்
>சொல்கிறீர்கள். மர மண்டைக்குத் தெரிய மாட்டேன் என்கிறது.
>
>தெளிவு பெற விரும்பும்
>
>ரெ.கா.
>
>
>>>>வடதிசை தேசம் எல்லாம் மனத்தினால்கடிது சென்று
>>>>தொடை யவிழ் இதழி மாலைச் சூலபாணியனார் நிலவும்
>>>>படரொளிக் கயிலை வெற்பின் பாங்கணைந்து காலின்
>>>>நடையினைத் தவிர்த்து பார்மேல் தலையினால் நடந்து சென்றார்.
>>
>
>------------------------------------------------------------------------
>
>eGroups.com home: http://www.egroups.com/group/agathiyar
>http://www.egroups.com - Simplifying group communications
>
>
>
>
>
>


------------------------------------------------------------------------------
Please visit Dravidian Philosophy Campus at [
http://members.tripod.com/loga/tindex.htm] New additions at metaphysical
poetry and Cultural Reflections. Also a new section on Islamic Studies.
Bring your friends there too. This is one of the BEST services you can do
for the world.

DrK.Loganathan