From Mon Sep 20 11:11:55 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.259); by m5; 20 Sep 1999 18:14:53 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 7273 invoked from network); 20 Sep 1999 18:14:48 -0000
Received: from dfw-ix10.ix.netcom.com (206.214.98.10) by qh.egroups.com with SMTP; 20 Sep 1999 18:14:48 -0000
Received: (from smap@localhost) by dfw-ix10.ix.netcom.com (8.8.4/8.8.4) id NAA07694; Mon, 20 Sep 1999 13:14:33 -0500 (CDT)
Received: from sji-ca1-150.ix.netcom.com(209.109.232.150) by dfw-ix10.ix.netcom.com via smap (V1.3) id rma006767; Mon Sep 20 13:11:13 1999
Message-ID: <006801bf0393$2b730fa0$96e86dd1@namakkal>
From: "Mani M. Manivannan"
To: ,
Date: Mon, 20 Sep 1999 11:07:59 -0700
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3612.1700
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3612.1700
Subject: [agathiyar] Re: Tamilbooks - Bestsellers list
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2143

Dr. Swaminathan's mail was in the UTF-7 encoding.
I am attempting to resend it in the user-defined
encoding.

-Mani

-----Original Message-----
From: N. Swaminathan
To: Globaltamil@...
Cc: agathiyar@egroups.com
Date: Monday, September 20, 1999 10:44 AM
Subject: [agathiyar] Tamilbooks - Bestsellers list


ஆங்கிலப்புத்தகங்களின் வாரந்திர விற்பனைச் சாதனைகளை பட்டியலிடுவது
போல் தமிழ்ப்புத்தகங்களின் விற்பனைச் சாதனைகளைப் போடுவது இல்லை
என்ற குறை பரவலாக இருக்கிறது. அதற்கு காரணங்கள் உண்டு. மக்களின் ரசனை
பற்றி தெரிந்துவிட்டால், போட்டி போட்டுக்கொண்டு புதுபுத்தகம் எழுதிவிடுவார்கள்
என்ற அச்சமும் ஒரு காரணமாகும்.

அதனால், நான் ஒரு தனியார் புத்தக நிறுவனத்துக்கு எழுதி புத்தக விற்பனை விவரம்
பெற்று இங்கே எழுதியிருக்கிறேன். ஒரு சிறு மதிப்புரையும் இணைக்கப்பட்டு உள்ளது.
விவரங்களை ரகசியமாக வைத்துக்கொள்ளவும்.


(கடந்த வார விற்பனையிலிருந்து)


1. பெண்களை மயக்கும் வழிகள் (சைட் சண்முகம்) - 10 லட்சம் பிரதிகள்

நடையா, இது நடையா? - இது தவிர வேற ஒன்றுமே தெரியாதா உங்களுக்கு?
மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதம்.
தற்பொழுது சிறையிலிருக்கும் சைட் சண்முகம் தன்
அனுபவங்களிலிருந்து எழுதியது. படித்து பயன் பெறுங்கள்.

2. நடிகர்களின் விலாசங்கள் (சினிமா ரசிகன்) - 8 லட்சம் பிரதிகள்

வீடு உள்ள நடிகர்கள், வீதி, மரத்தடி, சத்திரத்தில் உள்ள நடிகர்கள் -
எந்த நடிகர் எப்பொழுது வெளியே வருவார், அவர்கள் உணவு,
உடைப்பழக்கங்கள்,உயரம், எடை, ரகசிய நோய்கள் பற்றி விவரிக்கும் இந்நூல்
கைவசம் வைத்திருங்கள்

3. நடிகைகளின் அதிர்ஷ்ட மச்சங்கள் (மச்ச சாஸ்திரி) - 7 லட்சம் பிரதிகள்

புள்ளியென்று எள்ளி நகையாடாதீர்கள்.
எங்கே மச்சம் இருந்ததால் எப்படி முன்னுக்கு வந்தார்கள் என்பதை
படம் போட்டு பாகங்களை குறித்து காட்டும் இன்னூல் பல பயனுள்ள
தகவல்களை சொல்லுகிறது. நடிகைகள் வளர்க்கும் செல்லப்பிராணிகள்
படங்களும் இதில் உண்டு.

3. எளிதாய்க் கடன் பெறும் முறைகள் (லோன் லட்சுமணன்)- 6 லட்சம் பிரதிகள்

பணம் தேவையா? சம்பாதிக்க நேரமோ திறமையோ இல்லையா?
இதைப்படித்தால் நீங்கள் யாரிடமும் எப்பொழுதும் எளிதில்
கடன் வாங்கிவிடலாம். திருப்பிக்கொடுக்கவே வேண்டாம்.
இந்த நூலை மட்டும் கடன் வாங்கி படிக்காதீர்கள்.

4. வரி ஏய்ப்பு வழிகள் (வரியேப்ப வரதராஜன்) - 3 லட்சம் பிரதிகள்

ஏன் கேட்கிறாய் வரி, நீயென்ன மாமனா, மச்சானா என்று கொதித்த
கட்டபொம்மன் போல் ஆகாமல் அமைதியாக
வரதராஜன் விவரிக்கும் வரி ஏய்ப்பு முறைகளை கற்றுத்தேறுங்கள்
(முன்னாள் அமைச்சர்கள், நடிகர்கள் பாராட்டுரையுடன்)
இதற்கு விற்பனை வரி செலுத்தத்தேவையில்லை.

5. திரைப்பட பாடல்களுக்கு பொருளுரை (கானா கருப்பண்ணசாமி) - 2.5 லட்சம் பிரதிகள்

அஸ்க்கு அஸ்க்குதான், புஸ்க்கு புஸ்க்குதான்
ஜிலுக்கு ஜில்லுக்கு ஜையாலோ என்றால் உங்களுக்கு புரியவேண்டாமா?
இதுவரை வந்த படங்களில் உள்ள பாடல்கள் கொண்டது.

6. வேள்விகளும் ஓட்டு வங்கியும் - (அசுவத் மேத்தா) - 2 லட்சம் பிரதிகள்

அசுவமேத யாகத்தால் பரிபதவிகாத்தநல்லூர் தொகுதியில் தன் எம்.பி.
பதவியை பெற்ற அசுவத் மேத்தாவின் புத்தகம்.
எந்த வேள்வி செய்தால் தேர்தலில் வெற்றி பெறலாம் என்பதை விவரிக்கும் நூல்.
இத்துடன் இலவச இணைப்பாக எந்த வேலைக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும்
என்ற ஆதாரபூர்வமான அரசு லஞ்ச பட்டியல் கொடுக்கப்படும்.

7. சினிமாவில் சேருவது எப்படி ? - (லைட்பாய் சிங்காரம்) 1.7 லட்சம் பிரதிகள்

ஒரே நாளில் தகுதியோ, பயிற்சியோ இல்லாமல்
டாக்டராக, எஞ்சினீயராக, விமானியாக வேண்டுமா?
ஒரு திறமையும் இல்லயா? கவலை ஏன்?
சினிமாவில் நடிக்கலாமே? இதைப்படியுங்கள்

8. பாஸ்போர்ட்,விசா வாங்குவது எப்படி ? (பரமசிவம்) 1.4 லட்சம் பிரதிகள்

புள்ளிக்குதவாத வெறும் பள்ளிப்படிப்புதானா? அஞ்சாதீர்கள்.
வெளிநாட்டில் வேலை இல்லாவிட்டாலும் உள்நாட்டில் ஒரு பாஸ்போர்ட்/விசா வைத்திருந்தால்
கல்யாணமார்க்கெட்டில் உங்களுக்கு அதிகம் வரதட்சிணை கிடைக்கும்.
எந்த நாட்டு விசாவுக்கு எவ்வளவு வரதட்சிணை என்ற பட்டியலும் உண்டு.
(எ-டு): அமெரிக்கா: பத்து லச்சம்,ஆஸ்திரேலியா: எட்டு லச்சம்,ஐரொப்பா: 5 லச்சம்

9. இந்தியரின் கின்னஸ் சாதனைகள் - ( கின்னஸ் கிருஷ்ணன்) 1.2 லட்சம் பிரதிகள்

சாதனை புரிய ஆசையா ? எளிதில் செய்யலாம்.
உலகிலேயே நீளமான நகம் கொண்டவர் யார்? அதிக நேரம் சைக்கிளில்
சுற்றிவந்தது யார்? தலையாலேயே நடந்து போனது யார்? நீண்ட முடியுள்ள
ஆண் யார் ? பிறந்ததிலிருந்து குளிக்காதவர், பல் விளக்காதவர் பற்றி
விவரம் அறிய வாங்கிப்படியுங்கள். இன்னும் செய்ய வேண்டிய சாதனைகள்
(வாழ்நாள் முழுவதும் தூங்கியவர், கடல்கரை மண்ணை எண்ணியவர் போன்ற)
பட்டியலும் உண்டு.

10. பாரதி கவிதைகள் - மகாகவி சுப்ரமணிய பாரதி - 1.1 லட்சம் பிரதிகள்

மாணவர்களே ! கவனியுங்கள் ! புத்தம் புதிய கண்டுபிடிப்பு !
கவி பாரதியின் கவிதை என்ற அட்டை மட்டும் கொண்ட இந்த புத்தகத்துள்
உங்களுக்கு பிடித்தமான புத்தகத்தை ஒளித்துக்கொண்டு படிக்கலாம்.
மற்றவர்கள் நீங்கள் பாரதியின் கவிதை படிப்பதாக எண்ண வைத்து
பகிரங்கமாக படிக்க முடியாத நூல்களை இதனுள் வைத்து வகுப்பறையிலும்
பேருந்திலும் எந்த இடத்திலும் பயமின்றி படிக்க இயலும்.
நாட்குறிப்பு, கவிதை, விலாசம், தொலைபேசி எண் எழுத வெள்ளைத்தாளும் உண்டு.


======================

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்