From Tue Sep 21 17:45:27 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.259); by m5; 22 Sep 1999 00:48:27 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 17478 invoked from network); 22 Sep 1999 00:48:25 -0000
Received: from dfw-ix6.ix.netcom.com (206.214.98.6) by qg.egroups.com with SMTP; 22 Sep 1999 00:48:25 -0000
Received: (from smap@localhost) by dfw-ix6.ix.netcom.com (8.8.4/8.8.4) id TAA28510 for ; Tue, 21 Sep 1999 19:48:21 -0500 (CDT)
Received: from pc-242-57.corp.3com.com(139.87.242.57) by dfw-ix6.ix.netcom.com via smap (V1.3) id rma028462; Tue Sep 21 19:47:58 1999
Message-ID: <009601bf0494$3ddc9380$39f2578b@...>
From: "Mani M. Manivannan"
To:
Date: Tue, 21 Sep 1999 17:48:52 -0700
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.5
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
Subject: [agathiyar] Re: Walking with head
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Yahoo-Message-Num: 2176

கவிராயர் சுவாமிநாதன் எழுதினார்:

>>இணைய அன்பர்கள் யாரேனும் திருவலஞ்சுழி வெள்ளை விநாயகரை தரிசித்ததுண்டா ?

>திருவலஞ்சுழி விநாயகரை தரிசித்திருக்கிறேன். தற்பொழுது அக்கோயில்
>சற்று சிதிலமடைந்து இருக்கிறது.

சென்ற முறை தமிழகம் சென்றபோது, சுவாமிமலைக்குச் செல்லும் வழியில்
ஓட்டுநர் வற்புறுத்தியதால் இந்தக் கோவிலுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது.
கோவில் மிகப் பெரிய சிவன் கோவில். பிற்காலச் சோழர் காலத்தில்
கட்டியிருக்க வேண்டும். கோவில் மண்டபங்கள் ஓலைகூரைவீடுகளின்
அமைப்பை ஒத்திருந்தன. தஞ்சைப் பெரிய கோவில் போலவே பல பிரகாரங்கள்.
கோவிலின் முகப்பில் மாடு மேய்ந்து கொண்டிருந்தது. ஒரே ஒரு ஊனமுற்ற
முதியவர் மட்டும் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். கோவிலுக்குப் போகும்
முன்னால் பிச்சையிட்டுப் போக வேண்டும், வணங்கி விட்டு வந்தபின் பிச்சை
இட்டால் தம் வரங்களையும் சேர்த்தே கொடையாக அருளிவிடுவோம் என்ற
நம்பிக்கை உள்ள என் மனைவி பிச்சைக்காரரைத் தேடிப்போய் பணம் கொடுத்து
விட்டு வந்தார்.

கோவிலில் யாரும் இல்லை. ஒவ்வொரு சன்னதியாய்ப் பார்த்து விட்டு வலஞ்சுழிப்
பிள்ளையார் திருக்கோவிலை அடைந்தோம். அர்ச்சகர், தலவரலாறு சொன்னார்.
நுரையில் செய்த திருச்சிலை என்பதால் அதற்கு அபிஷேகங்கள் இல்லை என்றார்.
மற்ற சன்னதிகள் போலில்லாமல், வலஞ்சுழிப்பிள்ளையார் சன்னதியின் நுழை
வாயில் பிள்ளையாருக்கு வலப்புறம் மட்டும் உள்ளது. ஆனால், கோவிலின்
நுழைவாயிலிலிருந்து வருபவர்கள் பிள்ளையாரைப் பார்க்க ஒரு சின்ன சாளரம்
அமைத்திருக்கிறார்கள். பிள்ளையார் கோவிலின் மூலவர் இல்லை. ஆனால்,
கோவிலுக்கு அவர் புகழால் ஒரு சிலராவது வருகிறார்கள்.

கோவில் மதில்களில் நந்திகளோடு செடி கொடிகளும் பாசியும் படர்ந்திருந்தன.
சோழப்பெருவேந்தர்கள் கொடி கட்டிப் பறந்த காலத்தில் இந்தக் கோவில்
எப்படி கலகலப்பாக இருந்திருக்கும் என்று எண்ணிப்பார்த்தேன். பெசன்ட் நகர்
அஷ்டலக்ஷ்மி கோவிலில் குகைக்குள் போவதுபோல் கூனிக் குறுகிக் கூட்டத்தின்
இடையில் அடிபட்டு, நசுங்கிச் சென்றிருந்த எனக்கு, விரிந்து பரந்த இந்த மாபெரும்
கோவிலுக்கு வழிபடுவோர் வருவது குறைவு என்றறிய வியப்பாக இருந்தது. இந்தக்
கோவிலைப் பராமரிக்கச் சோழ மன்னர்கள் அளித்திருந்த நிலமெல்லாம் இன்னும்
கோவிலுக்கு உரிமையாக உள்ளதாம். ஆனால், குத்தகைக்காரர்கள் (சாதி, கட்சி
வேறுபாடில்லாமல்) சிவன் கோவில் சொத்தைத் தின்று வாழ்கிறார்களாம்.

பிள்ளையாரை வணங்கி விட்டுக் கவிராயர் குறிப்பிட்ட பாலங்களைக் கடந்து
சுவாமிமலைக்குச் சென்றோம். சுவாமிநாதன் இளம்பருவத்தில் அப்போது
காவிரியிலும், அரசலாற்றிலும் தண்ணீர் கீழே "வேகமாக ஓடுவது" தெரிந்திருக்கலாம்.
நாங்கள் சென்ற கார்த்திகைத் திங்களில் மணல்தான் தெரிந்தது.

இந்த மடலிழையில், பேரா. சுவாமிநாதன் சங்கரன் அவர்கள் "சுவாமிமலை
அடிவாரத்தை"ப் பற்றி எழுதி இருந்தார். சுவாமிமலையில் எனக்கு ஏற்பட்ட
பெரும் வியப்பு, அங்கே மலையே இல்லை! இரண்டு மாடிக் கட்டிடம் என்று
வேண்டுமானால் சொல்லலாம். முன்னொருகாலத்தில் சுவாமிமலை ஒரு
குன்றாக (அல்லது மேடாக) இருந்திருக்குமோ? பொதுவாக, தஞ்சைத் தரணியில்
மலை, குன்று என்று சொல்லக்கூடிய அளவுக்கு எதையுமே பார்க்கவில்லை.
அதனால்தான், அங்கே சோழர்கள் எப்படி இவ்வளவு பெரிய கோவில்களைக்
கட்டினார்கள் என்று பெரும் வியப்பு ஏற்பட்டது!

>பிள்ளையாரும் காலத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு விட்டார். கணினி பற்றி
>எல்லாம் தெரிந்துவிட்டது என்ற திமிர் வந்தவுடன் தமிழ் எழுத்தைப்புரியாமல்
>அடித்துவிடுகிறார்.(;-) User defined ஆக இருக்கலாம், பிள்ளையார் approval
>இல்லாமல் நடக்காது.

:-))). +AK0AqAC+APQAwADKAOwAuA- +ANMAygC4AKIAyAC+AKE- ?

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
நூவர்க், கலி., அ.கூ.நா.