From Sun Sep 19 18:20:40 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.259); by m5; 20 Sep 1999 01:23:38 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 12139 invoked from network); 20 Sep 1999 01:23:36 -0000
Received: from law-f32.hotmail.com (HELO hotmail.com) (209.185.131.95) by qh.egroups.com with SMTP; 20 Sep 1999 01:23:36 -0000
Received: (qmail 80234 invoked by uid 0); 20 Sep 1999 01:23:36 -0000
Message-ID: <19990920012336.80233.qmail@...>
Received: from 209.223.28.56 by www.hotmail.com with HTTP; Sun, 19 Sep 1999 18:23:35 PDT
X-Originating-IP: [209.223.28.56]
From: "Nagamanickam Ganesan"
To: tamil@...
Cc: agathiyar@egroups.com
Date: Sun, 19 Sep 1999 18:23:35 PDT
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: 9-9-99
Mime-Version: 1.0
Content-Type: text/plain; format=flowed
Content-Transfer-Encoding: 7bit
X-Yahoo-Message-Num: 2133



டாக்டர். இராம. கி.:
> >அதே போல தொண்டு எனும் சொல்லுக்கும் 'சுருக்கம்/குறைபாடு' என்றே
> பொருளாக இருந்திருக்க
> >வேண்டும். இல்லெனில் தொண்ணூறு, தொள்ளாயிரம் என்ற சொற்கள்
> வந்திருக்காது.
>
>
நா. கணேசன்:
> "தொண்டு" என்பது "குறைந்த/சுருங்கிய" என்னும் பொருளில் கொங்குநாட்டில்
> இன்னும் நன்கு வழங்கிவருகிறது.
>
>[...]
> பெயர். இங்கே, தொண்டு என்பது (குறும்பைக்) குறைக்க/சுருக்க உதவுவது
> என்னும் பொருளில் வருவது காண்க.

திரு. ஷாபு:
>தொண்டு என்பது குறைந்த/சுருங்கிய எனும் பொருளில் கொண்டால்,
>budget ல் cash flow வில் துண்டு விழுந்து விட்டது என்கிறோமே அது
>தொண்டு என்பதன் மருஉ வா ? அதே போல் தொண்டு கிழம் என்கிறோமே அதன்
>பொருள் என்ன ?

தொண்டு என்பது 1) அடிமை போல நடப்பது; சேவை செய்வது;
இங்கு ஆணவம் *குறைகிறது*. 2) ஒழுக்கம் *குறைந்து*
நடப்பது தொண்டுத்தனம்; தொண்டச்சி = கணிகை.
3) ஒன்பது = பேரெண்ணாம் பத்தில் இருந்து ஒன்று(1) *குறைவது*.
ஆக, மூன்று பொருளிலும், *குறைபடுவது* என்பதே *தொண்டு*.

---------------------------------
என்னைப் பொருத்தவரை, எண்ணுப்பெயர்களில் எம்மாற்றமும் தேவையில்லை.

1) தொண்டு (<தொள்-) = தொண்பது (<தொள்-) = ஒன்பது =9;
யாவற்றிலும், பேரெண்ணாம் பத்தில் இருந்து ஒன்று *குறைந்து*
9 வருகிறது.

2) தொள் + நூறு = தொண்ணூறு, வழக்கில் தொன்னூறு.
பேரெண்ணாம் நூறில் இருந்து பத்து *குறைந்து* (தொள்கி/ஒல்கி)
90 வரும்.

3) அதுபோலே, 1000 - 100 = 900 = தொளாயிரம்/தொள்ளாயிரம்.

தொண்டு கிழம்:
இதுவும், தொள் = குறைவு என்பதன் வளர்ச்சியே; சக்திக் *குறைவு* ஆன கிழம்;
தொள தொள என்கிற சட்டை = நெகிழ்ந்து, இறுக்கம் *குறைந்து* இருக்கும் சட்டை.
தொளி (<தொள்-) = சேறு; இறுக்கம் *குறைந்து* உள்ள மண்.
தொளதொளத்தல் = சோர்தல், தளர்தல்
தொள்கு=வலை
தொள்ளாடி=பலமற்றவன்
தொளைத்தல் = துளைத்தல்

தொள் => துள் => துண் => துணி, துண்டு எனவெல்லாம் விரியும் போலத்
தோற்றுகிறது. துள்- => துண்- என்பதுடன் வேணவா/வேளவா - ஒப்புனோக்குக.

அன்புடன்,
நா. கணேசன்


______________________________________________________