From Thu Sep 16 18:42:11 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.255); by m5; 17 Sep 1999 01:45:07 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 27450 invoked from network); 17 Sep 1999 01:45:03 -0000
Received: from relay7.jaring.my (192.228.128.117) by qg.egroups.com with SMTP; 17 Sep 1999 01:45:03 -0000
Received: from jaring.my (j4.glg87.jaring.my [161.142.207.78]) by relay7.jaring.my (8.9.3/8.9.3) with SMTP id JAA12312; Fri, 17 Sep 1999 09:44:56 +0800 (MYT)
Date: Fri, 17 Sep 1999 09:44:56 +0800 (MYT)
Message-Id: <199909170144.JAA12312@...>
X-Sender: subas@...
X-Mailer: Windows Eudora Pro Version 2.1.2
Mime-Version: 1.0
To: Tamil iNaiyam
From: "DrK.Loganathan"
Cc: agathiyar@egroups.com
Subject: [agathiyar] Thaththuvak Kavithai 237
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2085

அன்பர்களே,

மானிட இயல்பு தான் காண்கின்ற அனைத்திலும் ஓர் இலக்கணத்தைக் கண்டு அதன் வழி அதன் அடையாளம்
இன்னதென்று தெளிந்து இந்த சாதிக்குரியது இது
என்று நிறுத்தி அமைதி அடைகின்றது. பகுத்து வகுத்து இலக்கணங் கண்டு ஓர் பிரிவிற்குள் அடக்கவேண்டும்.
இருக்கின்ற பிரிவுகள் காலப்போக்கில் சற்று நிலைத்து நிற்க, அவையே மரபாகி விடுகின்றன, வலுவான
சாதிப்பிரிவுகள் ஆகின்றன. இந்த சமயத்தில் இலக்கணிகள் என்று சிலர் வந்துமரபினைக் காக்கும்
வீரர்களாகி புதியதாக மலருகின்றவற்றை இலக்கண விதிகளுக்கு அப்பாற்பட்டதென்று நவின்று புதுமைகளை
படைப்பானை அவமானப்படுத்தி விரட்டிஅடிக்கின்றனர். அதிலே அவர்களுக்கு ஓர்இன்பம். முன்பு ஓர் நல்ல நூல்
இத்தகைய காரணங்களால் அரங்கேற்றங்காணாது போனதும் உண்டு. எல்லாவற்றிற்கும் இதுதான் இலக்கணம் என்று கூற
வருமா? Wittgenstein என்ற ஆங்கிலேயே தத்துவஞானி games என்ற சொல்லை எடுத்துக்கொண்டு அந்த
சொல்லிற்கு எல்லாச் சூழ்நிலையிலும்மாறாதிருக்கும்படியான ஒரு பொருள் இல்லை என்று காட்டி, சொற்பொருள்
என்பதை Family Resemblace, ஒற்றுமை நயமே, என்றவகையில் காணவேண்டும் என்று நவின்று
சென்றுள்ளார். அவ் வகையில் இந்த புதுக்கவிதையும் அதனால் 'கவிதை' என்ற சொல்லின் பொருளும். இறைவன்
எனப்படும் பரம்பொருளின் இலக்கணக்கூறுகளும் இப்படித்தான். ஓர் ஒற்றுமை நயத்தோடு ஆனால் அதேப் பொழுது
மாறிக்கொண்டே வரும் பண்பினதாய் எனக்குப் படுகின்றது. அதன் வழி மாறாப் பண்பினன் தானென்று
உணர்த்துவதாகவும் படுகின்றது. இதன் அடிப்படையில் இன்றையக் கவிதை.

தத்துவராயன்


237: புதுக் கவிதைப் பெம்மான்!

இலக்கணம் இல்லையென் றல்லதாய்
இருக்கினும் இன்னதென்று
அளந்து நிறுத்த அரியதாய்
புதுவகை அணிகளோடு
பூத்து பூத்து மலரும் புதுக் கவிதைகளில்
புகுந்து புகுந்து விளையாடும் பெம்மானே
பூரித்து பூரித்து மகிழ்கின்றேன் உன்
புதுமைகளை எண்ணி எண்ணி !

யாண்டும் ஒரு படித்தாய் இருக்கும் நீ
அதனை அறிவிக்க
யாதும் உலகில் நிரந்தரமாய் நில்லாது நிற்க
இலக்கணமாய் வடித்து பின் அதனை அழித்து
இன்னொன்றைக் காட்டி
இலக்கண வேடர்களின் எறிகணைகள்தப்புமா
இலக்கண பெயர்ப்புகளை இசைவிக்கின்றவா
இன்று
புதுக் கவிதைகளில் பொலிகின்றவா! உன்
சாதுரியங் கண்டு நான் என்
சாதுரியம் விட்டேன்! உனை
சரண் அடைந்தேன்!

மாறிக் கொண்டே வரும் வரலாற்றில்
மாட்டிக் கொண்டு என் அறிவு
மாறிக் கொண்டேச் செல்ல நீதானே
வசித்துப் பிடித்திழுத்து வழக்காற்று
மரபுச் சிறைக் கட்டவிழ்த்து
வாழும்படி செய்கின்றாய் என்றும்
மாறாவுன் திருவடி நிழலில்!

மாறி வரும் பூதிகள் ஊடே என்றும்
மாறாவரும் பூதியாய் மன்னாவுன்
மன்றுளாட்டமே சிறக்கின்றது
ஓடிச் செல்லும் பூதிகள் ஊடே
ஓடாத பெரும் பூதியாய்
உன்னோடு கூடிய ஒருமையே
இருக்கின்றது!

இலக்கணம் உடைத்தாய் ஆயினும்
இன்னதென்று கூறவாராததாய்
எழுகின்ற புதுக் கவிதைகளில் உன்னை
ஏத்தி ஏத்தித் தொழுவேன் என்றும்
ஓர் படித்தாய் இல்லாதவுன்
ஏற்றமிகு திருத்தாண்டவத்திற்கு
ஏற்புடை வடிவம்
அதுவே என்று!






------------------------------------------------------------------------------
Please visit Dravidian Philosophy Campus at [
http://members.tripod.com/loga/tindex.htm] New additions at metaphysical
poetry and Cultural Reflections. Also a new section on Islamic Studies.
Bring your friends there too. This is one of the BEST services you can do
for the world.

DrK.Loganathan