From Palaniappan A Tue Sep 21 09:27:56 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.259); by m5; 21 Sep 1999 16:30:56 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 13533 invoked from network); 21 Sep 1999 16:30:50 -0000
Received: from sunny.pacific.net.sg (203.120.90.127) by qg.egroups.com with SMTP; 21 Sep 1999 16:30:50 -0000
Received: from pop2.pacific.net.sg (pop2.pacific.net.sg [203.120.90.86]) by sunny.pacific.net.sg with ESMTP id AAA17091; Wed, 22 Sep 1999 00:30:44 +0800 (SGT)
Received: from liverpool.ntu.edu.sg (ppp211.dyn69.pacific.net.sg [210.24.69.211]) by pop2.pacific.net.sg with SMTP id XAA02928; Tue, 21 Sep 1999 23:40:57 +0800 (SGT)
Message-Id: <3.0.3.32.19990921113713.019b0790@...>
X-Sender: pala@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.3 (32)
Date: Tue, 21 Sep 1999 11:37:13 +0800
To: agathiyar@egroups.com, globaltamil@...
From: Palaniappan A
In-Reply-To: <3.0.3.32.19990921185959.007a4cb0@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Hungry Ghost Festival#2
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2161

இஅன்பு டாக்டர் JB மற்றும் நண்பர்களே,
<வர்த்தகர்கள் ஆவிகளை "நல்ல சகோதரர்கள்" (Good Brothers)
>என்று அழைப்பார்கள். அவை வர்த்தகத்திற்கு நிறைய துணைசெய்யும் என்று
>நம்புவார்கள். ஆகவே வர்த்தகத்துறையினர் அந்த மாதம் முழுவதுமே விழாவைத்
>தொடர்ந்து நடத்துவார்கள்.>

அதை ஏங்க கேக்கிறீங்க! ஒரு மாதம் முழுவதும் ஒரே தொல்லைங்க இங்கே!
சிங்கை மக்களில் கிட்டத்தட்ட 90 விழுக்காட்டினர் அடுக்குமாடி வீடுகளில் வசிக்கிறோம். நீங்கள் எவ்வளவு
உயரத்தில் வசிக்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு சத்தம் வரும். 3-4 ம் மாடியில்இருப்பவர்களுக்கு இரைச்சல்
அதிகம் கேட்காது. மரக்கிளைகள் ஓரளவுசத்தத்தை தணித்துவிடும். எங்கள் குடும்பம் 23ம்
மெத்தையில்-மாடிதாங்க அது மெத்தையும்னு சொல்லுவோம். ஒவ்வொரு உயர்மாடிக்கட்டடத்தின் கீழ் காலித்
தளம் -void deckஇ ஒன்று இருக்கும். அங்கு மாலாய்க்காரர்கள் திருமணத்தை நடத்துவார்கள். ஒலி
பெருக்கியை வைத்து இந்துஸ்தானி பாடல்களைப் பாடுவார்கள். அது காலை 11 மணிக்குத் தொடங்கி பிற்பகல்
3 மணி வரை தொடரும். ஞாயிற்றுக்கிழமை சற்று ஓய்வாத் தூங்கலாம்னா முடியாதுங்க. சீனர்களில் யாராவது
மண்டையைப் போட்டுவிட்டால் சவத்தை அந்தக் கீழ்த்தளத்தில் ஒரு வாரத்திற்குவைத்திருப்பார்கள். அத்துடன்
தவ்(tao) மதக்குருக்கள் இரவு நேரங்களில் வந்து ஓதுவார்கள். அந்தச் சத்தமும் மேலே வரும். ஆனால் எல்லாம்
இரவு பத்து மணிக்கு மேல் அடங்கிவிடவேண்டும்.
இந்த பேய் மாதத்தில் கடைவைத்திருப்பவர்கள், அங்காடி வியாபாரிகள் என பலர் ஒன்று சேர்ந்து சாமி
கும்பிடுவதுடன் சீனக்கூத்து,கலை நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். அவற்றிற்காகஅடுக்குமாடி வீடுகளில் உள்ள
(நம்மவர்களையும் சேர்த்துத்தான்) எல்லோரிடமும் நன்கொடை கேட்டு வருவார்கள்.சிறிய தொகை
கொடுப்போம். இந்த நிகழ்ச்சிகள் வீடமைப்பு பேட்டை(housing estate) யில் உள்ள திடல்களில்
நடத்தப்படும். அப்போது அங்கிருந்தும் ஒலி மேல் அழுந்து எங்கள் வீட்டிற்குள் புகுந்துவிடும். இத்தகைய
நிகழ்ச்சிகளின்போது ஏலம் விடுவார்கள். ஒரு சில பொருட்களை ஏலத்தில்விடுவார்கள். சில
அதிர்ஷ்டத்தைத் தரக்கூடியது எனக்கருதப்படுவதால் அதிக விலைக்கு ஏலத்தில்வாங்குபவர்களும் உண்டு. ஏலம்
விடும் அறிவிப்பாளர் அண்டசராசரம்அனைத்திற்கும் எட்டும் வகையில் சத்தம்போடுவார். எங்கள் 23வது
மாடி எம்மட்டில்?
பல இன சமுதாயத்தில் இது எல்லாம் இயல்புதான். சகிப்புத்தன்மை எல்லோருக்கும்அதிகம். இருந்தாலும்
இவர்களை தை மாதம் நான் வஞ்சம் தீர்த்துக்கொள்வேன். எப்படி?
தைப்பூசத்திற்காக மக்கள் பெருமாள்கோயிலில் முன்தினமே கூடிவிடுவார்கள். அன்றிரவு முழுவதும் பக்திப்
பாடல்களை ஒலிபரப்பியும், அறிவிப்புகளைச் செய்தும்(தோபாயோ தாமோதரன் அங்மோ கியா ஆண்டியப்பனை
விநாயகர் சன்னிதானத்தில் சந்திக்கவும். அலகு குத்திக்கொள்வதற்காக அவர் காத்திருக்கிறார்)
அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை தூங்கவிடுவதில்லை!:-))

> அது குவான் யின் போதிசத்துவாவின்உருவம். குவான் யின்னை
>சீனர்கள் தயாமூர்த்தி (Goddess of Mercy) என்றுசொல்வார்கள்.
>லட்சுமியின் அம்சமும் குவான் யின்னுக்குஉண்டு.>

இத்தெய்வம் இப்போது நம் கோயில்களில் உள்ளதைப் பற்றி நாளை கொஞ்சம்எழுதுகிறேன்.

அன்புடன்
பழனி

>
>அன்பர்களே,
>
> சிங்கை பழனி எழுதிய "Hungry Ghost Festival" பற்றிய
>மடல் இது.
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
>
>==============================================================
>
>
>------------------------------------------------------------------------
>@Backup - The #1 Online Backup Service. Protect your files before
>you lose them. Easy, Reliable, Secure online backups. INSTALL
>today. http://clickhere.egroups.com/click/938
>
>
>eGroups.com home: http://www.egroups.com/group/agathiyar
>http://www.egroups.com - Simplifying group communications
>
>
>
>
>