From Tue Sep 21 16:54:18 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.259); by m5; 21 Sep 1999 23:57:15 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 21548 invoked from network); 21 Sep 1999 23:57:04 -0000
Received: from gull.prod.itd.earthlink.net (207.217.121.85) by qg.egroups.com with SMTP; 21 Sep 1999 23:57:04 -0000
Received: from default (pool0202.cvx1-bradley.dialup.earthlink.net [209.178.128.202]) by gull.prod.itd.earthlink.net (8.9.3/8.9.3) with SMTP id QAA17963 for ; Tue, 21 Sep 1999 16:56:57 -0700 (PDT)
Message-ID: <005201bf0471$0759bb80$ca80b2d1@default>
From: "N. Swaminathan"
To:
Date: Tue, 21 Sep 1999 16:36:42 -0400
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
Subject: [agathiyar] Re: Walking with head
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2173

>ஒரு நாள் பரமதத்தன், (மாம்பழப் பிரியன்) , தன் கடையில் இருக்கும் போது வாங்கிய
>2 மாம்பழங்களை வீட்டிற்கு அனுப்புகிறான். இதன் நடுவே அன்று உணவருந்த வந்த
>சிவனடியார்க்கு ஒரு மாம்பழத்தை புனிதா அளித்துவிடுகிறாள். கணவன் மதிய உணவிற்கு
>வந்தவுடன் ஒரு மாம்பழத்தை இலையில் வைக்கிறாள். அதனை சாப்பிட்ட பரமதத்தன்
>இன்னோர் மாம்பழம் எங்கே என கேட்க, புனிதாவிற்கோ சங்கடம். சிவனடியார்க்கு
>அளித்த விஷயத்தை எப்படிச் சொல்வது..

பாவம் புனிதா, சினிமா பாத்ததில்ல. பாத்திருந்தா சொல்லியிருப்பாங்க
"அந்தப்பழம் தாங்க, இந்தப்பழம்"னு, செந்தில் வாழைப்பழ ஜோக் மாதிரி.

...................
>இதற்கு முன்னரும் ஒரு இதழில், சுவாமிமலை அருகில் உள்ள திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர்
>பற்றி குறிப்பிட்டிருந்தனர். பாற்கடலைக் கடையும் போது இந்திரன் மற்றும் தேவர்கள் வெகுநேரம்
>கடைந்தபிறகும் அமிர்தம் கிடைக்காதலால், இறைவனிடம் முறையிட, அவர் விநாயகரை வழிபட
>மறந்ததால் தான் அப்படி என கூற, உடனே விநாயகருக்கு எங்கே செல்வது என்றெண்ணி
>கடலின் நுரையையே விநாயகராய் உருவகித்து பூஜித்தபின் அமிர்தம் (அமுதம் ?) கிடைத்ததாகவும்
>கதை.
>
>இணைய அன்பர்கள் யாரேனும் திருவலஞ்சுழி வெள்ளை விநாயகரை தரிசித்ததுண்டா ?

திருவலஞ்சுழி விநாயகரை தரிசித்திருக்கிறேன். தற்பொழுது அக்கோயில்
சற்று சிதிலமடைந்து இருக்கிறது.

சுவாமிமலை புகைவண்டி நிலயத்திலிருந்து வரும் பொழுது முதலில் வருவது
திருவலஞ்சுழி கிராமம். சுவாமிமலைக்கு போக அரசலாறு, காவிரி இரண்டையும் தாண்டி வரவேண்டும்.
அக்காலத்தில் அங்கு மரப்பாலங்கள் இருந்தன. மரக்கட்டைகளால் ஒரு அடி இடைவெளிவிட்டு
போட்டிருப்பார்கள். மேலே நடக்கும்போது தண்ணீர் கீழே வேகமாக ஓடுவது தெரியும்.
கரணம் தப்பினால்... எதற்கும் இருக்கட்டும் என்று முன்னெச்சரிக்கையாக பிள்ளையாருக்கு
ஒரு தோப்புக்கரணம் போட்டுவிட்டுத்தான் பாலத்தைக் கடப்போம். அதேபோல் சுவாமிமலையிலிருந்து
புகைவண்டி நிலையத்துக்கு வருமுன் ஒரு சிறு பிள்ளையார் கோயில் உண்டு.
அப்புறம் காங்கிரீட் பாலம் வந்தது. சிறிய பாதையில் எதிருக்கு எதிர் வரும் வண்டிகள்
கண்டு ஜனங்கள் உடனே பிள்ளையாரை நினைப்பார்கள்.

பிள்ளையாரும் காலத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு விட்டார். கணினி பற்றி
எல்லாம் தெரிந்துவிட்டது என்ற திமிர் வந்தவுடன் தமிழ் எழுத்தைப்புரியாமல் அடித்துவிடுகிறார்.(;-)
User defined ஆக இருக்கலாம், பிள்ளையார் approval இல்லாமல் நடக்காது.

ஆனை முகத்தோனே ஐந்துகரத்
தாலருள்வாய் கோனே- அன்பருளத்
தேன்வண்டு பாடிடும் தீந்தமிழ் சோலையில்
தேடியுன் பொன்னடியைப் பாடி பணிந்து நின்றேன்
குற்றங்குறைகளெல்லாம் நீக்கிடுவாய் மக்கள்
குணமெனும் குன்றேறத் துணையிருப்பாய் பிறப்பை
உற்றுணர்வார் தமக்கே உயர்வளிப்பாய் என்றும்
ஓமெனும் உருவத்தில் நிறைந்திருப்பாய் எந்தை (ஆனை)


யாரு பாடினது? தமிழிசை இயக்க எம்.எம். தண்டபாணி தேசிகர்தான் !

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
===============


-----Original Message-----
From: Subramanian
To: agathiyar@egroups.com
Date: Tuesday, September 21, 1999 4:15 AM
Subject: [agathiyar] Walking with head


>அகத்திய இணைய அன்பர்களுக்கு,
>
>வணக்கம். சில நாட்கள் முன், தலையால் நடப்பது பற்றி, சில மடல்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
>சென்ற வார குமுதத்தில் (செப்-23) குறிப்பிடப்பட்டுள்ள விபரத்தை இங்கு சுருக்கித்
>தருகிறேன். விட்டுப்போன விபரத்தை குமுதம் கையில் உள்ளவர்கள் எழுதவும்.
>
>இதைப் போன்ற தல-வரலாறு குமுதத்தில் வந்தால் எப்படி இருக்கும் என்பதும் இதைப்
>படித்தால் புலப்படும். அவர்கள் ஸ்டைல் அப்படி ;-) மற்றபடி சொல்லியிருக்கும் விஷயங்கள்
>பற்றி இணைய அன்பர்கள் தங்கள் கருத்துக்களை எழுதவும்.
>
>நன்றி.
>சுப்ரமணியன்.
>
>
>---------------
>முதலிரவு.. தன் பக்கத்தில் அழகுப் பதுமையாக உட்கார்ந்திருந்த புனிதாவைக் கணவன்
>பரமதத்தன் ஆசையுடன் பார்த்தான். இவ்வளவு அழகா..என் மனைவி.. அள்ளி அணைத்தான்.
>
>நாகப்பட்டிணத்தில் வணிகம் செய்யும் தனதத்தன் தன் மகளை நல்ல இடத்தில் திருமணம்
>செய்துகொடுத்ததாய் எண்ணி, மருமகன் (காரைக்கால் வணிகன்) பரமதத்தன் பிற்காலத்தில்
>தன் வணிகத்தை ஏற்று நடத்துவான் என்பது அத்தந்தையின் அவா.
>
>புனிதாவும் பரமதத்தனும் தனிக்குடித்தனம் ஆரம்பித்தனர். பிறந்தவீட்டு வழக்கப்படி
>புனிதா சிவபக்தியில் வழிபாடும் சிவத் தொண்டு செய்தும் வாழ்ந்துவந்தாள். தினமும்
>சிவ அடியார்க்கு உணவு அளிக்கும் வழக்கமும் உண்டு.
>
சிவனிடம் மன்றாடுகிறாள். அப்போது அவள்
>கையில் ஓர் மாம்பழம் கிடைக்கிறது. அதை கணவனுக்குப் படைக்கிறாள்.
>
>இந்த புதிய மாம்பழத்தை உண்ட பரமதத்தன், என்ன இது.. இதன் சுவை மிக நன்றாக
>உள்ளதே.. நான் வாங்கி வந்த மாம்பழம் வேறு மாதிரி சுவை கொண்டதாக அல்லவா
>இருந்தது.. என கேட்க, புனிதா நடந்ததைச் சொல்கிறாள். அதை நம்பாத பரமதத்தன்,
>எங்கே மறுபடியும் மாம்பழம் வரவழை பார்ப்போம் என வினவ, புனிதா மறுபடியும்
>இறைவனை வேண்டுகிறாள். மறுபடியும் மாம்பழம் கிடைக்கிறது. இதைப் பார்த்த
>பரமதத்தனுக்கோ கிலி.. என்ன இந்தப் பெண்..ஏதோ கடவுள் சக்தியுள்ளவளாய் இருப்பாள்
>போல என நினைத்து சில நாட்களில் வீட்டை விட்டு ஓடி பாண்டிய நாட்டில் வேறு ஒரு
>பெண்ணுடன் திருமணம் செய்துகொண்டு வாழ்கிறான். குழந்தையும் பிறக்கிறது.
>
>இதை அறிந்த புனிதா, அழுகிறாள்.. கணவனைத் தேடி புறப்படுகிறாள். அங்கு சென்று
>பலரிடம் முறையிட, பரமதத்தனோ 'இந்தப் பெண் தெய்வ சக்தி வாய்ந்தவள் இவளுடன்
>எப்படி குடும்பம் நடத்துவது' என்று கூறி எல்லோரையும் அவள் காலில் விழுந்து வணங்கச்
>சொல்கிறான்.
>
>புனிதாவுக்கோ சோகம். சிவனிடம் முறையிடுகிறாள்.. எனது இந்த அழகான உருவமும்,
>உடலும் எனது கணவனுக்காகத்தானே.. அவரே இதை வேண்டாமென்று ஒதுக்கும்போது
>இதை வைத்து நான் என்ன செய்வேன்..
>
>அழகான உருவம் கொண்ட புனிதா பேயுருவம் கொள்கிறாள். சிவனை தரிசிக்க
>கைலாயம் நோக்கி நடக்கிறாள். கைலாயம் சிவனின் பூமி என்பதால் தனது கால்
>படக்கூடாது என்பதற்காக 'தலையால்' நடக்கிறாள்.
>
>இதுதான் காரைக்கால் அம்மையாரின் கதை ... என குமுதம் கூறுகிறது.
>
>-------------------------------
>
>
>
>------------------------------------------------------------------------
>@Backup - The #1 Online Backup Service. Protect your files before
>you lose them. Easy, Reliable, Secure online backups. INSTALL
>today. http://clickhere.egroups.com/click/938
>
>
>eGroups.com home: http://www.egroups.com/group/agathiyar
>http://www.egroups.com - Simplifying group communications
>
>
>
>
>