From jaybee Tue Sep 21 05:11:38 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.259); by m5; 21 Sep 1999 12:14:37 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 17639 invoked from network); 21 Sep 1999 12:14:33 -0000
Received: from mta1.tm.net.my (202.188.95.4) by qg.egroups.com with SMTP; 21 Sep 1999 12:14:33 -0000
Received: from user ([202.188.69.57]) by mta1.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990921081007.EWXT22220@user>; Tue, 21 Sep 1999 16:10:07 +0800
Message-Id: <3.0.3.32.19990921160915.00822b70@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Tue, 21 Sep 1999 16:09:15 +0700
To: "agathiyar@egroups.com"
From: jaybee
Cc: Palaniappan A , "Mani M. Manivannan"
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Hungry Ghosts
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2152

அன்புள்ள பழனி,

Singgai Palani wrote:

அன்பு டாக்டர் JB,

<மலேசியாவில் எப்போதுமே அதிகமாக தொடர்ந்து விற்பனையாகிக்
> கொண்டிருப்பவை "Collections of Singapore GhostStories".
> இவை இதுவரை பத்து பகுதிகளுக்குமேல் வெளிவந்துவிட்டன. Editions
> திரும்பத் திரும்ப வந்துவிட்டன.
>
> சிங்கப்பூரில் அத்தனை பிசாசுகளா இருக்கின்றன?
> {%-0 அதிர்ச்சி+ஆச்சரியம்+பீதி கலந்த குறியீடு
>

75 விழுக்காடு சான மக்களைக் கொண்ட எங்கள் நாட்டில் பேய் மாதமே(hungry ghosts month-7th
moon) அனுசரிக்கப்படுகிறதே உங்களுக்குத்தெரியாதா?


பூஹ்ஹ்ஹ்! இதென்ன பிரமாதம்?
உங்கள் நாட்டில் சீனர்கள் பேய் மாதத்தைக் கொண்டாடுவதாகச்
சொல்கிறீர்கள். உங்களிடம் ஓரினப்பேய்கள்தாம் அதிகம்.
மலேசியா பல்லினப்பேய்கள் வாழும் நாடு. சீனப்பேய்கள் தவிர
மலாய்ப்பேய்கள் வேறு, வகை வகையாகஇருக்கின்றன. இவற்றையெல்லாம்
தூக்கிசாப்பிடும் வல்லபூதம், வலாஷ்டிகப்பேய், அல்லல்படுத்தும் அடங்காமுனி,
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனி,கொள்ளிவாய்ப்பேய், குறளைப்பேய்,
பெண்களைத் தொடரும் பிரம்மராக்ஷஸ்,இரிசி, காட்டேரி, என்ற தமிழ்ப்
பைசாசவகைகள் இருக்கின்றன. இவற்றுடன்லாட்டரி டிக்கட்டுக்கு நம்பர்
கொடுக்கும் டத்தோக்கள். போதாததற்குதாய்லாந்துப் பிசாசுகளும் மைக்ரேட்
செய்வதுண்டு. ("அடேய்!!! ஹ்ஹ்ஹ்ஹும். ஒன்பொண்டாட்டிக்கு
சயாம்காரப்பேய்டா பிடிச்சிருக்கு..ஹு..ஹு..ஹு..ஹூ..ஹூ. நான்போன
பெரகு.....டாய்! கவனாக்கேளூஊஊஊ..ஹும்...இந்தக்குஞ்சுகிட்ட
கேளு. அது சொல்ரபடியெல்லாஞ்செஞ்சுவெரட்டு.")[PG:குஞ்சு=சாமியாடி]
PG என்றால் post-graduate? அதாங்கிடையாதுங்கறேன், பேயாலஜி
க்லாஸரி.
இது நகர்ப்புர, நாட்டுப்புறப்பக்கங்களில். காட்டுப்புறத்தில் ஸெனோய்,
ஸாக்காய், ஸெமாங்க் ஆகிய இனத்தோர்அவர்களின் சொந்த பேயுலகவாசிகளை
வைத்திருக்கிறார்கள். ("நம்ம கப்பிட்டான் வெசயம் தெரியுங்களா? அவுரு
கொமாண்டோ யூனிட்டக் கூட்டிட்டு காட்டுக்குள்ளார போனாருல்ல?"
"ஆமா! என்ன ஆச்சு? புலி கிலி சாப்ட்டுர்ச்சா?" "அப்டின்னாத்தான்
பரவால்லீங்கலே! போயி ஸக்காயிபொம்பளய கைவெச்சுட்டாரு. அவனுவ
சொம்மா விடுவானுவலா? பாவய மந்திரிச்சி வெச்சானுவ. கப்பிட்டான் போயிச்
சேந்துட்டாருங்க. ஏங்க? ஸக்காயி வேலைய எதுங்க முரிக்க முடியும்? வெச்சா
வெச்சதுதான? அவனுவ வல்லவமா பேயி கீயி வலக்குரானுவ. ஏவுனா
ஏவுனதுதான்!!!)
மலாய்க்கார போமோக்கள், பாவாங்குகள், தாய்லாந்து போமோக்கள்,
சீன ஸின்ஸெ(ங்), தமிழ் சாமியாடிகளுடன், ஸெனோய்/ஸக்காய்/ஸெமாங்க்
போன்றோரின் ஷாமான் ஆகியோர் நிறைய இருக்கிறார்கள்.
ஸாபா, ஸாராவாக் ஆகிய இடங்களில் உள்ள நிலவரங்களைப்
பற்றி விரிவஞ்சி விடுத்தனம்.
மலேசியாவில் நிலவும் இந்த விஷயங்களைப் பற்றி பெரிய ஆய்வே
நடத்தி பேய்எச்டி. பட்டமே வாங்கிவிடலாம். என்னது என்னது?
பேய்எச்டி என்றா எழுதிவிட்டேன்? பிஎச்டி என்று திருத்தி வாசித்துவிடுங்கள்.
(பேய்எச்டி? ஏன்.... எழுதினேன்.....?ஏதாவது.......?????)

இன்னும் இருக்கிறது.....

அன்புடன்

ஜெயபாரதி


======================================================