From Vassan Sat Sep 18 09:48:32 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.259); by m5; 18 Sep 1999 16:51:30 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 12100 invoked from network); 18 Sep 1999 16:51:27 -0000
Received: from mailer.cia-g.com (207.66.82.36) by qh.egroups.com with SMTP; 18 Sep 1999 16:51:27 -0000
Received: from default (gup-062-dpm2.cia-g.com [207.66.82.142]) by mailer.cia-g.com (8.8.8/8.8.5) with SMTP id KAA02143; Sat, 18 Sep 1999 10:51:01 -0600 (MDT)
Message-Id: <3.0.5.32.19990918110203.007a4aa0@...>
X-Sender: vishnu@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.5 (32)
Date: Sat, 18 Sep 1999 11:02:03 -0600
To: jaybee@..., agathiyar@egroups.com
From: Vassan
In-Reply-To: <3.0.3.32.19990918205047.0081d520@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re:purattaasi sanik kilzhamai
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2117


At 20:50 09/18/1999 +0700, you wrote:
>
>அன்பர்களே,
>
> இன்று புரட்டாசி சனிக்கிழமை. ஒருபழமையான மரபு
>இன்று அனுட்டிக்கப்படும். தீவிர சைவர்களைத் தவிர மற்றவர்கள்
>இன்று விரதம் இருந்து, திருப்பதி வெங்கடாசலபதியை
>வழிபடுவார்கள்.
> என் மனைவி தன் இளமையில் இதனை மரபுபூர்வமாக
>கடைபிடித்துவந்ததாகவும் , நடுவில்விடுபட்டுவிட்டதாகவும்,
>வெறும் சைவ உணவுடன் இப்போது நின்றுவிடுவதாகவும் சொன்னார்கள்.
>இவ்வாண்டு சற்று மரபு பூர்வமாக இதனைச்செய்யவிரும்புவதாக
>சொன்னார்கள்.
> எனக்கு சற்று ஆச்சரியம். ஏனெனில்நாங்களெல்லாருமே
>சைவ மரபைச் சேர்ந்தவர்கள். ஆனால் வைணவத்தை வெறுத்தது
>கிடையாது.
> என் மனைவியின் பாட்டியோ தீவிரசைவர். உணவுகூட
>அந்தமாதிரி; மடி ஆசாரம் எல்லாம்பார்த்தவர்கள். மருத்துவமனைக்குச்
>சென்றுவந்தால்கூட குளிக்கவேண்டும். சாமி வரும்.
> அவர்களிடம்தான் என் மனைவி வளர்ந்தவர்கள்.
> மனைவி விளக்கினார்கள். பத்துவயதுவரை, ஒவ்வொரு புரட்டாசி
>சனிக்கிழமையும், நெற்றியில் நாமம்போட்டுக்கொண்டு, கையில் ஒரு
>செம்பு ஒன்றை ஏந்தியவண்ணம் வீடுவீடாகச்சென்று, வீட்டுக்கு முன்னால்
>நிற்பார்கள். வீட்டுக்காரர்கள் செம்பில் அரிசி கொஞ்சம் போடுவார்கள்.
>செம்பு நிறைந்தவுடன் வீடு திரும்புவார்கள். அந்த அரிசியைச் சமைத்து
>ஏழைகளுக்கு உணவாகப் படைப்பார்கள்.
>எனக்கே வியப்பாக இருந்தது.
இதையெல்லாம் "நம்ம ஆட்களும்" செய்திருக்கிறார்களா..

[நறுக்]

>அன்புடன்
>
>ஜெயபாரதி
>
>====================================================

அன்புடன் ஜேபி அவர்களுக்கு

ஆம்! நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.

தஞ்சை மாவட்ட பகுதிகளில் புரட்டாசிமாதத்தில் நிறையபேர் முதியோர்கள்/
சிறுவர்கள்- சிலர் 3 கோடுகள் உள்ள நாமம்,சிலர் ஒரே ஒரு
கோடு மட்டும் போட்டுக் கொண்டு"நாராயணா,கோபாலா"
என்பதை சொல்லிக் கொண்டு வீட்டிற்குவருவர்.
நாம் அவர்கள் வைத்திருக்கும் பாத்திரத்தில் அரிசி போடவேண்டும்*
இவ்வாறு செய்பவர்கள் அசைவ உணவு உண்பவர்களாய் இருப்பின்,
புரட்டாசி மாதம் முழுவதும் அசைவத்தைதவிர்ப்பது வழக்கம்(lent?)

மற்றொன்று!

நீங்களும் மற்றும் சிலரும் காரைக்கால்அருகிலுள்ள ஏழை மாரியம்மன் குறித்து
எழுதியிருந்ததை படித்தேன்.

நேற்றிரவு இந்திய உறவினர் ஒருவரிடம் தொலைபேசிய போது காரைக்காலுக்கு சென்று
தலபுராணம் என்று ஏதாவது "ஏழை மாரியம்மனுக்கு" இருந்தால்
வாங்கி அனுப்பச் சொல்லியுள்ளேன்.
------------------------

*பால்வியாபாரி சுந்தரத்தம்மாள்மட்டும்,"ஆச்சி!பச்சரிசி எனக்கு
ஒத்துக்காது,புழுங்கலரிசிய மட்டுமேபோடுங்கள்" என்பார் என் அம்மாவிடம் :)





வாசன்

கேலப்,புது மெக்சிக்கோ...அ.கூ.நா