From Sun Sep 19 19:38:19 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.259); by m5; 20 Sep 1999 02:41:16 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 10389 invoked from network); 20 Sep 1999 02:41:14 -0000
Received: from zinc.singnet.com.sg (165.21.7.31) by qh.egroups.com with SMTP; 20 Sep 1999 02:41:13 -0000
Received: from sanjay01 (qtns04802.singnet.com.sg [165.21.171.192]) by zinc.singnet.com.sg (8.9.1a/8.9.1) with SMTP id KAA20648 for ; Mon, 20 Sep 1999 10:41:11 +0800 (SGT)
Message-ID: <000c01bf030e$cddcfa60$c0ab15a5@sanjay01>
From: "sankar"
To:
Date: Mon, 20 Sep 1999 10:21:08 +0800
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
Subject: [agathiyar] Re: 9-9-99
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2134

அன்புள்ள அகஸ்தியர்களுக்கும்
மற்றும் திரு கணேசன் அவர்களுக்கும்/திருமணிவண்ணன்
அவர்களுக்கும்/டாக்டர் இராம.கிஅவர்களுக்கும்
திரு ஷாபு அவர்களுக்கும் நன்றியுடன் வணக்கங்கள்.

அத்தனையும் ஆழமான விரிவான விளக்கங்கள்.
படித்து அறிந்து, ஆச்சரியித்தேன்.
என்போன்ற தமிழ் கற்க ஆர்வமுள்ளவர்களுக்கு
பெரிதும் உதவும் என்பது திண்ணம்.

நன்றி,
வணக்கம்.
அன்புடன்,
ஜெயந்தி
-----Original Message-----
From: Nagamanickam Ganesan
To: tamil@...
Cc: agathiyar@egroups.com
Date: Monday, September 20, 1999 9:23 AM
Subject: [agathiyar] Re: 9-9-99


>
>
>டாக்டர். இராம. கி.:
> > >அதே போல தொண்டு எனும் சொல்லுக்கும் 'சுருக்கம்/குறைபாடு' என்றே
> > பொருளாக இருந்திருக்க
> > >வேண்டும். இல்லெனில் தொண்ணூறு, தொள்ளாயிரம் என்ற சொற்கள்
> > வந்திருக்காது.
> >
> >
>நா. கணேசன்:
> > "தொண்டு" என்பது "குறைந்த/சுருங்கிய" என்னும் பொருளில் கொங்குநாட்டில்
> > இன்னும் நன்கு வழங்கிவருகிறது.
> >
> >[...]
> > பெயர். இங்கே, தொண்டு என்பது (குறும்பைக்) குறைக்க/சுருக்க உதவுவது
> > என்னும் பொருளில் வருவது காண்க.
>
>திரு. ஷாபு:
>>தொண்டு என்பது குறைந்த/சுருங்கிய எனும் பொருளில் கொண்டால்,
>>budget ல் cash flow வில் துண்டு விழுந்து விட்டது என்கிறோமே அது
>>தொண்டு என்பதன் மருஉ வா ? அதே போல் தொண்டு கிழம் என்கிறோமே அதன்
>>பொருள் என்ன ?
>
>தொண்டு என்பது 1) அடிமை போல நடப்பது; சேவை செய்வது;
>இங்கு ஆணவம் *குறைகிறது*. 2) ஒழுக்கம் *குறைந்து*
>நடப்பது தொண்டுத்தனம்; தொண்டச்சி = கணிகை.
>3) ஒன்பது = பேரெண்ணாம் பத்தில் இருந்து ஒன்று(1) *குறைவது*.
>ஆக, மூன்று பொருளிலும், *குறைபடுவது* என்பதே *தொண்டு*.
>
>---------------------------------
>என்னைப் பொருத்தவரை, எண்ணுப்பெயர்களில் எம்மாற்றமும் தேவையில்லை.
>
>1) தொண்டு (<தொள்-) = தொண்பது (<தொள்-) = ஒன்பது =9;
>யாவற்றிலும், பேரெண்ணாம் பத்தில் இருந்து ஒன்று *குறைந்து*
>9 வருகிறது.
>
>2) தொள் + நூறு = தொண்ணூறு, வழக்கில் தொன்னூறு.
>பேரெண்ணாம் நூறில் இருந்து பத்து *குறைந்து* (தொள்கி/ஒல்கி)
>90 வரும்.
>
>3) அதுபோலே, 1000 - 100 = 900 = தொளாயிரம்/தொள்ளாயிரம்.
>
> தொண்டு கிழம்:
>இதுவும், தொள் = குறைவு என்பதன் வளர்ச்சியே; சக்திக் *குறைவு* ஆன கிழம்;
>தொள தொள என்கிற சட்டை = நெகிழ்ந்து, இறுக்கம் *குறைந்து* இருக்கும் சட்டை.
>தொளி (<தொள்-) = சேறு; இறுக்கம் *குறைந்து* உள்ள மண்.
>தொளதொளத்தல் = சோர்தல், தளர்தல்
>தொள்கு=வலை
>தொள்ளாடி=பலமற்றவன்
>தொளைத்தல் = துளைத்தல்
>
>தொள் => துள் => துண் => துணி, துண்டு எனவெல்லாம் விரியும் போலத்
>தோற்றுகிறது. துள்- => துண்- என்பதுடன் வேணவா/வேளவா - ஒப்புனோக்குக.
>
>அன்புடன்,
>நா. கணேசன்
>
>
>______________________________________________________
>
>------------------------------------------------------------------------
>
>eGroups.com home: http://www.egroups.com/group/agathiyar
>http://www.egroups.com - Simplifying group communications
>
>
>