From Thu Sep 16 23:55:14 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.259); by m5; 17 Sep 1999 06:58:11 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 11271 invoked from network); 17 Sep 1999 06:58:09 -0000
Received: from dfw-ix8.ix.netcom.com (206.214.98.8) by qh.egroups.com with SMTP; 17 Sep 1999 06:58:09 -0000
Received: (from smap@localhost) by dfw-ix8.ix.netcom.com (8.8.4/8.8.4) id BAA06112 for ; Fri, 17 Sep 1999 01:58:07 -0500 (CDT)
Received: from sji-ca13-111.ix.netcom.com(209.109.238.111) by dfw-ix8.ix.netcom.com via smap (V1.3) id rma006100; Fri Sep 17 01:57:41 1999
Message-ID: <01a301bf00d9$8beafe40$6fee6dd1@namakkal>
From: "Mani M. Manivannan"
To:
Date: Thu, 16 Sep 1999 23:54:52 -0700
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3612.1700
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3612.1700
Subject: [agathiyar] Re: Thaththuvak Kavithai 237
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2087

மதிப்பிற்குரிய பேராசிரியர் உலோகநாதன் அவர்களுக்கு,

நீங்கள் எழுதினீர்கள்:

> மானிட இயல்பு தான் காண்கின்ற அனைத்திலும் ஓர் இலக்கணத்தைக் கண்டு
> அதன் வழி அதன் அடையாளம் இன்னதென்று தெளிந்து இந்த சாதிக்குரியது
> இது என்று நிறுத்தி அமைதி அடைகின்றது. பகுத்து வகுத்து இலக்கணங் கண்டு
> ஓர் பிரிவிற்குள் அடக்கவேண்டும். இருக்கின்ற பிரிவுகள் காலப்போக்கில் சற்று
> நிலைத்து நிற்க, அவையே மரபாகி விடுகின்றன, வலுவான சாதிப்பிரிவுகள்
> ஆகின்றன. இந்த சமயத்தில் இலக்கணிகள் என்று சிலர் வந்து மரபினைக் காக்கும்
> வீரர்களாகி புதியதாக மலருகின்றவற்றை இலக்கண விதிகளுக்கு அப்பாற்பட்டதென்று
> நவின்று புதுமைகளை படைப்பானை அவமானப்படுத்தி விரட்டி அடிக்கின்றனர்.
> அதிலே அவர்களுக்கு ஓர் இன்பம்.

உங்கள் கடிதத்தில் இலக்கணத்தையும், "இலக்கணி" வீரர்களையும் கடிந்து
எழுதி இருக்கிறீர்கள். எப்படியோ அதில் சாதிகளையும் சாடியிருக்கிறீர்கள்!
உங்கள் "அருட்குறள்" தொகுப்பு குறள் வெண்பா இலக்கண விதிகளுக்கு
அப்பாற்பட்டது என்று எழுதியவர்களை மட்டும் குறிப்பிட்டால் பரவாயில்லை!
ஆனால், இதில் தொல்காப்பியரையும், நக்கீரரையும் கூட நையாண்டி
செய்கிறீர்கள் போலத் தோன்றுகிறது. முக்கண்ணனின் பாடலிலேயே
சொற்குற்றமும் பொருட்குற்றமும் காணத்தலைப்படும் தமிழ் மரபுக்கு
இதெல்லாம் இயற்கைதான்.

உங்கள் கவிதைகளில் சொற்பிழை, பொருட்குற்றம், இலக்கண மயக்கங்கள்
கண்டுபிடிப்பவர்கள் எல்லாம் உங்கள் புதுமைகளை எதிர்த்து உங்களை
அவமானப்படுத்தி விரட்டி அடித்து இன்பம் காண்பவர்கள் என்று
குற்றம் சாட்டிவிட்டீர்கள்! நான் முன்பொருமுறை எழுதியிருந்ததுபோல்,
உங்கள் ஈரடிச் செய்யுளை 'குறள்' என்று மரபுப்போர்வை போர்த்த
முயற்சிக்காமல் இருந்திருந்தீர்கள் என்றால் எவரும் அவற்றிலிருந்த
இலக்கணப் பிழைகளைச் சுட்டிக் காட்டி இருக்க மாட்டார்கள்.

அதே போல் தாங்கள் தற்போது எழுதிவரும் தத்துவக்கவிதைத்
தொடரையும், 'பரணி' என்ற மரபுக்கவிதை வகையில் வந்தது
என்று கூறாமல் இருந்தீர்கள் என்றால், இதிலும் யாரும்
இலக்கணப் பிழை கண்டு பிடிக்க மாட்டார்கள். பெரும்பாலும்
உங்கள் கடிதங்களில் எழுத்துப் பிழைகளும் இலக்கணப் பிழைகளும்
மலிந்திருக்கின்றன. அவை "சுமேரியத்தமிழ்" சொல்லாராய்ச்சியாளரான
உங்கள் கண்களுக்கு எப்படியோ தப்பியிருக்க வேண்டும்.

நீங்கள் எழுதுவது கவிதையா இல்லையா என்று எவரும் கேட்டதில்லை.
நீங்கள் எழுதுவது புதுக்கவிதைதான் என்று திட்டவட்டமாக அறிவித்து
விட்டிருந்தீர்கள் என்றால், அவற்றில் இலக்கணப்பிழை சுட்டிக்காட்ட
எவருமே முனைந்திருக்க மாட்டார்கள். ஆனால் குறைந்தது ஈராயிரத்து
ஐந்நூறு ஆண்டுகளாக பல்லாயிரக்கணக்கான புலவர்கள் எந்த இலக்கணக்
கோட்பாடுகளைக் கடைப்பிடித்து மரபுக்கவிதைகளை உருவாக்கினார்களோ
அவற்றை அரைகுறையாகக் கடைப்பிடித்து நீங்கள் படைப்பனவற்றை
ஏன் மரபுக்கவிதை என்று சொல்லிக் கொள்ளவேண்டும்? பிறகு ஏன்
அவற்றில் பிழைகாணுபவர்களைக் கடிந்தெழுத வேண்டும்?

எப்போதும் சுட்டிக்காட்டிய குறைகளைக் களையத் தயாராய் இருக்கிறேன்
என்று பறைசாற்றும் நீங்கள் ஏன் இதை அவமானமாய்க் கருதவேண்டும்?

அன்புடன்,

"இலக்கணி" மணி மு. மணிவண்ணன்
நூவர்க், கலி., அ.கூ.நா.