From Mon Sep 20 00:33:07 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.259); by m5; 20 Sep 1999 07:36:03 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 18506 invoked from network); 20 Sep 1999 06:54:00 -0000
Received: from usm.my (161.142.14.30) by qg.egroups.com with SMTP; 20 Sep 1999 06:54:00 -0000
Received: from kgesu ([161.142.13.141]) by usm.my (8.9.3/8.9.0) with SMTP id OAA91874 for ; Mon, 20 Sep 1999 14:38:04 +0800
Message-Id: <3.0.3.32.19990920150044.00737984@...>
X-Sender: kgesu@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Mon, 20 Sep 1999 15:00:44 +0800
To: agathiyar@egroups.com
From: "R.Karthigesu"
In-Reply-To: <3.0.3.32.19990918205047.0081d520@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: purattaasi sanik kilzhamai
Content-Type: text/enriched; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2135



Sorry, this came out garbled!


Re.Ka.


At 08:50 PM 18/09/1999 +0700, you wrote:

>>>>



InaiMathiTSCஅன்பர்களே,


இன்று புரட்டாசி சனிக்கிழமை. ஒரு பழமையான மரபு

இன்று அனுட்டிக்கப்படும். தீவிர சைவர்களைத் தவிர மற்றவர்கள்

இன்று விரதம் இருந்து, திருப்பதி வெங்கடாசலபதியை

வழிபடுவார்கள்.

என் மனைவி தன் இளமையில் இதனை மரபுபூர்வமாக

கடைபிடித்துவந்ததாகவும் , நடுவில்விடுபட்டுவிட்டதாகவும்,

வெறும் சைவ உணவுடன் இப்போது நின்றுவிடுவதாகவும் சொன்னார்கள்.

இவ்வாண்டு சற்று மரபு பூர்வமாக இதனைச்செய்யவிரும்புவதாக

சொன்னார்கள்.

எனக்கு சற்று ஆச்சரியம். ஏனெனில்நாங்களெல்லாருமே

சைவ மரபைச் சேர்ந்தவர்கள். ஆனால் வைணவத்தை வெறுத்தது

கிடையாது.

என் மனைவியின் பாட்டியோ தீவிர சைவர். உணவுகூட

அந்தமாதிரி; மடி ஆசாரம் எல்லாம்பார்த்தவர்கள். மருத்துவமனைக்குச்

சென்றுவந்தால்கூட குளிக்கவேண்டும். சாமி வரும்.

அவர்களிடம்தான் என் மனைவி வளர்ந்தவர்கள்.

மனைவி விளக்கினார்கள். பத்துவயதுவரை, ஒவ்வொரு புரட்டாசி

சனிக்கிழமையும், நெற்றியில் நாமம்போட்டுக்கொண்டு, கையில் ஒரு

செம்பு ஒன்றை ஏந்தியவண்ணம் வீடுவீடாகச்சென்று, வீட்டுக்கு முன்னால்

நிற்பார்கள். வீட்டுக்காரர்கள் செம்பில் அரிசி கொஞ்சம் போடுவார்கள்.

செம்பு நிறைந்தவுடன் வீடு திரும்புவார்கள். அந்த அரிசியைச் சமைத்து

ஏழைகளுக்கு உணவாகப் படைப்பார்கள்.

எனக்கே வியப்பாக இருந்தது.

இதையெல்லாம் "நம்ம ஆட்களும்" செய்திருக்கிறார்களா

என்ன!

எது எப்படியிருந்தால் என்ன.

அந்த வழக்கத்தின் அடிப்படையாகஅமைந்திருக்கிறதே -

காருண்யம், தர்மம், இரக்கம் - அதுவல்லவாமிகப்பெரியது!

தானே உஞ்சவிருத்தி செய்து, அதனையும்தானே உண்டுவிடாமல்,

அதனை ஏழைகளுக்குக் கொடுப்பது என்பதுபெரிய விஷயம்தானே?

ஆதிசங்கரர் தன்னுடைய ஐந்தாவது வயதில் ஒரு குறிப்பிட்ட

மரபின்படி உஞ்சவிருத்தி செய்யப்போனார்.

அன்று ஏகாதசி. அன்று ஒரு பரம ஏழையின்வீட்டின் முன்னால்

நின்று "பவதி பிக்ஷாந்தேஹி" என்று குரல்கொடுத்தார். அவ்வாறு

மூன்றே முறைதான் குரல் கொடுக்கலாம். அதற்குள் ஏதேனும் பிட்சை

கிடைக்கவில்லையென்றால் இடத்தைக்காலிபண்ணிவிடவேண்டியதுதான்.

அன்று வயிறும் காலி.

அந்த ஏழையின் மனைவி வீட்டில் உணவுஏதேனும் இருக்கிறதா

என்று தேடிப்பார்த்தாள். ஒன்றுமே கிடைக்கவில்லை.

ஏகாதசி விரதம் முடிந்து, உண்ணாநோன்பை முறிப்பதற்காக

வைத்திருந்த ஒரே ஒரு நெல்லிக்கனி இருந்தது. அதுஇல்லையெனில்

நோன்பை முடிக்கமுடியாது. மரபும் கெட்டும்விடும்.

தர்மமா, நோன்பு மரபா?

டக்கென்று நெல்லிக்கனியை எடுத்துப்போய், சங்கரரின் பிட்சைப்

பாத்திரத்தில் போட்டாள்.

அந்த கருணையைப் பார்த்த சங்கரர் உள்ளத்தில் கழிவிரக்கம்

பீரிட்டு, பெருகி ஓடி, அது பொன்மகளின்மீது அழகிய துதியாக உருவெ

டுத்தது. அந்த கனகதாரா தோத்திரத்தின் 21ஆம் பாடலின் போது பொன்

நெல்லிக்கனிகளாக மழை பெய்தது.

(இதற்கு அருமையான வியாக்கியானத்தைசுவாமிநாதன் சென்ற

ஆண்டு உலகத்தமிழ் இணையத்தில் கொடுத்திருந்தார்).

மீண்டும் அந்த பழைய விஷயத்துக்கு வருகிறேன். புரட்டாசி

சனிக்கிழமை இவ்வாறு செம்பில் அரிசியை உஞ்சவிருத்தியில் வாங்கி

சமைத்துப்போடுவதற்குப் பெயர் "கோபாலம் எடுத்தல்" என்பார்கள்.

திருப்பதி வெங்கடாசலபதிக்கு என்று நல்ல தோத்திரம்,

மந்திரம் தருமாறு மனைவியார் கேட்டார்கள்.

"பிரபந்தத்திலிருந்தே பாடல் ஒன்றைத்தருகிறேன். அதுவே

மந்திரம் தோத்திரம் எல்லாமே ஆகும்."என்று சொல்லி அதனைப்

படி எடுத்துக்கொடுத்து, "இது திராவிடவேதம். இதனையே ஓது",

என்று கையில் கொடுத்தேன்.

அருமையாக பாயசம் வைத்து படைத்து,திராவிடவேதத்தை ஓதி,

வேங்கடவனையும் அலர்மேலுத்தாயாரையும்வழிபட்டார்கள். வேங்கடவனையும்

தாயாரையும் ஒருசேர வணங்கிவிட்டு வந்து அந்தப் பாயசத்தை சாப்பிட்டுக்

கொண்டே எழுதியது இது.

அந்தப் பதிகத்தை அடுத்து முன்னிலைப்படுத்துகிறேன்.


அன்புடன்


ஜெயபாரதி



====================================================



<<<<<<<<