From Sun Sep 19 07:09:28 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.259); by m5; 19 Sep 1999 14:12:27 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 16522 invoked from network); 19 Sep 1999 14:12:26 -0000
Received: from law-f33.hotmail.com (HELO hotmail.com) (209.185.131.96) by qh.egroups.com with SMTP; 19 Sep 1999 14:12:26 -0000
Received: (qmail 35023 invoked by uid 0); 19 Sep 1999 14:12:25 -0000
Message-ID: <19990919141225.35022.qmail@...>
Received: from 216.118.12.168 by www.hotmail.com with HTTP; Sun, 19 Sep 1999 07:12:24 PDT
X-Originating-IP: [216.118.12.168]
From: "Nagamanickam Ganesan"
To: agathiyar@egroups.com
Cc: tamil@...
Date: Sun, 19 Sep 1999 07:12:24 PDT
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: 9-9-99
Mime-Version: 1.0
Content-Type: text/plain; format=flowed
Content-Transfer-Encoding: 7bit
X-Yahoo-Message-Num: 2129



திரு. "Dr.RM.Krishnan" எழுதினார்கள்:

>' தொண்டு' என்ற சொல் 'ஒன்பது' என்ற சொல்லோடு அதே எண்ணுப் பொருளைச் சங்ககாலத்தில் குறித்தது
>உண்மைதான்.
>"தொண்டுதலை யிட்ட பத்துக்குறை யெழுநூற்று" - (தொல். 1358)
>"தொடித்திரித் தன்ன தொண்டுபடு திவவின்" - (மலைபடு. 21)
[...]
>அதே போல தொண்டு எனும் சொல்லுக்கும் 'சுருக்கம்/குறைபாடு' என்றே பொருளாக இருந்திருக்க
>வேண்டும். இல்லெனில் தொண்ணூறு, தொள்ளாயிரம் என்ற சொற்கள் வந்திருக்காது.

9 பற்றி, தங்களின் ஆழமான, அருமை விளக்கத்துக்கு நன்றி. [[உங்கள் பதிலைப்
படிக்காமலே, மணிவண்ணனின் மடலுக்கு மறுமடல் இட்டுவிட்டேன்.
செந்தமிழ், கரந்தைத் தமிழ்ச் சங்கத் "தமிழ்ப் பொழில்" இவற்றில் எல்லாம்
70-80 ஆண்டுகளுக்கு முன்னரே விளக்கமாக அலசியுளராம்.
நல்ல ஆய்விதழ்கள் அழிபடாமல் காத்தால் பல சிந்தனைகள்
பின்னால் பயன்படும். ஈழநாட்டில் உள்ள நூலகங்களும் அழிக்கப்பட்டு
வரும் நேரத்தில், தமிழ் நாட்டில் நல்ல பல, பழைய இதழ்களைச் சேகரித்தும்
உபயோகித்தும் வரும் நூலகங்கள் குறைவது கவலைக்குரியது.
தமிணாட்டு அரசு ஒருசில கோடிகளைச் செலவிட்டால் உலகத்தில்
வெளியான எல்லாத் தமிழ்ப் பத்திரிகைகளையும் நுண்படம்(microfiche),
கணிவருடி (scanning), நூலகம் போன்றவை மூலம் காத்துவிடல்
எளிது. செய்வார்களா?]]

"தொண்டு" என்பது "குறைந்த/சுருங்கிய" என்னும் பொருளில் கொங்குநாட்டில்
இன்னும் நன்கு வழங்கிவருகிறது.

நான் சிறுபருவத்தில் பார்த்தது (இதுபற்றி பூபதி மாணிக்கத்துக்குத் தெரியும்
என நினைக்கிறேன்):

கோடைமழைக்குப் பின் வயலில் உழுவதற்காக, நிறையப் போத்துகள்
(male water buffalo) இருக்கும். அவை முரடு பிடித்து அங்கும்,இங்கும்
சுற்றிப் பாய்ந்து, ஆள்களை முட்டித் தீங்கு விளைக்காமல் இருக்க, கால்களில்
பளுவுள்ள மரக் கட்டைகளைக் கட்டுவர். பெண் எருமைகளுக்கும் தொந்தரவு இல்லை :-)
போத்துகளைக் கட்டுபடுத்தும் கட்டைகளுக்குத் "தொண்டுமுட்டி" என்பது
பெயர். இங்கே, தொண்டு என்பது (குறும்பைக்) குறைக்க/சுருக்க உதவுவது
என்னும் பொருளில் வருவது காண்க.

"அவள்/அவன் தொண்டு சுற்றுகிறாள்/ன்" என்றால் கொங்குநாட்டில்
அர்த்தம் வேறு. "தொண்டு" என்பதற்கு (ஒழுக்கக்) "குறைவு" எனப் பொருள்.
கருத்திருமன், க. கு. கோதண்டராமன் போன்றோர் எங்கள் பகுதியில்
கம்பன் கழகம் நடாத்தியபோது, சேதுப்பிள்ளை (RPS), கம்பன் அடிப்பொடி
போன்றோர் "இங்கெல்லாம், "அவள் நல்ல தொண்டு செய்திருக்கிறார்"
என்று சொல்லக் கூடாது" என்று நகைச்சுவையாகச் சொல்வர்.
இது, செட்டிநாட்டில் திருமண வீட்டுக்குச் சென்று,
"பந்தல் போட்டாச்சா?" என்று கேட்பதை ஒக்கும். சாவு வீட்டில்
தான் செட்டிநாட்டில் பந்தல்;
மணவீட்டில் "காவணம்" என்ற சொல்லே பயன்படும் என்பது போலத்தான்.

முனைவர் இராம, கி.:
>தொண்டு என்பது ஏன் வழக்கற்றுப் போனது? தெரியாது.

மேலே உள்ள குறிப்பைக்காண்க. நன்றி.