From Fri Sep 17 02:56:06 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.259); by m5; 17 Sep 1999 09:59:03 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 6525 invoked from network); 17 Sep 1999 09:59:00 -0000
Received: from relay7.jaring.my (192.228.128.117) by qg.egroups.com with SMTP; 17 Sep 1999 09:59:00 -0000
Received: from jaring.my (j37.glg83.jaring.my [161.142.208.111]) by relay7.jaring.my (8.9.3/8.9.3) with SMTP id RAA25826; Fri, 17 Sep 1999 17:58:55 +0800 (MYT)
Date: Fri, 17 Sep 1999 17:58:55 +0800 (MYT)
Message-Id: <199909170958.RAA25826@...>
X-Sender: subas@...
X-Mailer: Windows Eudora Pro Version 2.1.2
Mime-Version: 1.0
To: agathiyar@egroups.com
From: "DrK.Loganathan"
Cc: Tamil iNaiyam
Subject: [agathiyar] Re: Thaththuvak Kavithai 237
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2091

அன்புள்ள மணிவண்ணன்

நான் சொல்ல வந்த விசயம் வேறு அதாவது பகுத்து வகுத்து பிரித்து தொகுத்து சாதிவழி கணித்து(
classification , categorisation) செல்லும் பண்பு எல்லாமானிடர்களது இயற்கையாக இருக்க,
சில இடங்களில் அது முடியாது போய் அறிவினை ஓர் திகைப்பில் வீழ்த்துகின்றது. ஓர் indeterminacy
, இன்னது இது என்று நிச்சயித்து கூறமுடியாது போகின்றது, அறிவிற்கு ஓர் முட்டுக் கட்டை வந்து விடுகின்றது.
Heisenberg's indeterminacy principle போன்று என்றுவைத்துக்கொள்ளுங்களேன். ஒளி
அணுத்திரளா? (photons) அல்லது அலைவட்டமா?(waves) என்னும் போது ஓர் உறுதியோடு கூறமுடியாது
அறிவு இடர்படுவதை பாருங்கள். இப்படிப்பட்ட சிந்தையிலே தான் இப்பொழுது Nihilismஎனும் கோட்பாடு
ஐரோப்பிய மக்களிடையே வலுப்பெற்று வருகின்றது. இவையெல்லாம் ஓடும் பூதிகள். இத்தகைய ஓடும் பூதிகளைக்
கண்டுக் கண்டு திகைத்து இது இத்தகையஇலக்கணத்தோடு இருப்பது இது என்றவாறுசிந்திக்கும் போக்குக் கழன்று
ஓடா பூதியில் அகப்பட்டு அதன் வழி இலக்கணச் சிந்தைக் கெட்டு ஒருமை உணர்வில்விழுந்து உயிர் ஓர்
உறுதியைக் காண்கின்றது. இதுதான் நான்சொல்ல வந்த விசயம். மற்றப்படி எழுத்துப் பிழைகள் சொற்பிழைகள்
போன்றவை இரூக்கின்றன என்பதையும் அவர்றை நானே பல விடங்களில் செய்கின்றேன் என்பதையும், கண்களில்
படும்போதெல்லாம் திருத்திக் கொண்டும் வருகின்றேன் என்பதையும் மறுக்கவில்லை. Wittgenstein என்பார்
பரிந்துரைத்த family resembalance view of meaning எனக்கு பிடித்த ஒன்று. அதனையும்
வற்புறுத்தியவாறு இக்கவிதை.

இக்கவிதை தமிழ் இணையத்திலும் வந்திருப்பதால், இந்த பதிலை அங்கும் அனுப்பிவைக்கின்றேன்.


அன்பன் கி.லோகநாதன்


At 11:54 PM 16-09-99 -0700, you wrote:
>மதிப்பிற்குரிய பேராசிரியர் உலோகநாதன் அவர்களுக்கு,
>
>நீங்கள் எழுதினீர்கள்:
>
>> மானிட இயல்பு தான் காண்கின்ற அனைத்திலும் ஓர் இலக்கணத்தைக் கண்டு
>> அதன் வழி அதன் அடையாளம் இன்னதென்றுதெளிந்து இந்த சாதிக்குரியது
>> இது என்று நிறுத்தி அமைதி அடைகின்றது. பகுத்து வகுத்து இலக்கணங் கண்டு
>> ஓர் பிரிவிற்குள் அடக்கவேண்டும். இருக்கின்ற பிரிவுகள் காலப்போக்கில் சற்று
>> நிலைத்து நிற்க, அவையே மரபாகிவிடுகின்றன, வலுவான சாதிப்பிரிவுகள்
>> ஆகின்றன. இந்த சமயத்தில் இலக்கணிகள் என்று சிலர் வந்து மரபினைக் காக்கும்
>> வீரர்களாகி புதியதாக மலருகின்றவற்றை இலக்கண விதிகளுக்கு அப்பாற்பட்டதென்று
>> நவின்று புதுமைகளை படைப்பானைஅவமானப்படுத்தி விரட்டி அடிக்கின்றனர்.
>> அதிலே அவர்களுக்கு ஓர் இன்பம்.
>
>உங்கள் கடிதத்தில் இலக்கணத்தையும், "இலக்கணி" வீரர்களையும் கடிந்து
>எழுதி இருக்கிறீர்கள். எப்படியோ அதில் சாதிகளையும் சாடியிருக்கிறீர்கள்!
>உங்கள் "அருட்குறள்" தொகுப்பு குறள் வெண்பா இலக்கண விதிகளுக்கு
>அப்பாற்பட்டது என்று எழுதியவர்களை மட்டும் குறிப்பிட்டால் பரவாயில்லை!
>ஆனால், இதில் தொல்காப்பியரையும்,நக்கீரரையும் கூட நையாண்டி
>செய்கிறீர்கள் போலத் தோன்றுகிறது.முக்கண்ணனின் பாடலிலேயே
>சொற்குற்றமும் பொருட்குற்றமும் காணத்தலைப்படும் தமிழ் மரபுக்கு
>இதெல்லாம் இயற்கைதான்.
>
>உங்கள் கவிதைகளில் சொற்பிழை,பொருட்குற்றம், இலக்கண மயக்கங்கள்
>கண்டுபிடிப்பவர்கள் எல்லாம் உங்கள் புதுமைகளை எதிர்த்து உங்களை
>அவமானப்படுத்தி விரட்டி அடித்து இன்பம்காண்பவர்கள் என்று
>குற்றம் சாட்டிவிட்டீர்கள்! நான் முன்பொருமுறை எழுதியிருந்ததுபோல்,
>உங்கள் ஈரடிச் செய்யுளை 'குறள்' என்றுமரபுப்போர்வை போர்த்த
>முயற்சிக்காமல் இருந்திருந்தீர்கள் என்றால் எவரும் அவற்றிலிருந்த
>இலக்கணப் பிழைகளைச் சுட்டிக் காட்டி இருக்க மாட்டார்கள்.
>
>அதே போல் தாங்கள் தற்போது எழுதிவரும் தத்துவக்கவிதைத்
>தொடரையும், 'பரணி' என்ற மரபுக்கவிதை வகையில் வந்தது
>என்று கூறாமல் இருந்தீர்கள் என்றால், இதிலும் யாரும்
>இலக்கணப் பிழை கண்டு பிடிக்க மாட்டார்கள். பெரும்பாலும்
>உங்கள் கடிதங்களில் எழுத்துப் பிழைகளும்இலக்கணப் பிழைகளும்
>மலிந்திருக்கின்றன. அவை "சுமேரியத்தமிழ்" சொல்லாராய்ச்சியாளரான
>உங்கள் கண்களுக்கு எப்படியோ தப்பியிருக்க வேண்டும்.
>
>நீங்கள் எழுதுவது கவிதையா இல்லையாஎன்று எவரும் கேட்டதில்லை.
>நீங்கள் எழுதுவது புதுக்கவிதைதான் என்றுதிட்டவட்டமாக அறிவித்து
>விட்டிருந்தீர்கள் என்றால், அவற்றில்இலக்கணப்பிழை சுட்டிக்காட்ட
>எவருமே முனைந்திருக்க மாட்டார்கள். ஆனால் குறைந்தது ஈராயிரத்து
>ஐந்நூறு ஆண்டுகளாக பல்லாயிரக்கணக்கான புலவர்கள் எந்த இலக்கணக்
>கோட்பாடுகளைக் கடைப்பிடித்து மரபுக்கவிதைகளை உருவாக்கினார்களோ
>அவற்றை அரைகுறையாகக் கடைப்பிடித்துநீங்கள் படைப்பனவற்றை
>ஏன் மரபுக்கவிதை என்று சொல்லிக்கொள்ளவேண்டும்? பிறகு ஏன்
>அவற்றில் பிழைகாணுபவர்களைக் கடிந்தெழுத வேண்டும்?
>
>எப்போதும் சுட்டிக்காட்டிய குறைகளைக்களையத் தயாராய் இருக்கிறேன்
>என்று பறைசாற்றும் நீங்கள் ஏன் இதைஅவமானமாய்க் கருதவேண்டும்?
>
>அன்புடன்,
>
>"இலக்கணி" மணி மு. மணிவண்ணன்
>நூவர்க், கலி., அ.கூ.நா.
>
>
>------------------------------------------------------------------------
>250 FREE HOURS on AOL! So easy to use, no wonder its #1
>Click here NOW! for 250 Free HOURS
>http://clickhere.egroups.com/click/913
>
>
>eGroups.com home: http://www.egroups.com/group/agathiyar
>http://www.egroups.com - Simplifying group communications
>
>
>
>
>
>


------------------------------------------------------------------------------
Please visit Dravidian Philosophy Campus at [
http://members.tripod.com/loga/tindex.htm] New additions at metaphysical
poetry and Cultural Reflections. Also a new section on Islamic Studies.
Bring your friends there too. This is one of the BEST services you can do
for the world.

DrK.Loganathan