From othuvar Wed Sep 22 06:44:44 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.259); by m5; 22 Sep 1999 13:47:44 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 26202 invoked from network); 22 Sep 1999 13:37:14 -0000
Received: from pop.tm.net.my (HELO pop1.tm.net.my) (202.188.95.1) by qh.egroups.com with SMTP; 22 Sep 1999 13:37:14 -0000
Received: from tm.net.my ([202.188.182.78]) by pop1.tm.net.my (InterMail v03.02.05 118 121 101) with ESMTP id <19990922133706.CTI383@...>; Wed, 22 Sep 1999 21:37:06 +0800
Message-ID: <37E8DBB1.51CA0D40@...>
Date: Wed, 22 Sep 1999 21:37:53 +0800
From: othuvar
X-Mailer: Mozilla 4.6 [en] (Win95; I)
X-Accept-Language: en
MIME-Version: 1.0
To: agathiyar@egroups.com
CC: "N. Swaminathan" , "Mani M. Manivannan"
References: <3.0.3.32.19990922184037.00850b60@...>
Subject: [agathiyar] Re: Walking with head
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset=x-user-defined
Content-Transfer-Encoding: 8bit
X-Yahoo-Message-Num: 2191

திருச்சிற்றம்பலம்

அன்பிற்கினிய அகத்தியர்களே,
திருவலஞ்சுழி விநாயகரைப்பற்றி அகத்தியத்தில் படிக்க
நேர்ந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.
2ஆண்டுகளுக்கு முன் வீடியோவில் ஸ்ரீ விநாயகரைப்பற்றி
ஒரு செய்திப்படம் எடுக்க பெரு முயற்சி செய்து டாக்டர் அவர்கள்
ஆரம்பித்தார்கள்.
இந்த செய்திப்படத்தின் வெள்யீட்டாளர் டாக்டர் ஸ்ரீ ஜெயபாரதி அவர்கள்.
கேமராவில் படம் எடுப்பது ,டைரைக்பன்னுவது யாவும் என்னுடைய வேலை.
கதையின் கருப்பொருள் படத்தின் கதை யாவும் டாக்டரைச் சேர்ந்தது.
இந்தப் படத்தில் விநாயகரைப்பற்றிய முழு கதையும் எடுத்துவிட்டோம்
என்றே நினக்கிறேன். இதுவரையில் 12மணி நேர நீழமுடைய படம்
எடுத்தாகி விட்டது. இதைச் சுருக்கி 6மனி நேரமாக்க வேண்டும் என்று
டாக்டர் கூறுகிறார். இன்னும் முடியவில்லை. விநாயகர்தான் முடித்து
வைக்க உங்கள் எல்லாருடைய சார்பாகவும் பிரார்த்திக்கின்றேன்.
அதிகமாக எழுதியிருந்தால் பொருத்தருளவும்.
நன்றி. வணக்கம்.
திருச்சிற்றம்பலம்.
ஓதுவார்.

jaybee wrote:

> அன்பர்களே,
>
> திருவலஞ்சுழி விநாயகரைப்பற்றி சுமன், சாமிநாதக்கவிராயர்,
> கணியன் மணியனார் ஆகியோர் எழுதக்கண்டீர்கள். இதைக் கண்ட
> பிறகு கடாரத்துப் பெரும்பூதனார்(பெயர்ப் பொருத்தத்தைப் பற்றி
> சிங்கைப் பழனியிடம் கேட்டுக்கொள்ளவேண்டியது) வாளாவிருத்தல்
> கூடுமோ?
> திருவலஞ்சுழியில் உள்ள பிள்ளையாரை "வெள்ளைப் பிள்ளையார்"
> என்றும் "ஸ்வேத விநாயகர்" என்றும் அழைப்பார்கள். பால்கடலைக் கடைந்த
> போது அமிர்தம் தோன்றாமையினால், தேவர்கள் கடல்நுரையைப் பிடித்து
> வைத்து விக்னேசுவரப் பூசை செய்ததாக ஐதீகம். மூர்த்தமும் வெள்ளை
> நிறமாக இருக்கிறது. வாணி, கமலா என்னும் இரு தேவியர் உற்சவ
> மூர்த்திக்கு இரு மருங்கிலும் இருக்கின்றனர்.
> இவர்தான் அந்த கோயிலின் முக்கிய மூர்த்தியாக இருக்கிறார்.
> சிறிய உருவம். "மூர்த்தி சிறிசானாலும் கீர்த்தி பெரிசு", என்ற வழக்கு
> இவருக்குத் தான் மிகப் பொருந்தும்.
> மூர்த்தத்தைக் கையால் தொடமாட்டார்கள். பச்சைக் கற்பூரத்தைக்
> கொண்டே அபிஷேகம் செய்கிறார்கள். வேறெந்தப் பொருளும் பயன்படுத்தப்
> படுவதில்லை.
> இவர் ஒரு வலம்புரி விநாயகர். வலது பக்கமாக துதிக்கை சுழித்திருக்கும்.
> ஆகவேதான் இந்த தலத்திற்கு "வலஞ்சுழி" என்று பெயர் என்றும் சொல்வார்கள்.
> அருகே ஓடும் ஆறு, இந்தத் தலத்தின் அருகே வலப்புறமாக சுழித்துச்
> செல்வதால் இப்பெயர் ஏற்பட்டதாகவும் கூறுவர்.
>
> இவரைப் போன்றே இன்னொரு பிள்ளையாரும் இவர் அருகிலேயே
> இருக்கிறார்.
> கும்பகோணத்திற்கு அருகிலேயே ஐந்து மைல் தூரத்தில் உள்ள
> திருப்புறம்பியம் என்னும் தலத்தில்தான் இவர் இருக்கிறார்.
> ஒரு யுகத்திற்கும் இன்னொரு யுகத்திற்கும் இடையே ஏற்பட்டதொரு
> ஊழிப்பெருவெள்ளம் கட்டுக்கடங்காது போயிற்று. அப்போது வருணன்
> கடலிலிருந்து கிடைத்த பொருள்களைக் கொண்டு பிள்ளையார் பிடித்து
> வழிபட்டார்.
> விநாயக வழிபாட்டிற்குப் பின்னர் பிரளயமும் ஒடுங்கியது.
> ஆகவே பிள்ளையாருக்கு "பிரளயம் காத்த விநாயகர்" என்ற
> பெயர் ஏற்பட்டது. விநாயகரின் உருவத்தில் கடற்சங்கு, நத்தை, கிளிஞ்சல்
> ஆகியவை தெரியும்.
> இந்த பிள்ளையாருக்கு "தேன் குடிக்கும் பிள்ளையார்" என்ற
> பெயரும் உண்டு.
> இவருக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அபிஷேகம் நடக்கும்.
> மற்ற நாட்களில் கிடையாது.விநாயகர் சதுர்த்தியன்று தேன் அபிஷேகம்
> செய்யப்படும். இரவு 8-00 மணிக்கு மேல் தொடங்கி விடிய விடிய தேன்
> அபிஷேகம் செய்வார்கள். குடம் குடமாக ஊற்றப்படும் அவ்வளவு தேனையும்,
> சிந்தாது சிதறாது பிள்ளையார் சிலை அப்படியே தன்னுள் உரிஞ்சிக்கொள்கிறது.
> ஒரு டன் தேன் அவ்வாறு உரிஞ்சப் படுவதாக கணித்திருக்கிறார்கள்.
>
> இங்கே யாரும் போயிருக்கிறீர்களா?
>
> (பி.கு. படம் இருக்கிறது.ஏதாவது இடத்தில் போடமுடியுமா என்று
> பார்க்கிறேன்.)
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>
>
> At 04:36 PM 9/21/99 -0400, you wrote:
>
> >-----Original Message-----
> >From: Subramanian
> >To: agathiyar@egroups.com
> >Date: Tuesday, September 21, 1999 4:15 AM
> >Subject: [agathiyar] Walking with head
>
> >...................
> >>இதற்கு முன்னரும் ஒரு இதழில், சுவாமிமலை அருகில் உள்ள திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர்
> >>பற்றி குறிப்பிட்டிருந்தனர். பாற்கடலைக் கடையும் போது இந்திரன் மற்றும் தேவர்கள் வெகுநேரம்
> >>கடைந்தபிறகும் அமிர்தம் கிடைக்காதலால், இறைவனிடம் முறையிட, அவர் விநாயகரை வழிபட
> >>மறந்ததால் தான் அப்படி என கூற, உடனே விநாயகருக்கு எங்கே செல்வது என்றெண்ணி
> >>கடலின் நுரையையே விநாயகராய் உருவகித்து பூஜித்தபின் அமிர்தம் (அமுதம் ?) கிடைத்ததாகவும்
> >>கதை.
> >>
> >>இணைய அன்பர்கள் யாரேனும் திருவலஞ்சுழி வெள்ளை விநாயகரை தரிசித்ததுண்டா ?
> >
> Dr.Swaminathan wrote:
>
> >திருவலஞ்சுழி விநாயகரை தரிசித்திருக்கிறேன். தற்பொழுது அக்கோயில்
> >சற்று சிதிலமடைந்து இருக்கிறது.
> >
> >சுவாமிமலை புகைவண்டி நிலயத்திலிருந்து வரும் பொழுது முதலில் வருவது
> >திருவலஞ்சுழி கிராமம். சுவாமிமலைக்கு போக அரசலாறு, காவிரி இரண்டையும் தாண்டி வரவேண்டும்.
> >அக்காலத்தில் அங்கு மரப்பாலங்கள் இருந்தன. மரக்கட்டைகளால் ஒரு அடி இடைவெளிவிட்டு
> >போட்டிருப்பார்கள். மேலே நடக்கும்போது தண்ணீர் கீழே வேகமாக ஓடுவது தெரியும்.
> >கரணம் தப்பினால்... எதற்கும் இருக்கட்டும் என்று முன்னெச்சரிக்கையாக பிள்ளையாருக்கு
> >ஒரு தோப்புக்கரணம் போட்டுவிட்டுத்தான் பாலத்தைக் கடப்போம். அதேபோல் சுவாமிமலையிலிருந்து
> >புகைவண்டி நிலையத்துக்கு வருமுன் ஒரு சிறு பிள்ளையார் கோயில் உண்டு.
> >அப்புறம் காங்கிரீட் பாலம் வந்தது. சிறிய பாதையில் எதிருக்கு எதிர் வரும் வண்டிகள்
> >கண்டு ஜனங்கள் உடனே பிள்ளையாரை நினைப்பார்கள்.
> >
> >பிள்ளையாரும் காலத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு விட்டார். கணினி பற்றி
> >எல்லாம் தெரிந்துவிட்டது என்ற திமிர் வந்தவுடன் தமிழ் எழுத்தைப்புரியாமல் அடித்துவிடுகிறார்.(;-)
> >User defined ஆக இருக்கலாம், பிள்ளையார் approval இல்லாமல் நடக்காது.
> >
> >ஆனை முகத்தோனே ஐந்துகரத்
> >தாலருள்வாய் கோனே- அன்பருளத்
> >தேன்வண்டு பாடிடும் தீந்தமிழ் சோலையில்
> >தேடியுன் பொன்னடியைப் பாடி பணிந்து நின்றேன்
> >குற்றங்குறைகளெல்லாம் நீக்கிடுவாய் மக்கள்
> >குணமெனும் குன்றேறத் துணையிருப்பாய் பிறப்பை
> >உற்றுணர்வார் தமக்கே உயர்வளிப்பாய் என்றும்
> >ஓமெனும் உருவத்தில் நிறைந்திருப்பாய் எந்தை (ஆனை)
> >
> >
> >யாரு பாடினது? தமிழிசை இயக்க எம்.எம். தண்டபாணி தேசிகர்தான் !
> >
> >சுவாமிநாதன்
> >லாஸ் ஏஞ்சலஸ்
> >===============
> >
> >Manivannan wrote:
>
> >திருவலஞ்சுழி விநாயகரை தரிசித்திருக்கிறேன். தற்பொழுது அக்கோயில்
> >சற்று சிதிலமடைந்து இருக்கிறது.
>
> சென்ற முறை தமிழகம் சென்றபோது, சுவாமிமலைக்குச் செல்லும் வழியில்
> ஓட்டுநர் வற்புறுத்தியதால் இந்தக் கோவிலுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது.
> கோவில் மிகப் பெரிய சிவன் கோவில். பிற்காலச் சோழர் காலத்தில்
> கட்டியிருக்க வேண்டும். கோவில் மண்டபங்கள் ஓலைகூரைவீடுகளின்
> அமைப்பை ஒத்திருந்தன. தஞ்சைப் பெரிய கோவில் போலவே பல பிரகாரங்கள்.
> கோவிலின் முகப்பில் மாடு மேய்ந்து கொண்டிருந்தது. ஒரே ஒரு ஊனமுற்ற
> முதியவர் மட்டும் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். கோவிலுக்குப் போகும்
> முன்னால் பிச்சையிட்டுப் போக வேண்டும், வணங்கி விட்டு வந்தபின் பிச்சை
> இட்டால் தம் வரங்களையும் சேர்த்தே கொடையாக அருளிவிடுவோம் என்ற
> நம்பிக்கை உள்ள என் மனைவி பிச்சைக்காரரைத் தேடிப்போய் பணம் கொடுத்து
> விட்டு வந்தார்.
>
> கோவிலில் யாரும் இல்லை. ஒவ்வொரு சன்னதியாய்ப் பார்த்து விட்டு வலஞ்சுழிப்
> பிள்ளையார் திருக்கோவிலை அடைந்தோம். அர்ச்சகர், தலவரலாறு சொன்னார்.
> நுரையில் செய்த திருச்சிலை என்பதால் அதற்கு அபிஷேகங்கள் இல்லை என்றார்.
> மற்ற சன்னதிகள் போலில்லாமல், வலஞ்சுழிப்பிள்ளையார் சன்னதியின் நுழை
> வாயில் பிள்ளையாருக்கு வலப்புறம் மட்டும் உள்ளது. ஆனால், கோவிலின்
> நுழைவாயிலிலிருந்து வருபவர்கள் பிள்ளையாரைப் பார்க்க ஒரு சின்ன சாளரம்
> அமைத்திருக்கிறார்கள். பிள்ளையார் கோவிலின் மூலவர் இல்லை. ஆனால்,
> கோவிலுக்கு அவர் புகழால் ஒரு சிலராவது வருகிறார்கள்.
>
> கோவில் மதில்களில் நந்திகளோடு செடி கொடிகளும் பாசியும் படர்ந்திருந்தன.
> சோழப்பெருவேந்தர்கள் கொடி கட்டிப் பறந்த காலத்தில் இந்தக் கோவில்
> எப்படி கலகலப்பாக இருந்திருக்கும் என்று எண்ணிப்பார்த்தேன். பெசன்ட் நகர்
> அஷ்டலக்ஷ்மி கோவிலில் குகைக்குள் போவதுபோல் கூனிக் குறுகிக் கூட்டத்தின்
> இடையில் அடிபட்டு, நசுங்கிச் சென்றிருந்த எனக்கு, விரிந்து பரந்த இந்த மாபெரும்
> கோவிலுக்கு வழிபடுவோர் வருவது குறைவு என்றறிய வியப்பாக இருந்தது. இந்தக்
> கோவிலைப் பராமரிக்கச் சோழ மன்னர்கள் அளித்திருந்த நிலமெல்லாம் இன்னும்
> கோவிலுக்கு உரிமையாக உள்ளதாம். ஆனால், குத்தகைக்காரர்கள் (சாதி, கட்சி
> வேறுபாடில்லாமல்) சிவன் கோவில் சொத்தைத் தின்று வாழ்கிறார்களாம்.
>
> பிள்ளையாரை வணங்கி விட்டுக் கவிராயர் குறிப்பிட்ட பாலங்களைக் கடந்து
> சுவாமிமலைக்குச் சென்றோம். சுவாமிநாதன் இளம்பருவத்தில் அப்போது
> காவிரியிலும், அரசலாற்றிலும் தண்ணீர் கீழே "வேகமாக ஓடுவது" தெரிந்திருக்கலாம்.
> நாங்கள் சென்ற கார்த்திகைத் திங்களில் மணல்தான் தெரிந்தது.
>
> ===================================================================
>
> ------------------------------------------------------------------------
> Accurate impartial advice on everything from laptops to tablesaws.
> http://clickhere.egroups.com/click/552
>
> eGroups.com home: http://www.egroups.com/group/agathiyar
> http://www.egroups.com - Simplifying group communications