From jaybee Wed Sep 22 03:44:38 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.259); by m5; 22 Sep 1999 10:47:38 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 21108 invoked from network); 22 Sep 1999 10:47:36 -0000
Received: from smtp.mail.yahoo.com (128.11.68.32) by qg.egroups.com with SMTP; 22 Sep 1999 10:47:36 -0000
Received: from sp-69-17.tm.net.my (HELO user) (202.188.69.17) by smtp.mail.yahoo.com with SMTP; 22 Sep 1999 03:52:25 -0700
Message-Id: <3.0.3.32.19990922184628.0085a3c0@...>
X-Sender: jaybee555@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Wed, 22 Sep 1999 18:46:28 +0700
To: agathiyar@egroups.com
From: jaybee
Cc: "Chandrasekaran, Periannan" , "Chandrasekaran, Periannan"
In-Reply-To: <9130EFB0684CD211869E0020484016B501C4C335@... a-air.com>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: "cURaik kARRu": What does "cURai" really mean?
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2184

At 07:28 PM 9/21/99 -0400, you wrote:
>சூறைக்காற்று என்கிறோமே அங்குச் சூறையென்னும் சொல்லின் பொருளென்ன?!
>
>கழகத் தமிழகராதி:
>சூறை = சுழற்காற்று!
> அதாவது காற்று என்னும் சொல்லின்றியே சுழல்காற்றென்னும் பொருள்படும்.!
>[இங்குக் குறிப்பிட வேண்டிய மற்றோருதலையாய புள்ளி:
>தமிழில் பல நூற்றாண்டுகளாக இவ்வாறு"தேவைக்குமேல்" சொற்களைக் கோத்துவழங்கி
>நமக்குப் பழகியதால் நீண்ட தொடர்களை வழங்கும் ஒரு "கெட்ட பழக்கம்" ஊறிவிட்டதுபோல்
>தோன்றுகிறது; நல்ல வலிய வேர்ச்சொற்களும் புதைந்துபோய்விடுகின்றன; இதுசெக்கச்செவேல்
>நட்ட நடு கன்னங்கரிய என்று பேசும்மனப்பான்மையினின்றும் பிறழ்ந்ததாகத் தெரியவில்லை! ]
>
>சூறை < சூறு
>சூறு(தல்) = சுழல்(தல்) = சூழ்தல்!
>
>மேலும் சில சான்றுகள்:
>சூறாவளி = சுழல்காற்று
>சுறையாடுதல் = கொள்ளையடித்தல்; *தலைசுற்றுதல்*

"சூறையிடுதல்" அல்லது "சூறை விடுதல்" என்பது பொருள்களை
நாலாபக்கத்திலும் சிதற வீசிவிடுதல் என்றும் அர்த்தமிருக்கிறது.
சிங்கம்புணரியில் தேரோட்டத்தன்று தேர் நிலை குத்திய பிறகு,
வாழைத்தார்களிலிருந்து வாழைப்பழங்களைப் பிய்த்தெடுத்து, தேர் மண்டபத்தின்
உச்சியிலிருந்து நாலாபக்கங்களிலும்வீசி எறிவார்கள். மக்கள் அவற்றைப்பிடித்துக்
கொள்வார்கள். இதை "சூறை விடுதல்" என்பார்கள்.
இது முடிந்ததும் ஆயிரக்கணக்கான தேங்காய்களை ஆங்காங்கு
நின்றுகொண்டு சரமாரியாக தேர்முட்டியின் பக்கவாட்டுச் சுவரின்மீது வீசி
எறிவார்கள். தேங்காய்கள் சுவற்றில்மோதி, உடைந்தும் உடையாமலும்,
எகிறி விழும்.
இதனை, "சூறைத் தேங்காய்" என்று அழைப்பர்கள்.
அதுபோலவே பத்தாம் நாள் பூப்பல்லக்குமுடிந்தபின்னர், பல்லக்கில்
தொங்கும் மல்லிகைச் சரங்களைப் பிய்த்து நாலாபக்கமும் போடுவார்கள்.
இதனையும் "சூறை விடுதல்" என்றுதான்சொல்வார்கள்.

"சூறாவளி"யில் "வளி" என்பது காற்றைக்குறிக்கும் சொல்.
சூறாவளி ஒரு சுழற்காற்று. சுழற்காற்றுகளின் நடுவில் காற்றழுத்தம்
குறைவாகவும், மேல்நோக்கி காற்றின்ஓட்டம் அமைந்தும் இருப்பதால்,
எந்தப் பொருள்களும் தரையிலிருந்து பறித்து, எடுத்து, இழுக்கப்பட்டு,
மேலே தூக்கப்பட்டு, உயரத்திலிருந்துநாலாபக்கமும் விசிறி எறியப்படும்.
"Tornado", "Twister" ஆகியவற்றில் பார்த்திருக்கிறோமே.
பொருள்களை சூறை விடும் தன்மை படைத்ததால் அந்தக்
காற்றுக்கு சூறாவளி என்று பெயராகும்.சூறைக்காற்று என்றாலும்
அதுதான்.

அன்புடன்

ஜெயபாரதி
>
>
>முன்னரே குறிப்பிட்டதேபோல் தொடர்களின் கூறுகளைப் பகுத்தாய்ந்தால்
>பல அழகிய அரிய வேர்ச்சொற்கள் கிட்டும்!
================================================