From Palaniappan A Thu Sep 23 03:52:20 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.259); by m5; 23 Sep 1999 10:55:21 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 22131 invoked from network); 23 Sep 1999 10:55:16 -0000
Received: from sunny.pacific.net.sg (203.120.90.127) by qh.egroups.com with SMTP; 23 Sep 1999 10:55:16 -0000
Received: from pop1.pacific.net.sg (pop1.pacific.net.sg [203.120.90.85]) by sunny.pacific.net.sg with ESMTP id SAA24936; Thu, 23 Sep 1999 18:55:10 +0800 (SGT)
Received: from liverpool.ntu.edu.sg (ppp215.dyn65.pacific.net.sg [210.24.65.215]) by pop1.pacific.net.sg with SMTP id SAA10775; Thu, 23 Sep 1999 18:55:07 +0800 (SGT)
Message-Id: <3.0.3.32.19990923065111.0082c390@...>
X-Sender: pala@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.3 (32)
Date: Thu, 23 Sep 1999 06:51:11 +0800
To: globaltamil@..., agathiyar@egroups.com
From: Palaniappan A
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Internet Training in Tamil
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2206

இஅன்பு நண்பர்களே, வணக்கம்.
சிங்கைவாழ் மக்கள் வளமான வாழ்வுவாழ்க்கின்றனர் என்று உங்களில் பலர்நினைக்கக்கூடும். தகவல்
தொழில்நுட்பம் வளர்ச்சிகண்ட நாடு என்பதால் எல்லோரும் கணினியில். இணையத்தில் தேர்ச்சி
பெற்றிருக்கக்கூடும் என்று கூட நினைக்கலாம். பல இன சமுதாயத்தில் வாழும்இந்தியர்கள்-தமிழர்கள் , மற்ற
இனத்தவலருக்குப்பின் தள்ளப்பட்டுவிடக்கூடாது என்பதில் அரசாங்கமும் தனியார்அமைப்புகளும் ஒருமித்த
கருத்தைக்கொண்டுள்ளன. தமிழர்களின்கல்வியை மேம்படுத்த சிண்டா எனும் அமைப்பு உண்டு. அதைப்போல
அவர்கள் தகவல் தொழில்நுட்பத்துறையிலும் மற்றவர்களைப்போல-சாதாரணத் தமிழனும் முன்னேற வேண்டும் என
கடந்த ஆண்டு முதல் எங்களில் ஒரு சிலர்இணைணப் பயிற்சிகளை தமிழில் வழங்கி வருகிறோம்.
கடந்த வாரம் முதன்முறையாக தமிழில்இணையப்பக்கங்களை உருவாக்குதல், வீடியோ கான்பரன்சிங்
போன்றவற்றை 100 பேர் கற்றுக்கொண்டனர்.இந்த சனிக்கிழமையும் அதே எண்ணிக்கைகொண்ட தமிழர்கள்
பயிற்சியில் கலந்துகொள்வர். கடந்த வார பயிற்சி பற்றி தமிழ் முரசு வெளியிட்ட செய்தியை இதனுடன்
இணைத்துள்ளேன். படித்துப்பாருங்கள்.
அன்புடன்
பழனிஇ


இணையத்தில் என் பக்கம்
தமிழில் கணினி பயின்றவர் பெருமிதம்

செய்தி, படம்: காமராஜ்

"சற்று பொறுத்திருங்கள். இணயத்தில் என்சொந்தப் பக்கத்தைக் காணலாம்" என்கிறார் திரு பாஸ்கரன்
பெருமிதத்துடன்.
சனிக்கிழமை மாலை தோபாயோ சமூகநூலகத்தில் கணினி பயின்றவர்களில்இவரும் ஒருவர்.
மூன்றாவது மாடியில் அமைந்திருக்கும் சிங்கப்பூர் ஒன் பயிற்சி நிலையத்தில் சுமார் 100 பேர் கணினி
கற்றுக்கொள்ள வந்தனர்.
தமிழில் வகுப்புகள் நடத்துவதற்கு சிங்கப்பூர் தமிழர் தகவல் தொழில் நுட்பக் கழகம் ஏற்பாடு செய்திருந்தது.
திரு பாஸ்கரன் (41) சொன்னார்:
" எனக்குக் கணினி ஓரளவு தெரியும். ஆனால் இணையத்தில் சொந்தமாக இணையப் பக்கத்தை உருவாக்கத்
தெரியாது."
"நேற்று இணையப் பக்க வடிவமைப்பு பற்றிகற்றுக்கொண்டேன். இன்று ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இணையப்
பக்கத்தை உருவாக்கும் முயற்சியில்இறங்கியிருக்கிறேன், நாளை அல்லது மறுநாள் எனது இணையப் பக்கம்
தயாராகிவிடும்" என்று இரண்டு பிள்ளைகளுக்குத் தவந்தையான திரு பாஸ்கரன் நேற்று சொன்னார்.
இணையப்பக்கத்தில் சொந்த புகைப்படத்துடன் தொழில் அனுபவம் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்கள்
போன்றவற்றை வெளியிட அவர் திட்டமிட்டிருக்கிறார்.
"இனி என் இணையப் பக்கத்தை உலகில் உள்ள எல்லாரும் பார்க்கும் வாய்ப்பு உள்ளது.பல்வேறு நாடுகளைச்
சேர்ந்ததவர்களுடன் நட்பு வளரும். தகவல்பரிமாற்றம் அதிகரிக்கும்" என்று செம்பவாங் கப்பல் பட்டறையில்
பணி ஆற்றும் திரு பாஸ்கரன் சொன்னார்.

கணினிப் பயிற்சி
சிங்கப்பூர் ஒன் பயிற்சி நிலையத்தில்இணையப் பக்கத்தை உருவாக்குதல், கோப்புகளை இறக்குமதி செய்யும்
முறை, வீடியோ கான்ஃபரன்ஸ் வழி ஒருவரை தொடர்பு கொள்ளும் முறை போன்றவைகற்றுத்தரப்பட்டன.
தமிழில் என்னென்ன இணையப் பக்கங்கள்இருக்கின்றன, பள்ளிப்பாடங்கள் பற்றியஇணையப்பக்கங்கள் எவை
என்பதும் விளக்கிக்கூறப்பட்டது.
மூன்று நேரத்தில் முடிவடைய வேண்டிய இடைநிலை கணினிப் பயிற்சி நான்கு மணிநேரம் நீடித்தது.

பிள்ளைகளுக்கு உதவும்

மின்னியல் உற்பத்தித் துறையில் பணிஆற்றும் திருமதி தமிழ்வேணி(42) இத்தனை இணையப் பக்கங்கள்
தமிழில் இருப்பது இப்போதுதான் தெரியும் என்றார்.
வீடியோ கான்பரன்ஸ் மூலம் உறவினர்கள்,நண்பர்களை நேரடியாகக் கணிணினியில் பார்க்க முடியும் என்பதைத்
தெரிந்துகொண்ட தமிழ்வேணி வியந்தார்.
இணையப் பக்கத்தில் பள்ளிப் பாடங்கள்இருப்பதைக் காட்டினார்கள். என்னுடைய இரு பிள்ளைகளுக்கும் இது மிகவும்
பயனளிக்கும். அவர்களும் கணினியில்வேடிக்கையாக பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும்" என்று தமிழ்
முரசிடம் தமிழ்வேணி சொன்னார்.
பயிற்சிக்கு வந்த மற்றொருவர் திருமதி தேவி. கணினியைக் கண்டு அஞ்சத் தேவையில்லை என்று அவர்
சொன்னார்.
"கணினியில் தவறு செய்தால் ஏதாவதுஆகிவிடும் என்று சிலர் அஞ்சுகிய்றனர்.அந்த அச்சம் தேவையில்லை.
தைரியம் இருந்தால் போதும். கணினி நம் வழிக்கு வந்துவிடும்" என்றார் அவர்.
இந்த வகுப்பில் கணினியில் இணையப்பக்கங்களை உருவாக்கும் புதிய தொழில்ஒன்றைக் கற்றுக்கொண்டேன் என்று
திருமதி தேவி உற்சாகத்துடன் கூறினார்.
ஆனால் நேரம் போதவில்லை. சற்று வேகமாக கணினிப் பயிற்சியை நடத்தினார்கள் என்பது சிலரது குறை.
திருமதி வாசுகி சந்திர சேகர்(32) கடைசியில் சற்று அவசர அவசரமாசொல்லிக்கொடுத்தார்கள் என்று
கூறினார்.
இணையப் பக்கத்தை உருவாக்குவத் பற்றிஇன்னமும் விளக்கமாக சொல்லிக்கொடுத்திருக்ககலாம் என்று
வெளிப்படையாகத் தெரிவித்தார்.
அதே சமயத்தில் தமிழில் பயிற்சிஅளிக்கப்பட்டதால் உடனுக்குடன் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள எளிதாக
இருந்தது என்றார் அவர்.
சிங்கப்பூர் ஒன்னின் பயிற்சி நிலைய்ததில் நான்கு பெரிய திரைகளில் கணினி இயக்குவது பற்றி
காட்டப்பட்டது.
ஆளுக்கு ஒரு கணினி ஒதுக்கப்பட்டிருந்தது.மாணவர்கள் முதல் குடும்ப மாதர். பொறியாளர், முதியோர் என
பலதரப்பட்வர்கள் பயிற்சிக்கு வந்தனர்.
குறைகளுக்குப் பதில் அளித்த சிங்கப்பூர்தமிழர் தகவல் தொழில்நுட்பக்கழகத்தின் துணைத் தலைவர் ஆ
பழனியப்பன், "கணினிப் பயிற்சிக்குகுறிப்பிட்ட நேரமே ஒதுக்கப்பட்டிருந்தது. அதற்குள் எல்லாவற்றையும்
சொல்லித்தர முடியவில்லை" என்றார்.
"இது இடைநிலைப் பயிற்சி. கணினிஅடிப்படைகள் தெரிந்திருப்பது அவசியம் என்று
வலியுறுத்தியிருந்தோம், ஆனால் சிலருக்கு அடிப்படைப் பயிற்சி இல்லை. அதனால் அவர்களுக்கு சற்று கடினமாக
இருந்திருக்கும்" என்று அவர் சொன்னார்.
ஆயினும் அடுத்த முறை கணினி அடிப்படையை விளக்குவதற்கு சிறிது நேரம் ஒதுக்கப்போகிறோம் என்றும் அவர்
கூறினார்.
கழகத்தின் நோக்கங்களைப் பற்றி குறிப்பிட்ட அதன் பொதுச் செயளாலர் திருசப்பிரமணியம் அறிவார்ந்த
பொருளியல் நாடாக உருவாகும் சிங்கப்பூரில் தமிழ் பேசும் சமூகம் பின்தங்கிவிடக்கூடாது என்பதே எங்களது
முக்கிய நோக்கம் என்றார்.
வளர்தமிழ் அறைகூவல்
தமிழ் இணையப்பக்கங்களைப் பற்றியவிழிப்புணர்வை ஏற்படுத்த சிங்கப்பூர் ஒன் பயிற்சி நிலையம் ஒரு
வாய்ப்பாக அமைகிறது. அதுமட்டுமின்றிசெப்டம்பர் 4ம் தேதி அன்று தேசிய அளவில் தொடங்கப்பட்ட வளர்
தமிழ் இயக்கத்தின் அறைகூவலுக்கு உடனடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை இது என்றுதிரு சுப்பிரமணியம்
குறிப்பிட்டார்.