From Palaniappan A Sun Sep 19 01:10:50 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.259); by m5; 19 Sep 1999 08:13:48 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 9591 invoked from network); 19 Sep 1999 08:13:46 -0000
Received: from snoopy.pacific.net.sg (203.120.90.116) by qh.egroups.com with SMTP; 19 Sep 1999 08:13:46 -0000
Received: from pop1.pacific.net.sg (pop1.pacific.net.sg [203.120.90.85]) by snoopy.pacific.net.sg with ESMTP id QAA16243; Sun, 19 Sep 1999 16:13:44 +0800 (SGT)
Received: from liverpool.ntu.edu.sg (ppp65.dyn67.pacific.net.sg [210.24.67.65]) by pop1.pacific.net.sg with SMTP id QAA23932; Sun, 19 Sep 1999 16:13:41 +0800 (SGT)
Message-Id: <3.0.3.32.19990919041005.01799d10@...>
X-Sender: pala@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.3 (32)
Date: Sun, 19 Sep 1999 04:10:05 +0800
To: globaltamil@..., agathiyar@egroups.com
From: Palaniappan A
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Taking off the load on your children
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2124

அன்பு நண்பர்களே,

Edupad could replace heavy bagsஇ என்ற செய்தி ஒன்று நேற்று இங்குள்ள ஆங்கிலப்
பத்திரிகையில் வெளிவந்தது. அதனைப்பற்றி நீங்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இதோ ஓர்
உரையாடல்:


தாய்: என்னங்க, நம்ம பையனைப் பாருங்க.பாவம். இந்த எட்டு வயதிலேயே அவன் இத்தனை புத்தகங்களைப்
பையில் வைச்சுப் பையை முதுகிலே தூக்கிட்டுப் போறான். முதுகு வளைஞ்சிடுமோன்னுபயமா வேறே இருக்கு!

தந்தை: பயப்படாதே, கூடிய விரைவிலேஉன் பையனும் மத்த பையனுங்களைப் போலபுத்தகப் பையைத்
தூக்கிக்கிட்டுப் பள்ளிக்கூடத்துக்குப் போகத் தேவையில்லை. கையை வீசிக்கிட்டுப் பள்ளிக்கூடத்துக்குப்
போகலாம்.

தாய்: என்னங்க சொல்றீங்க? பள்ளிக்குக்கூடத்துக்குக் கையை வீசிக்கிட்டு போகமுடியுங்களா, அதுவும் நம்ம
சிங்கப்பூரிலெ?

தந்தை: முடியுமாவா? முடியும்னு ஒரு பள்ளிக்கூடத்திலெ காட்டிட்டாங்க. முன்னோடித்திட்டமா டன்மன்
உயர்நிலைப் பள்ளிக்கூடத்திலெ அதைச்செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. அங்கே படிக்கிற பசங்க எல்லாம் இப்போ
புத்தகப் பையை எடுத்துக்கிட்டுப் போறதில்லெ. அதுக்குப்பதிலா edupadஇ என்கிற கணினி ஏடு ஒண்ணை
எடுத்துக்கிட்டுப்போனாப் போதுமாம்.

தாய்: அது என்னங்க-edupad-கணினி ஏடு ?

தந்தை: ஒண்ணுமில்லே. நம்ம வீட்டிலெ ஒருபெரிய கணினி வைச்சிருக்கும் இல்லே?அதைப்போல நான்
ஆபீசுக்குத் தூக்கிட்டுப்போறதுக்கு ஒரு சின்ன கணினி வைச்சிருக்கேன் இல்லையா,அதைவிட சிறிதா
கையிலே வைச்சுக்கிறமாதிரி வயர்இணைப்பு ஒண்ணுமில்லாத ஒரு கணினியைமாணவர்கள்
ஜூலை மாதத்திலிருந்து பயன்படுத்திக்கிட்டு வாராங்களாம்.

தாய்: அது சரிங்க. புத்தகங்களைத் தூக்கிக்குட்டுப்போக வேண்டாங்கிறதுக்கும் இந்தக் கணினி ஏட்டுக்கும் என்ன
சம்பந்தம்?

தந்தை: இருக்குது. இப்போ உன் மூத்த பையன்உயர்நிலை மூணுலெ படிக்கிறான் இல்லெ?அவனுடை பூகோளப்
புத்தகத்தைப் பாத்திருக்கிறாயா? எவ்வளவு மொத்தமா இருக்கு? இனி அந்தப் புத்தகத்தை அவன் தூக்கிக்கிட்டுப்
போக வேண்டாம். அதுக்குப் பதிலா ஸ்டாம்பு அளவிலெ ஒரு சில்லு-சிப்ஸ் ஒண்ணை எடுத்திக்கிட்டுப்போனா
போதும். டிஜிட்டல் முறையிலெ அந்தப்புத்தகத்திலெ இருந்த எல்லா விவரங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
அந்த சிப்சை அந்த கணினி ஏட்டிலெபொருத்திட்டாப் போதும். அந்தப் புத்தகமே கணினித் திரையிலெ
வந்திடும். அதுமட்டுமில்லெ. இப்போ எரி மலையைப் பத்தி நம்ம பையன் சாதாரணப் புத்தகத்திலெ எழுத்து
மூலமும் அதிலெ இருக்கிற வரைந்த படம்அல்லது புகைப்படம் மூலமும் பாத்துக்கத்துக்குவான். ஆனா இந்த கணினி
ஏட்டிலெ எரிமலை வெடிக்கிற மாதிரியும் அதிலெயிருந்து குழம்பு கசிஞ்சு ஓடுறமாதிரியும் தத்ரூபமாத்
தெரியும். அதைப்பாத்து இன்னும் நல்லாகத்துக்கிடலாம்னு பசங்க சொல்றாங்க.

தாய்: சரிங்க. படத்தை மட்டும் பாத்துக்கிட்டாப் போதுங்களா? எழுத்தைப் பாத்துப்படிக்கவேண்டாங்களா?
புத்தகமா இருந்தா அதிலெ குறிப்பு -நோட்இஸ் எழுதிக்கிறலாம். இந்தக் கணினிஏட்டிலெ அப்படியெல்லாம்
செய்ய முடியுங்களா?

தந்தை: ஏன் முடியாது? புத்தகத்திலெ இருக்கிற மாதிரியே கணினி ஏட்டுத் திரையிலெ பாடம் தெரியும்.
படிக்கவேண்டியதுதான். அதுமட்டுமில்லே.இப்போ பாடத்திலெ இருக்கிற சிலசொற்களுக்கான பொருள்
தெரியலேன்னா டிக்சனரியை-அகராதியைப் பாத்துப் பசங்க தெரிஞ்சுக்குவாங்க.ஆனா. இந்த கணினி
ஏட்டிலேயே ஒரு அகராதி இருக்கு. அதிலேயே வார்த்தைக்குப் பொருளைப் பாத்துக்கலாம். நீ சொன்னபடி
நோட்சும் அந்த ஏட்டிலேயே எழுதிக்கலாம். அது நாம சின்ன வயசிலே படிச்சப்போ பயன்படுத்தின சிலேடு
மாதிரித்தான். பலகைக்குப் பதிலா கணினி ஏட்டிலெ கண்ணாடி இருக்கும். அதுலெஎழுதரதுக்கு ஒரு பேனா
இருக்கும். அதிலெ நோட்சு எழுதிக்கிறலாம். அதைப் பதிஞ்சு வைச்சுக்கிட்டு பின்னாலெ தேவைப்படும்பொழுது
திரையிலெ கொண்டுவந்து பாத்துக்கலாம். என்னென்ன வீட்டுப் பாடம் செய்யணும்கிறதையும் அதிலெயே பதிஞ்சு
வைச்சுக்கலாம். இணையத்தொடர்பு அதிலெ இருக்கு. வீட்டிலெ செய்ற பாடத்திலேஏதாவது சந்தேகம் வந்தா
உடனடியா வாத்தியாருக்கு ஈமெயில்-மின் அஞ்சல் அனுப்பி விளக்கம் கேட்கலாம்.

தாய்: சரிங்க. ஆனா இந்தக் கணினி ஏட்டை வாத்தியாருங்க எப்படிப் பயன்படுத்துவாங்க?

தந்தை: கற்பிக்கும் விதம் கற்கும் முறை ஆகிய இரண்டையும் இந்த கணினி ஏடு மாத்திடும்னு சொல்றாங்க.
வாத்தியாருங்களுடெ மற்ற நிர்வாக வேலையும் குறைஞ்சிடுமாம். உதாரணமா அவங்க யார் யார் வகுப்புக்கு
வந்திருக்காங்கன்னு சத்தம்போட்டுக்கேட்கவேண்டாம். வகுப்பிலெ கணினி ஏடு வழியாக எத்தனை மாணவர்கள்
வந்திருக்காங்க, யார் வரலை அப்படிங்கிற விவரத்தை எல்லாம் தெரிஞ்சுக்கலாம்.பாடம் சம்பந்தமா உள்ள
அட்டவணையும் கணினி ஏட்டிலேயே இருக்கும். கேள்விகளை எல்லாம் முந்தி நான் டைப் பண்ணி பிரிண்ட்
செய்வேன் அல்லது பிரதிகள் எடுப்பேன்.இப்போ நான் கணினி ஏட்டிலெ கேள்விகளை எழுதி மாணவர்களுக்கு
அனுப்பிட்டாப் போதும். பதிலையும் தனியா அனுப்பிட்டாப் போதும். மாணவர்கள்சோதனையை முடிச்சதும்
உடனடியா எனக்கு மாணவர்களுடைய முன்னேற்றம் பற்றித் தெரியும்" அப்படின்னு ஒருவாத்தியாரம்ம - மலர்விழி
சுந்தராம்- சொல்றாங்க.

தாய்: சரி யாருங்க இதைக் கண்டுபிடிச்சாங்க?

தந்தை: நம்ம பல்கலைக்கழகத்திலெ ஓர்ஆய்வுப் பிரிவு வச்சிருக்காங்க. அவங்ககண்டுபிடிச்சதுதான் இந்த
EDUPAD-கணினி ஏடு.

தாய்: சரிங்க, நம்ம தமிழ்ப் புத்தகமும் இந்த மாதிரி தபால் முத்திரை அளவிலேவந்துடுமா?

தந்தை: நம்ம நாட்டிலெ ஆங்கிலம், மாண்டரின், மலாய் தமிழ் அப்படின்னுதான் வரிசைக்கிரமாமா
முக்கியத்துவம் கொடுக்கிறாங்க. அதினாலெ தமிழும் வரும். என்ன கொஞ்ச நாளாகலாம்.

தாய்: எப்படிங்க இது எல்லாம் உங்களுக்குத்தெரியுது? என் ராசா!!!

தந்தை: (தனக்குள் சிரித்துக்கொண்டே-நல்ல வேளை நேத்தே இங்கிலிஷ் பேப்பரைப் படிச்சேன். இதை எல்லாம்
நம்ம தமிழ் பத்திரிகைகாரங்க எங்கேஎழுதறாங்க!)

அன்புடன்
பழனி