From Tue Sep 21 16:26:02 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.259); by m5; 21 Sep 1999 23:29:02 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 7080 invoked from network); 21 Sep 1999 23:28:59 -0000
Received: from dragonfire3.delta-air.com (HELO satlmsghub03.delta-air.com) (216.79.105.22) by qg.egroups.com with SMTP; 21 Sep 1999 23:28:59 -0000
Received: by satlmsghub03.delta-air.com with Internet Mail Service (5.5.2448.0) id ; Tue, 21 Sep 1999 19:32:05 -0400
Message-ID: <9130EFB0684CD211869E0020484016B501C4C335@...>
From: "Chandrasekaran, Periannan"
To: "'agathiyar@egroups.com'"
Date: Tue, 21 Sep 1999 19:28:58 -0400
MIME-Version: 1.0
X-Mailer: Internet Mail Service (5.5.2448.0)
Subject: [agathiyar] "cURaik kARRu": What does "cURai" really mean?
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="ISO-8859-1"
Content-Transfer-Encoding: base64
X-Yahoo-Message-Num: 2171

சூறைக்காற்று என்கிறோமே அங்குச் சூறை யென்னும் சொல்லின் பொருளென்ன?!

கழகத் தமிழகராதி:
சூறை = சுழற்காற்று!
அதாவது காற்று என்னும் சொல்லின்றியே சுழல்காற்றென்னும் பொருள்படும்.!
[இங்குக் குறிப்பிட வேண்டிய மற்றோரு தலையாய புள்ளி:
தமிழில் பல நூற்றாண்டுகளாக இவ்வாறு "தேவைக்குமேல்" சொற்களைக் கோத்து வழங்கி
நமக்குப் பழகியதால் நீண்ட தொடர்களை வழங்கும் ஒரு "கெட்ட பழக்கம்" ஊறிவிட்டதுபோல்
தோன்றுகிறது; நல்ல வலிய வேர்ச்சொற்களும் புதைந்துபோய்விடுகின்றன; இது செக்கச்செவேல்
நட்ட நடு கன்னங்கரிய என்று பேசும் மனப்பான்மையினின்றும் பிறழ்ந்ததாகத் தெரியவில்லை! ]

சூறை < சூறு
சூறு(தல்) = சுழல்(தல்) = சூழ்தல்!

மேலும் சில சான்றுகள்:
சூறாவளி = சுழல்காற்று
சுறையாடுதல் = கொள்ளையடித்தல்; *தலை சுற்றுதல்*


முன்னரே குறிப்பிட்டதேபோல் தொடர்களின் கூறுகளைப் பகுத்தாய்ந்தால்
பல அழகிய அரிய வேர்ச்சொற்கள் கிட்டும்!