From jaybee Tue Sep 21 05:16:15 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.259); by m5; 21 Sep 1999 12:19:14 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 20384 invoked from network); 21 Sep 1999 12:19:11 -0000
Received: from mta1.tm.net.my (202.188.95.4) by qg.egroups.com with SMTP; 21 Sep 1999 12:19:11 -0000
Received: from user ([202.188.69.231]) by mta1.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with SMTP id <19990921110129.FLIA22220@user>; Tue, 21 Sep 1999 19:01:29 +0800
Message-Id: <3.0.3.32.19990921185959.007a4cb0@...>
X-Sender: jaybee@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Tue, 21 Sep 1999 18:59:59 +0700
To: "agathiyar@egroups.com"
From: jaybee
Cc: Palaniappan A
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Hungry Ghost Festival#2
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2153



அன்பர்களே,

சிங்கை பழனி எழுதிய "Hungry Ghost Festival" பற்றிய
மடல் இது.
இந்த விழா சீனர்களை ஆண்டின் 7ஆவதுமாதத்தின்போது
நடைபெறும். இது கான்பியூஷியன்+தாவ் ஆகிய இரு பெரும் மரபினர்
கொண்டாடுவது.
ஓராண்டிற்கு ஒரு முறை நரகத்தின் வாயில்கள் திறந்துவிடப்
படுவதாக நம்புவார்கள். இது ஏழாம் மாதத்தில் நடைபெற்று, அந்த மாதம்
முழுமையும் நீடித்திருக்கும்.
இதன் மூலம் நரகவாசிகளான ஆவிகள் பேய்கள் நரகத்திலிருந்து
வெளிவந்து பூவுலகில் சஞ்சரிக்கும். சீனர்களின் நம்பிக்கைப்படி, செத்தபின்
நரகத்திற்கே ஆவிகள் செல்லும்.
வெளியில் வந்த அந்த ஆவிகளைச்சாந்தப்படுத்துவதற்காக
ஆவியரின் சந்ததியினர் படையல் வைத்து பூசைகள் நடத்தி, பிரார்த்தனைகள்
செய்வார்கள். சீனர்களின் மாதம்அமாவாசையிலிருந்து தொடங்கும். இந்த
வழிபாடுகள் பதினைந்து நாட்களுக்கு சிறப்பாக நடைபெறும். பௌர்ணமியுடன்
வீடுகளில் உள்ள வழிபாடு முடியும். அந்தசமயத்தில் ஆவிகள் வழிபாடுகள்
நடக்கும்போது வீடுகளுக்குள் புகுந்து ஏதேனும் படையல்கள் இருந்தால்
உட்கொண்டு செல்லும்.
வர்த்தகர்கள் ஆவிகளை "நல்ல சகோதரர்கள்" (Good Brothers)
என்று அழைப்பார்கள். அவை வர்த்தகத்திற்கு நிறைய துணைசெய்யும் என்று
நம்புவார்கள். ஆகவே வர்த்தகத்துறையினர் அந்த மாதம் முழுவதுமே விழாவைத்
தொடர்ந்து நடத்துவார்கள்.
சந்ததி, சொந்தபந்தம் உள்ள ஆவியருக்கு பூசைகள் கிட்டிவிடும்.
யாருமற்ற அனாதைகள், கண்காணா இடத்தில் யாரும் அறியாமல் மரணம்
அடைந்தவர்கள், அந்தியேஷ்டி சடங்குகள்செய்யப்பெறாதவர்கள் ஆகியோரின்
ஆவிகள் அமைதியற்று விளங்கும். அவைகொடூரம் நிறைந்தவையாகவும்
இருக்கும். மாந்தர்க்கு அவை ஊறு செய்யநினைக்கும்.
ஆகவே இந்த மாதத்தில் கடற்கரை, ஆற்றங்கரை, காடுகள், பிக்னிக்
போன்றவற்றிற்கு சீனர்கள் போகமாட்டார்கள். நள்ளிரவுப் பயணத்தையும்
வெகுவாகத் தவிர்ப்பார்கள்.
இந்த மாதத்தில் அதிகமான விபத்துக்கள் ஏற்படும் என்று நம்புகிறார்கள்.
இருக்கலாம்.
நாற்சந்தி, முச்சந்தி, குப்பைத்தொட்டிகள், சில மரத்தடிகள், போன்ற
இடங்களில் பேய்கள் உலவும். ஆகவே அந்தமாதிரி இடங்களில் பழங்கள்,
பலகாரங்கள் வைத்து ஊதுபத்தி வைத்துவிடுவார்கள். அந்த நோன்-க்ராட்டா
பேய்கள்(Spirita Non-grata; பேய்களைப்போய்பெர்ஸொனா கிர்ஸொனா
என்றெல்லாம் சொல்லக்கூடாது. கோபம்வரும். மனிதர்களை "பேய்" என்று
கூறினால் மனிதர்களுக்குக் கோபம் வருகிறது அல்லவா?) அவற்றைக் கொண்டு
திருப்தி அடையும்.
வர்த்தகர்கள் மாதம் முழுமைக்கும் வீதிகளின் ஓரங்களில் கூடாரங்கள்
அமைத்து, ஆங்காங்கு நாடகம், கச்சேரிபோன்றவற்றை நடத்துவார்கள்.
அந்தந்த இடத்து சமூகத்தினர் பெரிய பெரிய மேஜைகளில் உணவுவகைகளைப்
பரப்பிவைத்து, பொதுப்பந்தியில் உணவுஉண்பார்கள். யாரையும்
அழைக்கவும் மாட்டார்கள். ஆனால் தாங்களாக எடுத்து சாப்பிடுபவர்களை
விரட்டவும் மாட்டார்கள்.
தெருவெங்கும் கொடிகள் கட்டியிருப்பார்கள். கோயில்களிலும் விழா
நடக்கும்.
இந்த விழாவை ஹாக்கியன் மொழியில்பொ(ர்) டொ(ர்)[Por Tor]
விழா என்பார்கள்.
தெருவோரக்கூடாரங்களில் பெரிய பெரிய உருவங்களைச் செய்து
வைத்திருப்பார்கள். இந்த உருவத்தை பொடொ கொங்க் என்று அழைப்பார்கள்.
இந்த கொங்க், நரகத்தின் அரசர். பயங்கரமான முகத்துடன் விளங்குவார்.
ஆவிகள் படையல்களைப் பெறுவதைமேற்பார்வையிடுவதாக ஐதீகம்.
அவருடைய உச்சந்தலையின்மீது ஒரு சிறிய உருவம் இருக்கும்.
அது குவான் யின் போதிசத்துவாவின் உருவம். குவான் யின்னை
சீனர்கள் தயாமூர்த்தி (Goddess of Mercy) என்றுசொல்வார்கள்.
லட்சுமியின் அம்சமும் குவான் யின்னுக்குஉண்டு.
அனைத்து ஆவிகளுக்கும் சமமாக படையல்கள் கிடைக்கச்செய்வதற்காகவே
குவான் யின் அங்கு தோன்றுவதாகச்சொல்வார்கள்.வேகமும் உக்கிரமும் கொண்ட
ஆவிகள், படையல்களை முதலில் சென்றுபிடுங்கிக்கொண்டுவிடும். சாத்வீகமோ
பலவீனமோ கொண்ட ஆவிகளுக்கு போதிய படையல்கள் கிடைக்காமற்போகக்
கூடும்.
குவான் யின் போதிசத்துவாவின் ஒருஅவதாரந்தான் நரகத்தின் அரசர்
என்றும் ஒரு புராணம் கூறுகிறது.
இந்த விழா பௌத்தர்களின் உல்லம்பணாவிழாவின் போது சமகாலத்தில்
நிகழ்கிறது. இந்த உல்லம்பணா விழாவின்போது பிக்குகளுக்கு நிறைய
உணவு போன்றவற்றை சமர்ப்பித்து, அவர்களை மந்திர துதிகள் ஓதச்செய்து,
நல்ல கர்மாவைத் தேடி, அவற்றை தங்களின் மூதாதையருக்குச் சேருமாறு
செய்கிறார்கள்.
இந்த வழக்கம் புத்தர் காலத்திலிருந்துதோன்றியதாம். புத்தரின்
பிரதம சீடர் மொக்கலானர் தன்னுடையதாயார் நரகத்தில் பரிதவிப்பதைக்
கண்டார்; தன்னுடைய தாயை அந்த நிலையிலிருந்து காப்பாற்ற நினைத்து
இதனை புத்தரிடம் கூறினார். புத்தர் கூறிய அறிவுரைப்படி புத்தசங்கத்தின்
பிக்குகளுக்கு நிறைய உணவு, தானம் முதலியவற்றைக் கொடுத்து, அவர்களை
மந்திரங்கள் ஓதச்செய்தார். இதனை "தான சங்க" என்று சொல்வார்கள்.
இதன்மூலம் கிட்டிய நல்ல கர்மாவை தன்னுடைய தாயாருக்கு சமர்ப்பித்தார்.
தாயார் அதன்பின்னர் நல்ல பிறவியைஅடைந்தார். இந்த செய்தியும்
வியாக்கியானமும் கிஷ்டிகர்ப போதிசத்துவ சூத்திரத்தில் காணப்படுவது.
இந்துக்களாகிய நாம் ஆடி மாதத்திற்கென்று சில விசேட குணங்கள்
இருப்பதாக நினைக்கிறோம். தாந்திரீக நூல்களில் சில, ஆடிமாதம் எமனுடைய
மாதம் என்று கூறும். ஆடி அமாவாசையன்றுபிதுர்க்களுக்கு தர்ப்பணம் செய்கிறோம்.
ஆடி மாதத்தில் உடல் நலம் குன்றிய முதியவர்களின் உயிருக்கு ஆபத்து இருக்கும்
என்றும் நம்புகிறோம்.

மலைகள், காடுகள், கடல்கள், தூரம் ஆகியவற்றால் பிரிக்கப்
பட்டுள்ள பல்வேறு இனங்களுக்குள் ஏதோபொதுத்துவம் படைத்த சில இழைகள்
ஊடுருவி ஓடத்தான் செய்கின்றன.

அன்புடன்

ஜெயபாரதி

==============================================================