From Sun Sep 19 04:57:50 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.259); by m5; 19 Sep 1999 12:00:48 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 15587 invoked from network); 19 Sep 1999 12:00:47 -0000
Received: from zinc.singnet.com.sg (165.21.7.31) by qh.egroups.com with SMTP; 19 Sep 1999 12:00:47 -0000
Received: from sanjay01 (qtns01607.singnet.com.sg [165.21.163.197]) by zinc.singnet.com.sg (8.9.1a/8.9.1) with SMTP id UAA00363 for ; Sun, 19 Sep 1999 20:00:43 +0800 (SGT)
Message-ID: <001b01bf0293$ec229280$c5a315a5@sanjay01>
From: "sankar"
To:
Date: Sun, 19 Sep 1999 19:41:31 +0800
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
Subject: [agathiyar] Re: 9-9-99
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2127

அன்புள்ள டாக்டர் இராம கி அவர்களுக்கு,
மிக்க நன்றி.
அம்மாடி இதற்கு இத்தனை விரிவான பரந்த
விளக்கமா என்று என்னை வியக்கவைத்தது.
தங்களின் ஆழமான மிகவும் உபயோகமாய்
பாதுகாக்கக்கூடியதாய் உள்ளது.
மீண்டும் நன்றி,
அன்புடன்,
ஜெயந்தி

-----Original Message-----
From: Dr.RM.Krishnan
To: agathiyar@egroups.com
Date: Sunday, September 19, 1999 5:31 PM
Subject: [agathiyar] Re: 9-9-99


>At 9/18/99 6:07:00 PM, you wrote:
>>அன்புள்ள அகஸ்தியர்களுக்கு,
>>வணக்கங்கள்.
>>
>>ஆனந்தவிகடனில்(12-09-1999) படித்தது.
>>கருத்தின் கோணம் என்னைக்கவர்ந்தது.
>>
>>--------------------(quote)----------------
>>சண்முகம் என்றொரு இளைஞர்.
>>"எண்களின் வரிசையில் எட்டுக்குப்பிறகு
>>ஒன்பது வரக்கூடாது. அது பிழை",என்கிறார்.
>>"எட்டுக்குப்பிறகு ஒன்பது அல்ல.
>>ஒம்பு என்பதே சரி( ஆறு ,ஏழு, எட்டு,
>>ஒம்பு, பத்து) அது போல எண்பதுக்குப்
>>பிறகு ஒன்பது, எண்ணூருக்குப்பிறகு
>>தொண்ணூறு என்று மாறி வர வேண்டும்"
>>என்கிற இவர் இந்த எண் சீர்திருத்தத்தைக்
>>கொண்டு வர பல வி.ஐ.பிக்களைச்சந்தித்து
>>முயற்சி எடுக்கும்படி கேட்கிறார்.
>>______________(quote)_____________
>>I do find some logic in this.
>>However there may be some
>>other angles.
>>
>>இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
>>
>>இதைப்பற்றி இணையத்தினர்களின் உயரிய
>>கருத்துக்களை அறிய மிகவும் ஆவலுடன் இருக்கும்,
>>
>>ஜெயந்தி.
>>Have a nice week end !
>
>அன்பிற்குரிய ஜெயந்தி அவர்களுக்கு,
>
>உங்களுடைய கேள்விக்கு சில முடிந்த முடிவுகளையும், முடியாத சிக்கல்களையும் பதிலாகக் கூற முடியும்.
>
>' தொண்டு' என்ற சொல் 'ஒன்பது' என்ற சொல்லோடு அதே எண்ணுப் பொருளைச் சங்ககாலத்தில் குறித்தது
>உண்மைதான்.
>
>"தொண்டுதலை யிட்ட பத்துக்குறை யெழுநூற்று" - (தொல். 1358)
>"தொடித்திரித் தன்ன தொண்டுபடு திவவின்" - (மலைபடு. 21)
>
>ஒன்பது என்பது கூட்டுச் சொல்லாகவும், தொண்டு என்பது ஒரே சொல்லாக அதற்கு முந்திய ஆறு, ஏழு, எட்டு ஆகியவை
>போல 'நேர்பு, நிறைபு' என்ற வாய்பாட்டை ஒட்டி குற்றியலுகரம் சேர்ந்தே அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
>
>ஒன்பது என்னும் பெயரை 'ஒல்லிய பத்து - குறைந்த பத்து - சுருங்கிய பத்து' என்ற பொருளில் இன்றும் வழங்கி
>வருகிறோம். அதே போல தொண்டு எனும் சொல்லுக்கும் 'சுருக்கம்/குறைபாடு' என்றே பொருளாக இருந்திருக்க
>வேண்டும். இல்லெனில் தொண்ணூறு, தொள்ளாயிரம் என்ற சொற்கள் வந்திருக்காது.
>
>ஒன்று முதல் ஒன்பது வரையுள்ள எண்களை அடுத்து பத்து என்ற சொல் வரும் போது எவ்வாறு புணர்ச்சி இருக்கும் என்று
>குற்றியலுகரப் புணரியலில் தொல்காப்பியர் கூறும் போது ஒன்பதிற்கு மட்டும் கொஞ்சம் விந்தையாக விளக்கு கிறார்.
>இதைப் பல தமிழறிஞர்கள் (குறிப்பாக தேவநேயப் பாவாணர்) ஒப்புக் கொண்டதில்லை. இதைக் கொஞ்சம் விரிவாக
>அறிந்து கொள்ளுவது நல்லது.
>
>தொல்காப்பியர் காலத்தில் X (ஒன்று முதல் ஒன்பது வரையான எண்கள்)+பத்து என்பது 'X-பஃது' என்று ஆகும். இன்று
>'பஃதை' 'பது' என்றே சொல்லுகிறோம்.(அதனால் தான் ஐம்பது, அறுபது என்று வருகிறது). ஒன்பதும் பத்தும் புணரும் போது
>தொல்காப்பியர் கூறுவது:
>
>ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும்
>முந்தை ஒற்றே ணகாரம் இரட்டும்
>பஃதென் கிளவி ஆய்த பகரம் கெட
>நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி
>ஒற்றிய தகரம் றகர மாகும்.
>
>என்ன சொல்லுகிறார்?
>
>ஒன்பது + பத்து = ஒன் + பஃது = தொன் + பஃது = தொண் +பஃது =தொண்ண் +பஃது = தொண்ணூ + று = தொண்ணூறு
>
>இந்தப் புணர்ச்சி முறை மிகவும் சுற்றிவருவதாக, ஒப்புக் கொள்ள முடியாததாக இருக்கிறது.
>
>இதற்குப் பதிலாகப் பாவாணர் கூறுவது
>
> எண் புணர்ச்சி முறை பழைய சொல் இன்றையச் சொல்
> (பழைய சொல்லுக்கு)
> 9 தொண்டு ஒன்பது
> 90 தொள் + பத்து தொண்பஃது தொண்ணூறு
> 900 தொள் + நூறு தொண்ணூறு தொள்ளாயிரம்
> 9000 தொள் + ஆயிரம் தொள்ளாயிரம் ஒன்பதாயிரம்
> 90000 தொண்பது + ஆயிரம் தொண்பதினாயிரம் தொண்ணூராயிரம்
>
>அதாவது, தொண்டு எனும் சொல் சிறிது சிறிதாக வழக்கற்றுப் போகவே, அஃதிருந்த ஒன்றாம் இடத்திற்குத் தொண்பது (-
>ஒன்பது) என்னும் இரண்டாம் இடப் பெயரும், இரண்டாம் இடத்திற்குத் தொண்ணூறு என்னும் மூன்றாம் இடப் பெயரும்,
>மூன்றாம் இடத்திற்கு தொள்ளாயிரம் எனும் நாலாம் இடப் பெயரும், வந்து வழங்குகின்றன. நாலாம் இடப் பெயருக்கு
>மேலிடச் சொல் இன்மையால், தொண்பது என்பதின் திரிபான ஒன்பது என்னும் சொல்லோடு ஆயிரம் என்பதைச் சேர்த்து,
>ஒன்பதாயிரம் அல்லது ஒன்பதினாயிரம் என்று சொல்ல வேண்டியதாயிற்று.
>
>தொண்பது என்பது எப்படி ஒன்பதுக்கு ஒத்தது என்று கேட்டால் மற்ற திராவிட மொழிகளைத் தான் காட்ட முடியும்.
>
>கன்னடம்: ஒம்பத்து; தெலுங்கு: தொம்மிதி; துளு: ஓர்ம்ப;கடபா: தொம்மிதி; குடகு: ஒயிம்பது; கோதம்: ஒன்பாத்;
>துடவம்: ஒன்பத்; கோண்டி: உண்மா; மேலும் ஒல்லுதலும் தொள்ளுதலும் குறைபடுதல்/சுருங்குதல் என்ற ஒரே
>பொருளைத்தான் குறிக்கின்றன.
>
>தொண்டு என்பது ஏன் வழக்கற்றுப் போனது? தெரியாது.
>எப்படி தொண்பது (90) , 9-யைக் குறிக்கத் தொடங்கிற்று? தெரியாது.
>சங்க காலத்தில் இரண்டு சொற்களும் தெரிந்து இருப்பின் எது மக்கள் வழக்கில் (செய்யுள் வழக்கில் அல்ல) இருந்தது?
>தெரியாது.
>எப்பொழுது தொண்டு என்பது முற்றிலும் வழக்கொழிந்தது? பெரும்பாலும் சங்க காலத்திற்குப் பின் இது நடந்திருக்க
>வேண்டும். இது ஒரு கணிப்புத் தான்.
>ஏன் தொல்காப்பியர் இப்படி வலிந்து தொண்ணூறுவுக்கான புணர்ச்சியைக் காண்பித்தார்? தெரியாது; ஒருவேளை
>அப்பொழுதே தொண்டு என்ற சொல் செய்யுள் வழக்கில் மட்டும் இருந்ததோ என்னவோ?
>
>இப்பொழுது இதை மாற்ற வேண்டுமா? என்னைக் கேட்டால் தேவை இல்லை. எத்தனையோ பெருஞ்செயல்கள்
>மொழியை ஒட்டிக் காத்துக் கிடக்கின்றன. (எடுத்துக் காட்டு: தமிழில் அறிவியல்).
>
>அந்தத் தேரை இழுக்க,வடம் பிடிக்க, ஆட்களைக் காணோம். ஊம்....., தேர் எப்ப நகர்றது? எப்ப நெலெ சேர்றது?
>
>அன்புடன்,
>இராம.கி.
>
>பி.கு.
>திரு.மணிவண்ணன் எட்டு/எண் பற்றிய செய்தியைச் சொல்லியிருக்கிறார். அதற்குப் பதிலிறுக்கும் முகமாக, மொத்தத்தில்
>தமிழ் எண்களின் சொல்லாட்சியை அடுத்த கடிதத்தில் பார்ப்போம்.
>
>
>------------------------------------------------------------------------
>250 FREE HOURS on AOL! So easy to use, no wonder its #1
>Click here NOW! for 250 Free HOURS
>http://clickhere.egroups.com/click/913
>
>
>eGroups.com home: http://www.egroups.com/group/agathiyar
>http://www.egroups.com - Simplifying group communications
>
>
>