From Balachandran Ramakrishnan%TECHNIP-MALAYSIA@... Fri Sep 17 02:49:58 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
X-eGroups-Approved-By: agathiyar@... via web
Received: (listserv 1.259); by mz; 17 Sep 1999 09:52:56 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 25984 invoked from network); 17 Sep 1999 09:23:22 -0000
Received: from mailhost.technip.fr (195.25.43.193) by qg.egroups.com with SMTP; 17 Sep 1999 09:23:22 -0000
Received: from mailhost.technip.com (unverified) by mailhost.technip.fr (Content Technologies SMTPRS 2.0.15) with SMTP id for ; Fri, 17 Sep 1999 11:29:27 +0200
Received: by mailhost.technip.com(Lotus SMTP MTA v1.2 (600.1 3-26-1998)) id C12567EF.0033BEE0 ; Fri, 17 Sep 1999 11:25:11 +0200
X-Lotus-FromDomain: TECHNIP-MALAYSIA@TECHNIP-EXT
From: Balachandran Ramakrishnan%TECHNIP-MALAYSIA@...
To: agathiyar@egroups.com
Message-Id: <482567EF.00336311.00@...>
Date: Fri, 17 Sep 1999 17:24:24 +0800
MIME-Version: 1.0
Content-Disposition: inline
Subject: [agathiyar] Herodotus- Father of History
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2090

அன்புள்ள அக்த்தியர்களுக்கு,

நான் கீழே கூறியிருக்கும் தகவல் அகத்தியத்தின் குறிக்கோளில் இருந்துசற்று
மாருபட்டு இருந்தாலும் வரலாற்றுடன் தொடர்பு இருப்பதால் இங்கே எழுத
விழைந்துள்ளேன். இந்திய வரலாற்றினை பற்றி நமக்கு சரியான தகவல் கிடைக்காதது
இவரைப் போன்று நம் முன்னோர்கள் நினைக்காததுதான் காரணமோ?

?ரோடாட? என்ற கிரேக்க ஆசிரியர் "வரலாற்றின் தந்தை" என அழைக்கப்படுபவர்.
இவர் எழுதிய கிரேக்க-பாரசீகப்போர்கள் பற்றிய குறிப்புக்கள் பண்டைய உலகின்
மாபெரும் சரித்திர நூலாக விளங்குகின்றது. இவர் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில்
வாழ்ந்திருக்கலாம் என்று கணிக்கப் பட்டு இருக்கிறது. ரோமப் பேரரசின் காலத்தில்
தோன்றிய சுதா என்ற நிகண்டில் இவரைப் பற்றிய சிரு குறிப்பு காணப்படுகிறது. இவர்
அனடோலியா என்று அழைக்கப்பட்ட தற்கால ஆசியா மைனர் எனும் பகுதியில் இருந்த
?லிகார்னச? என்ற ஊரில் பிறந்தார்என்று கூறப்படுகிறது. அவர் பின்னர் அந்நாட்டில்
கொடுங்கோலாட்சி செய்துவந்த லைகடமி? என்பவரால் நாடு கடத்தப் பட்டார். நாடு
கடந்து அவர் ஏதன்சு நகரில் குடியேரினார்.

அவர் குடியேரிய காலத்தில் பாரசீக படையெடுப்பிற்குப் பிறகு ஏதன்சு நகரம் மீண்டும்
புதுப்பித்துக் கட்டப்பட்டது. இதுவே கிரேக்கத்தின் பொற்காலத் தொடக்கம் என்று
வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவர். இந்தப் பொற்காலத்தில் தான் புகழ் பெற்ற நாடக
ஆசிரியர்களான சோஃபோகிள்?,ஏ?சில? போன்றோரும் மெய்ப்பொருள்அறிஞரான
சாக்ரடீ?, பிளாட்டோ, அரி?டாடல்ஆகியோர் வாழ்ந்திருந்தனர். இதே காலத்தில் தான்
" மருத்துவத்தின் தந்தை" (ஆங்கில மருத்துவம்) என்று அழைக்கப்பட்ட மருத்துவ மேதை
?ப்போகிரேட்? வாழ்ந்திருந்தார்.

?ரோடாடசுக்கு முன்னமே பல வரலாற்று ஆசிரியர்கள் இருந்தாலும் அவர்கள்எழுதிய
நிகழ்ச்சிகள் அக்காலத்தைய பிற காவியங்களைப் போன்ற நடையில் எழுதப் பட்டு
இருந்தது. அவற்றில் நகரங்கள் அமைக்கப்பட்ட செய்திகள், மக்களின் பழக்க வழக்கங்கள்
சமூக அமைப்புகள் போன்ற குறிப்புக்களே இருந்தன. அவற்றிலும் கூட நிகழ்ச்சிகளுக்கும்
கருத்துக்களுக்கும் இடையே உள்ள தொடர்புகள் ஆழமாகக் குறிப்பிடப்படவில்லை.
?ரோடாட?தான் வரலாற்றுப் போக்கின் ஆழ்ந்த முக்கியத்தைச் சீரான முறையில்
விளக்கிக் கூறும் பணியை மேற்க்கொண்டார். ?ரோடாட? பலவகையில் ஆராய்ந்து
தான் கண்ட முடிவுகளை தொகுத்து வழங்கினார். தன் ஆராய்ச்சிக்கு சான்றுகள் தேடும்
வகையில் அவர் எகிப்து, அரேபியா, பாரசீகம் போன்ற நாடுகளுக்கு பயணங்கள்
மேற்கொண்டார், இதில் சிறப்பு என்னவென்றால் அக்காலத்திய கிரேக்கர்கள் மத்திய
தரைக்கடல் (MEDITTERENIAN SEA) பகுதியை விட்டு பெரும்பாலும் வெளியே
சென்றதில்லை.

தான் கண்டறிந்த செய்திகளை கி.மு. 443ம் ஆண்டு எழுதத் தொடங்கினார். அவர், முதலில்
பாரசீக வரலாற்றையே எழுத எண்ணியிருந்தாலும் பிறகு கிரேக்க-பாரசீகப் போர்களைப் பற்றி
எழுத முடிவு செய்தார். வரலாற்றுக் குறிப்புகளை எழுதிய அதே சமயத்தில் அக்காலத்திய
?பெயின் தொடங்கி ஆப்பிரிக்க வடகரை வரையிலான மத்திய தரைக் கடல் பகுதி நிலங்கள்
பற்றிய விவரங்களையும் எழுதியிருக்கிறார் (இவருக்கு முன்பே அனாக்சிமேண்டர் என்ற
கிரேக்க நிலநூல் வல்லுனர் கி.மு. 6ம்நூற்றாண்டிலேயே நிலவரைபடங்களை தயாரித்து
இருக்கிறார் ). இவருக்குப் பின் பல புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர்கள் இருந்தாலும் இவரைப்
போன்று நடுநிலையாகவும் நகைச்சுவை உணர்வுடனும் எழுதவில்லை என்று அறிஞர்கள்
கருதுகின்றனர். கி.மு. 6ம் நூற்றாண்டுக்குப் பின் இருந்த கிரேக்க அரசர்கள் பற்றிய தகவல்கள்
பெரும்பாலும் இவருடைய குறிப்புக்களில் இருந்துதான் அறிந்து கொள்ளப்பட்டது. அவருடைய
பெருமைகளைக் கூறுகின்ற அதே நேரத்தில் அவர் குறிப்புகளில் இருக்கும் மாருபட்ட, ஏற்க
முடியாத கருத்துக்கள் இருப்பதையும் இங்கே எடுத்துக்காட்டவேண்டும். உதாரணமாக..
நைல் நதி ஆப்ரிக்காவின் வடமேற்குக் கரையில் அமைந்துள்ள அட்லா? மலைத்தொடரிலிருந்து
எகிப்தில் ஓடுகிறது என்ற கூற்று பிற்கால நிலநூல் ஆய்வாளர்களிடம் குழப்பத்தை எற்படுத்தியது
(நைல் நதி கிழக்கு ஆப்ரிக்காவில்தொடங்கி எகிப்து வழியே மத்திய தரைக் கடலில்
கலக்கிறது). இதே போல இன்னும் பலகூற்றுக்கள் எற்றுக்கொள்ளக் கூடிய வகையில் இல்லை.

அவர் தான் வாழ்ந்த எதென்?யோ மற்ற கிரேக்க பகுதி வரலாற்றை மட்டுமேஎழுதாமல்
கிரேக்கம் முழுமையையும் பற்றி எழுதினார். இதனால் அவர் கிரேக்கத்தில்பிறக்கவில்லை என்றாலும்
அவரை எல்லோரும் கிரேக்கர் என்றே போற்றிவந்தனர். இவர் தன் குறிப்புகளை அயோனிய
மொழியில்
எழுதினார் (அயோனியர் என்பவரைபண்டைய தமிழர் யவனர் என்று அழைத்தனர்). அவர் பிறகு
புதிதாக
தோற்றுவிக்கப் பட்ட நகரமான தூரை என்றவிடத்தில் குடியேறினார், அங்குகி.மு. 425ம் ஆண்டில்
இறந்ததாகக் கருதப்படுகிறது.

நேரம் கிடைக்கும் பொழுது அவர் எழுதியவற்றில் இருந்து சில குறிப்புகளைத் தர எண்ணியுள்ளேன்.

அன்பன்
பாலச்சந்திரன்