From Sat Sep 25 05:53:39 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 25 Sep 1999 12:56:40 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 253 invoked from network); 25 Sep 1999 12:56:38 -0000
Received: from law-f169.hotmail.com (HELO hotmail.com) (209.185.131.232) by qg.egroups.com with SMTP; 25 Sep 1999 12:56:38 -0000
Received: (qmail 522 invoked by uid 0); 25 Sep 1999 12:56:38 -0000
Message-ID: <19990925125638.521.qmail@...>
Received: from 209.223.26.231 by www.hotmail.com with HTTP; Sat, 25 Sep 1999 05:56:33 PDT
X-Originating-IP: [209.223.26.231]
From: "Nagamanickam Ganesan"
To: tamil@...
Cc: agathiyar@egroups.com, selvakum@...
Date: Sat, 25 Sep 1999 05:56:33 PDT
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Representing alien letters/sounds in Tamil
Mime-Version: 1.0
Content-Type: text/plain; format=flowed
Content-Transfer-Encoding: 7bit
X-Yahoo-Message-Num: 2216


அயன்மொழி எழுத்தின் தமிழ்க்குறிகள்
--------------------------------------------------------

தமிழன்பர்களே,

கணினிகளாலும், மின்தொடர்பாலும் உலகம் ஒரு சின்னஞ்சிறு ஊராகிவருவது
கண்கூடு. வேற்று மொழிகளில் இருந்து பெயர்ச்சொற்களைத் தமிழர்
பயன்படுத்த வேண்டியது அன்றாடத் தேவை ஆகிவிட்டது. தொல்காப்பியர் சொற்களை
நான்குவிதமாகப் பகுக்கிறார்: இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்.
இந்நாளில் நம் வாழ்வில் வெளிச்சொல்தான் அதிகம்: ஆங்கிலம், மலாய் போல்வன
வெளிச்சொல்.

தமிழில் வேற்றுமொழிப் பெயர்ச்சொற்களை (வெளிச்சொல்) மூலமொழி ஒலிப்புப்
போலவே பயன்படுத்த, செல்வாவின் முறை நல்லது, எளிதானது. தமிழின் இயல்புக்கு
ஏற்றவகையிலும், அதே வேளையில், விசைப்பலகை வழியாக, எளிதாகப்
பயன்படுத்தும்படியும், வேற்று மொழியின் பெயர்ச்சொற்களை நாம் கடன்
வாங்க நேர்கையில் இம்முறை நன்கு உபயோகமாகும். மேலும், முன்கொட்டுகளை
(',^,~,ஃ) நீக்கும்போது, தமிழுக்கு இறக்கிய அயன்மொழிச் சொற்கள் தாமாகத்
தமிழாகிவிடும்.

வேற்றெழுத்துக்களும், அவற்றுக்கு நேரான தமிழ்க்குறிகளும்:
----------------------------------------------------------------------------
1) f = 'வ்
2) h = ஃ
3) j = 'ச்
4) g = 'க்
5) D= 'ட்
6) d('dh') = 'த்
7) b = 'ப்
8) s = ^ச்
9) S('sh' )= ~ச்
---------------------------------------------------------------------------------------------

தமிழ் எழுத்துக்கள் தாம் அமையும் இடத்தைப்பற்றி மேற்குறித்த 9 ஒலிகளுள்
சிலபல ஒலிக்கும் (Reference: Tamil phonological rule). அவ்வமைவிடம்
பிறழுங்கால், வேற்றுமொழி எழுத்துக்கள் தமிழ் ஒலிப்புமுறைப்படி உச்சரிக்கப்பெறும்.
அதாவது, அவ் வேற்றொலிகள் தமிழ்ப்படுத்தப்படும். இதுவே சரியானதும்கூட.

ஆனால், சில இடங்களில் வேற்று மொழி ஒலிப்புகளை அப்படியே ஒலிக்கவேண்டும்
எனத் தற்காலத்தில் தமிழர் விரும்புகின்றனர். காட்டு: தமிழ் அல்லாத வேறுமொழிக்
குடும்பங்களில் இருந்து வரும் மக்கட்பெயர்கள். (எ-டு: சமற்கிருத, கிருத்துவ, இசுலாமியப்
பெயர்கள்).

இம்முறையை, பெருவாரியாகக் கைக்கொண்டு, தமிழ்ச் சொற்களை விடுத்து,
அயல்மொழிச் சொற்களைப் பாவிக்கும்போது, தமிழுக்கு ஊறு விளையும்.
தேவைப்படும்போது, தயிர்ச்சோற்றுக்கு ஊறுகாய் போலப் பயன்படுத்தலாம்.
முக்கியமாக, பெயர்ச்சொற்களைப் பிறமொழிகளில் இருந்து பெறும்போது,
பயனாக்கலாம்.

தொல்காப்பியர், "வடசொல் கிளவி வடவெழுத்து ஒரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்
ஆகும்மே" என்று சூத்திரம் வகுத்தளித்துள்ளார். அவர் வழிச்சென்று,
தமிழ் அல்லாத வெளிச்சொல்/வெளிஎழுத்துக்களுக்கு
இந்த எளிய முறையை வகுத்துள்ள நண்பர் செல்வகுமாருக்கு
பாராட்டும், வாழ்த்தும் உரித்து.

செல்வாவின் முன்வைப்பு குறித்து, உங்கள் கருத்தறிய விழைகிறேன்.

அன்புடன்,
நா.கணேசன்

பேரா. செல்வகுமார் அவர்களின் முன்னீடு:
-------------------------------------------------------------------------------------------------------------

அன்புள்ள தமிழ் இணையத்தாருக்கு:

வணக்கம்.

பயனுடையதாக இருக்கும் என்று எண்ணித் தமிழ் மொழியின்
நலத்திற்காக ஒரு புதிய கருத்தை இங்கே முன் வைக்கிறேன்.

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று திருவள்ளுவப்
பெருந்தகையார் கூறியிருப்பதை நினைவிற் கொண்டு
என் கருத்தை அருள்கூர்ந்து சீர் தூக்கிப் பார்க்க வேண்டுகிறேன்.

தமிழ் மொழியின் இனிமைக்கு குறைபாடு வாராமல்
தமிழ் மொழியிலே பிற மொழி ஒலிப்புகளை எவ்வாறு
பயன் படுத்தலாம் என்பதே கேள்வி. தொழில் நுட்பப்
புரட்சியால் (ஊர்தி, தொலை தொடர்பு, கணிணி முதலான
நுட்பங்களிலே கடந்த 30-40 ஆண்டுகளிலே
ஏற்பட்ட மிகப்பெரும் வளர்ச்சிகளினால்)
இன்று மக்கள் உறவாட்டத்திலே
உலகம் மிகச் சுருங்கி வருவதை பலரும் நன்கு உணர்வர்.
இதனால் வேற்று மொழி ஒலியன்களை தமிழில்
எடுத்தாள வேண்டிய தேவை இன்னும் வலுவாக ஏற்படுகிறது.

வேற்று மொழிப் பெயர்களிலே வழங்கும்
b, d, f, g, h, முதலான எழுத்தொலிகளை எவ்வாறு
தமிழில் வழங்கலாம் ?

ஏற்கனவே கணிணி எழுத்துப் பலகைகளில் உள்ள சில
குறிகளை பயன் படுத்தி பல புதிய ஒலிப்புகளைக் குறிக்கலாம்
என்பதே என் எண்ணமும் அடிக்கருத்தும். முதலில் தமிழ் முறை
என்னவென்று கீழே சற்று விளக்கிவிட்டு பின்னர் புதிய முறையை
விளக்குகிறேன். அருள்கூர்ந்து பொறுமையாக எண்ணிப் பாருங்கள்.

1. தமிழில் 18 மெய் எழுத்துக்களே உள்ளன. அவற்றில் 6 எழுத்துக்கள்
மட்டுமே வல்லின எழுத்துக்கள். அவையாவன க், ச், ட், த், ப், ற் என்பனவே.
இந்த 6 எழுத்துக்களிலும் நான்கு எழுத்துக்கள் மட்டுமே, ட், ற் நீங்கலாக,
உயிரோடு சேர்ந்து ஒரு தமிழ்ச் சொல்லின் முதல் எழுத்தாக வரக்கூடியவை.

எனவே க், ச், த், ப் என்னும் நான்கு வல்லின எழுத்துக்கள் மட்டுமே
உயிர் எழுத்தோடு கூடி தமிழ்ச் சொல்லின் முதல் எழுத்தாக வரும்.

தமிழ் மொழியிலே வல்லின எழுத்துக்கள் வலித்து ஒலித்தல்
இரண்டே இடங்களில் தான்.

முதலாவது ஒரு சொல்லின் முதல் எழுத்தாக
வந்தால் வலித்து ஒலிக்கும்; இரண்டாவது, புள்ளி வைத்த (தமிழில் இதற்கு
ஒற்று என்று பெயர்) ஒரு வல்லின எழுத்துக்கு பின் வரும் பொழுது வல்லின எழுத்து
வலித்து ஒலிக்கும். மற்ற இடங்களில் எல்லாம் வல்லின எழுத்து மெலிந்தே ஒலிக்கும்.

சில எடுத்துக் காட்டுகளைப் பார்த்தால் சட்டென்று விளங்கும்:

கடல் என்னும் சொல்லைப் பாருங்கள். முதல் எழுத்தாகிய க என்னும் வல்லின எழுத்து,
சொல்லின் முதல் எழுத்தாக வருவதால் வலித்து ஒலிக்கின்றது.
கடல் என்னும் சொல்லில் வரும் இரண்டாவது எழுத்தாகிய டகரமும் வல்லின
எழுத்துதான், என்றாலும் மெலிந்தே ஒலிக்கின்றது. ஏன் ? அந்த டகரத்திற்கு முன்
புள்ளி வைத்த வல்லின எழுத்து வரவில்லை.
இப்பொழுது, வேறு ஒரு சொல்லாகிய கட்டம் என்னும் சொல்லை
எடுத்துக்கொண்டால், அதில் வரும் மூன்றாவது எழுத்தாகிய டகரம்
வலித்து ஒலிக்கின்றது. ஏனென்றால், புள்ளி வைத்த ட் என்னும் வல்லின எழுத்து
இரண்டாவது எழுத்தாக வந்து டகரத்திற்கு முன்னால் இருப்பதால் கட்டம்
என்னும் சொல்லில் உள்ள டகரம் வலித்து ஒலிக்கின்றது. முன்னே வரும் புள்ளி வைத்த
எழுத்து வல்லின எழுத்தாக இல்லாமல், மெல்லின எழுத்தாக இருந்தால்
மெலிந்தே ஒலிக்கும், வலித்து ஒலிக்காது. இப்பொழுது கீழ்க்காணும்
சொற்களை எழுத்தொலி; விளங்க ஒலித்துப் பாருங்கள்,
வாய் விட்டு சொல்லிப்பாருங்கள் (பலுக்கிப்பாருங்கள்).

வாடு - வாட்டு - வாண்டு (டு என்னும் எழுத்தை எப்படி ஒலிக்கின்றோம் (பலுக்குகின்றோம் ) ?)
அக்கம் பக்கம் - அகம் - அங்கம்- தங்கம் (க என்னும் எழுத்தை எப்படி பலுக்குகிறோம் ?)
பத்து - பந்து - பதுங்கு (து என்னும் எழுத்தை எப்படி ஒலிக்கின்றோம் ? )
பச்சை - பஞ்சு - பஞ்சை - குடிசை - பசி (சகரத்தை எப்படி ஒலிக்கின்றோம் ?
(மெல்லிந்து ஒலிக்கும் சகரம் இரு வேறு விதமாக ஒலிக்கும்.
சொல்லின் முதல் ஒலியாக வரும் சகரமும், மெலிந்து ஒலித்தல் தமிழில் விதி விலக்கு).
காம்பு - காப்பு - கபுக்கென்று (பு என்னும் எழுத்தை எப்படி பலுக்குகிறோம் ?)

எனவே வல்லின எழுத்துக்களைத் தமிழில் ஒலிக்கும் முறை என்னவென்றால்,
ஒரு வல்லின எழுத்து இரண்டே இரண்டு
இடங்களைத் தவிற மற்ற எல்லா இடங்களிலும் மெலிந்தே ஒலிக்கும்.

இவ்விரு இடங்களாவன, (1) ஒரு சொல்லின் முதல் எழுத்தும், (2) புள்ளி வைத்த
வல்லின எழுத்துக்கும் பின் வரும் வல்லின எழுத்துமே.
முதல் எழுத்தாக வரும் சகரம் சிலவிடங்களில் மெலிந்து ஒலிப்பது ஒரு விதி விலக்கு.
முதல் எழுத்தை வலித்து (ச்)சட்டி, (ச்)சொல் என்றும் சொல்லலாம் (அப்படி சொல்லுவோர்களும்
உள்ளனர்) அல்லது முதல் எழுத்தையே காற்றொலி கலந்த மெல்லொலியாக சட்டி, சொல்
என்றும் சொல்லலாம். ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வராமல், இடையே
வரும் சகரமும், தமிழ் முறைப்படி மெலிந்து ஒலிக்கும் இடங்களிலும், இரு வேறு ஒலிப்புகளுடன்
ஒலிக்கின்றது. ஒன்று பாம்பு சீறுவது போல் தோன்றும் காற்றொலியாகவும்
மற்றொன்று மூக்கொலி கலந்ததாகவும் உள்ளன. எடுத்துக்காட்டுகள் :
கொசு - கொஞ்சு. கொசுவில் வரும் சு காற்றொலி கலந்தது, கொஞ்சு என்னும்
சொல்லில் உள்ள சு மூக்கொலி கலந்தது.

2. அடுத்ததாக வேற்று மொழிச் சொற்களைத் தமிழில் எப்படி வழங்கலாம் என்று பார்க்கலாம்.
முதலாவதாக தமிழில் எவ்வாறு b, d, f, g, h, j, 'dh', 'sh' என்னும் எழுத்தொலிகளைக்
குறிக்கலாம் என்று பார்ப்போம்.
தமிழில் கம்பு என்று சொல்லும் பொழுது அதில் வரும் பு என்னும் எழுத்தொலியானது
ஆங்கிலம் போன்ற வேற்று மொழிகளில் வரும் b என்னும் எழுத்தோடு உயிரெழுத்து
கூடிய எழுத்தொலியேதான்.
என்றாலும் Berlin, Bell என்னும் பெயர்ச்சொற்களில் வருவதைப்போல தமிழில் முதலொலியாக
வர இயலாது (தமிழ் முறைப்படி). எனவே ஒரு வல்லின எழுத்துக்கு முன்னே ஒலி மாறி வருவதைக்
குறிக்க (ஒலித்திரிபைக் குறிக்க) ஒரு கணிணி எழுத்துப்ப்லைகையில் உள்ள ஒரு குறியைப் பயன்
படுத்தலாம். apostrophe அல்லது single quote என்னும் குறியை (தமிழில்
முன்கொட்டு என்று பெயரிடலாம் என்று நினைக்கிறேன்) இட்டுக் குறிக்கலாம் என்று நினைக்கிறேன்.
இதே முறையில், தமிழில் வழங்கா f, sh முதலிய எழுத்துக்களையும் குறிக்க முன்கொட்டு ஒன்று இட்டு
ஒலித்திரிபைக் குறிக்கலாம்.

2.1 முன்கொட்டுடன் வரும் எடுத்துக்காட்டுகள்:

Ball = 'பால்
Bell = 'பெல்
Berlin = 'பெர்லின்
Gandhi = 'காந்தி
Johnson, Jagannaathan = 'சான்சன் , 'சகன்னாதன்
David = 'டேவி 'ட்
Dirac = 'டிராக்
Dumdam Airport = 'டம்டம் வானூர்தி நிலையம் (வான் நிலையம், வான் துறை)
Dadabhai Navroji = 'தாதாபாய் நவ்ரோ'சி
Fermi = 'வெர்மி
Ford = 'வோர் 'ட்
Usha = உ'ழா
Ship = 'ழிப் ( பழக்கத்தில் முன் கொட்டுடன் வரும் 'ழ என்பதை sha என்று சொல்லிப் பழக
வேண்டும்)

2.2 அடுத்ததாக H என்னும் ஒலியை தமிழில் ஆய்த எழுத்தைக்கொண்டு குறிக்கலாம்.

எடுத்துக்காட்டுக்கள்:

Hitler = ஃஇட்லர்
Hardy = ஃஆர்டி
Hilbert = ஃஇல்பெர்ட்

2.3. காற்றொலி கலந்தொலிக்கும் S என்பதைக்குறிக்க, தமிழில் (tilda) ~ச் என்று
குறிக்கலாம். பெரும்பாலும் இது தேவைப்படாது என்றாலும், சில இடத்தில் இம்முறை
பயன் படலாம். எடுத்துகாட்டாக Brooks, Francis முதலான பெயர்ச்சொற்களை
'புரூக்~ச் அல்லது 'ப்ரூக்~ச் என்றும் 'விரான்சி~ச் அல்லது 'வ்ரான்சி~ச் என்றும் எழுதலாம்.
அல்லது சற்றே தமிழ்ப்படுத்தி 'புரூக்~சு என்றும் 'விரான்சிசு என்றும் எழுதலாம்.

2.4 சில இடங்களில் தமிழ் முறைக்கு மாறாக புள்ளி வைத்த வல்லின எழுத்து வாராமலும்
வல்லின எழுத்துக்கள் வலிந்து ஒலிக்க வேண்டி இருக்கின்றது. எடுத்துக்காட்டாக
Bapu என்று வரும் பொழுது நாம் 'பா(ப்)பு என்று எழுதலாம். இவ்வாறு வரும் இடங்கள்
மிகக்குறைவானவே என்பதால், இப்படி பிறைக்குறிக்குள் வல்லின ஒற்றை (புள்ளி வைத்த எழுத்தை)
எழுதி சரியான ஒலிப்பைக்குறிக்கலாம். அல்லது வேறு விதமாக இரட்டை முன்கொட்டு இட்டும்
காட்டலாம். 'பா''பு. Gopi என்பதை 'கோ''பி என்று எழுதலாம்.

2.5 கடைசியாக, அகர-ஏகாரக் கலவை ஒலியாக வழங்கும் ஓர் உயிர் ஒலியை எப்படிக் குறிக்கலாம்
என்று பார்ப்போம். கீழ்க்காணும் ஆங்கில சொற்களைப் பார்த்தால் இந்த அகர-ஏகாரக்
கலவை ஒலி விளங்கும்: cat, gap, fat முதலிய சொற்களில் வழங்கும் a என்னும் உயிரொலி
சற்றே ஏகார ஒலி கலந்து ஒலிப்பதை உணரலாம். இதனைக் குறிக்க, தமிழில் எழுத்தின்
முன்னொட்டாக
தொப்பி போன்ற கூரைக் குறியை (^) இட்டுக் குறிக்கலாம். ஏனவே Apple Computer என்பதை
^ஆப்பிள் கணினி என்று குறிக்கலாம். Faraday என்னும் பெயரை 'வாரடே என்பதற்கு பதிலாக
^'வேரடே என்றோ அல்லது ^'வாரடே என்றோ குறிக்கலாம்.

2.6 சரி, ஒற்றைக் கொட்டு மேற்கோள் குறியைப் பயன் படுத்துவதால் குழப்பம் வாராதா ?
(மேற்கோள் குறி என்பதை சுருக்கமாக மேறி என்று சொல்லலாமா ? மேல் என்னும்
சொல்லே அடிப்படை எனவே அது மேற்- என்று மாறும் இயல்புடையதுதான்; இன்னொரு
விதமாகப் பார்த்தால், மேற்கோள் என்பதின் முதல் எழுத்தும் (மே), குறி என்பதின் கடை
எழுத்தும் (றி) சேர்த்து மேறி என்றாயிற்று என்றும் கொள்ளலாம்)
எனவே, தமிழில் நாம் எப்பொழுதும் இரட்டை மேறியை மட்டுமே பயன் படுத்துவோம்.
அல்லது ஒற்றை மேறியைப் பயன் படுத்துவதானால் ஒற்றை மேறிக்கு அடுத்து சற்று இடைவெளி
தர வேண்டும். அவ்வளவுதான்.

3 இந்த முறையினால் என்ன நன்மை ?

3.1 தமிழ் நெடுங்கணக்கில் (எழுத்து வரிசை) உள்ள தமிழ் எழுத்துக்கள் மட்டுமே போதுமானது.
(ஜ ஜி, ஷ, ஷி , ஹ, ஹி, ஸ, ஸி போன்ற எழுத்து வரிசைகள் தேவையே இல்லை; இகர,
உகர ,ஊகார எழுத்துக்களும், புள்ளி வைத்த தனி மெய்யெழுத்துக்களும் தேவையே இல்லை.).

தமிழ் மரபில் இருந்து மாற விருப்பம் இல்லா தமிழர்கள் இன்றும் ஜகன்னாதன் என்னும்
பெயரை சகன்னாதன் என்றுதான் வழங்குகிறார்கள். இங்கு கூறியுள்ள முறைப்படி
'சகன்னாதன் என்று அவர்களும் ஆர்வமுடன் தேர்ந்தெடுத்து வழங்குவார்கள் என்று
நினைக்கிறேன். இனி நான் என் நண்பர் 'கணேசன் என்று எழுத முடியும். என் நண்பரின்மனைவி
யின் பெயர் உ'ழா. இப்பெயருக்கு வடமொழியில் வைகறை, அதிகாலை, கதிரவன் முளைத்து
எழும் சிற்றம் சிறூகாலை எனப்பொருள். கணித மேதை ஃஇல்பெர்ட்டை தமிழில் எளிதாக
எழுதலாம். தமிழ்க் கணித மேதை (இ)ராமானு'சன் என்றும் எழுதலாம். கலைமகளை
சரசுவதி என்று எழுதுவதே போதும். ~சர~ச்வ(த்)தி என்று எழுதத்தேவை இல்லை என்பது
என் கருத்து.


3.2 மேலும் தமிழ் மரபுக்கு மாறாக வரும் பல வேற்றொலிக்கூட்டங்களையும் (மொழி முதலாக
வரும் G,B,D, Dh ஒலியன்கள் ) மற்றும் தமிழில்
வழங்கா F என்னும் ஒலியையும் குறிக்க முடியும்.
அணுவியல் அறிஞர் 'வெர்மி என்றும், இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த
சிந்தனைச் சிற்பிகளில் ஒருவராகிய 'பக்-மினிசு(ட்)டர் 'வுல்லர் என்றும் இனி
எழுத முடியும். ஒரு கூண்டுபோல் அமைந்திருக்கும் 60 கரிம அணுக்கள் கொண்டஒரு
வியப்பூட்டும் கூட்டணுவை (!!) அண்மையில் கண்டு பிடித்து அதற்கு
பேரறிஞர் 'வுல்லரின் நினைவாக 'வுல்லரீன் என்று பெயரிட்டுள்ளார்கள்.

3.3 மிகக்குறைந்த எழுத்துக்களுடன் முன்பினும் அதிகமான வேற்று மொழிச்
சொல்லொலிப்புகளைத் தமிழில் வழங்க இயலுகின்றது. எழுத்துக்களைக் குறைப்பது
மட்டுமே நோக்கம் இல்லை, ஆனால் இப்பொழுது இருக்கும் நிலைக்கு அதிகம் மாறுபடாத
ஒரு வகையில், எவ்வாறு இன்னும் அதிகமான எழுத்தொலிகளைத் தமிழில் வழங்கலாம்
என்பதே என் கேள்வி. தமிழில் வழங்கும் அருமையான மரபாகிய வல்லின-மெல்லின ஒலிப்பு
முறை மாறாமல் இருப்பதும் என் அடிப்படைநோக்கம்.

3.4 கையால் எழுதும் பொழுதும், இம்முறை மிக எளிதாக கைக்கொள்ளத் தக்கது.

மேற்கண்ட முறையை எல்லோரும் விரைந்து பயன் படுத்தினால், பயன் வளரும் என்று கருதுகிறேன்.
குற்றம் குறை இருப்பின், அறிஞர்கள் அருள்கூர்ந்து எடுத்துக்கூறி திருத்துமாறு
வேண்டிக்கொள்ளுகிறேன்.

அன்புடன்

செல்வா
___________________
செ.இரா.செல்வகுமார்
வாட்டர்லூ, ஒன்ட்டாரியோ, கனடா
ஆக~ச்ட்டு, 24, 1999.

----------------------------------------------------------------------------------------------------------

தமிழ் வல்லின எழுத்துக்கள், அவை சொல்லில் அமையும் இடத்தைப் பொருத்து
வலிந்தும், மெலிந்தும் ஒலிக்க வல்லன என்று விளக்கும் நா. கணேசனின்
ஆங்கிலக் குறிப்புரை.

Let us use the following Tamil transliteration for now:
vowels: a aa/A i ii/I u uu/U e ee/E ai o oo/O au
consonants: k G/ng c J/nj T N t n p m y r l v z/zh L R n2

<<<
The following writeup was done by me about two years ago.
Are there any corrections and additions necessary?
The "vallin2am" ('hard' consonants) is a major invention
in Tamil, condensing many sounds into a short array
of just six phonemes. Without understanding their real
significance, people try constantly to insert the "varga"
letters. For instance, inserting Sanskrit "k, kh, g, gh"
for Tamil "k" will make Tamil language suffer.
Tamil words will be replaced and will fall out of usage.

This grand achievement of phonetics by Tamil grammar has to be
taught to Tamil children first. In the following, I try to
explain the context-sensitive grammar of pronouncing
Tamil "vallin2am" letters.

I am eagerly looking forward to read your views:
Please tell your thoughts either in Tamil or English.

Sincerely yours,
N. Ganesan



*************************
TAMIL PHONOLOGICAL RULE
*************************

Tamil 'hard' consonants such as k, c, T, t, p and R are
pronounced 'soft' except when they occur as first letter in a
word or when adjascent to another 'hard' consonant.



Application of this gammatical rule of pronunciation to
individual letter:
********************************************************************
Hard consonant Pronounced As Occurence
********************************************************************

k k if 'k' is the first letter
of a word, or when
adjascent to a 'hard'
consonant.

k g if 'k' is after nasal G.

k *h* softens elsewhere.
(eg., intervocalical,
after l, L, z)
-----------------------------------------------------------------
c c if 'c' is the first letter
of a word, or when
adjascent to a 'hard'
consonant.

c j if 'c' is after nasal J.

c *s* softens elsewhere.
(eg., intervocalical,
after l, L, z)
-----------------------------------------------------------------
T T if 'T' is the first letter
of a word, or when
adjascent to a 'hard'
consonant.

T D softens elsewhere.
(eg., intervocalical,
after retroflex N,
l, L, z)
----------------------------------------------------------------
t t if 't' is the first letter
of a word, or when
adjascent to a 'hard'
consonant.

t d softens elsewhere.
(eg., intervocalical,
after dental n,
l, L, z)
---------------------------------------------------------------
p p if 'p' is the first letter
of a word, or when
adjascent to a 'hard'
consonant.

p b softens elsewhere.
(eg., intervocalical,
after m, alveolar n2,
l, L, z)
-----------------------------------------------------------------
R *TR* if 'R' is the first letter
of a word, or when
adjascent to a 'hard'
consonant.

R *DR* softens elsewhere.
(eg., after alveolar n2,
intervocalical)
*******************************************************************

This simple, elegant rule is followed always. The only exception
is letter c as the first letter in a word. North of Madurai,
'col' is pronounced as 'sol' in some dialects and this appears
to be a later innovation.

When I talk of 'hard' consonant 'k' becoming soft '*h*', there is
a qualification. It is not english h, There is little of english
g in *h* too. Can we denote it as 'g-h' or a weighted average
(0.7h + 0.3g)?? Similarly, When I talk of 'hard' consonant 'c'
becoming soft '*s*', there is a qualification. It is not english s,
There is little of english c in *s* too. Can we denote it as 'c-s'
or a weighted average (0.7s + 0.3c)?? *TR* = (0.2T + 0.8R);
*DR* = (0.2D + 0.8R), I think. Have seen Toronto transcribed as
RoraaNTO, observe the TR sound in "Ro" of RoraaNTO.

This minimal set of consonants among the entire gamut of Indian
languages is employed in Tamil along with the intuitive rules of
pronunciation. This minimal set of consonants is one reason why
Tamil could have the first printed book using movable types, first
typewriter etc., in India.

K. Zvelebil, Drav. linguistics today, 1984 says:
"Proto-Dravidian phonology may be very much like (Old) Tamil;
In morphology and syntax, Tamil and South Dravidian had their
far-reaching innovations".

Examples:

Writing Pronounced as Occurence
**********************************************************************
ka + G + kai kaGgai (Ganges) k -> g as k is after nasal
a + G + ku aGgu (there) k -> g as k is after nasal

taa+k+ka+m taakkam (impact) k preceded by another k

taa + ka + m taaham (thirst) k -> h as it is intervocalical
************************************************************************
pa + J + cu paJju (cotton) c -> j as c is after nasal
ta + J + ca +m taJjam (shelter) c -> j as c is after nasal

mi + c + ca + m miccam (remainder) double c

pa + cu + mai pasumai (green) c -> s as c is intervocalical
************************************************************************
a + N + Tu aNDu (approach) T -> D as T is after N
tu + N + Tu tuNDu (towel) T -> D as T is after N

paa + T + Tu paaTTu (song) double T

paa + Tu paaDu (to sing) T -> D as T is intervocalical
************************************************************************
vi + n + tai vindai (wonder) t -> d as t is after dental n
ta + n + tu tandu (having given) t -> d as t is after dental n

vi + t + tai vittai (vidyA) Double t

vi + tai vidai (seed) t -> d as it is intervocalical
**********************************************************************
a + n2 + pu anbu (love) p -> b as p is after n2
ka + m + pa + n2 kamban,(great poet) p -> b as p is after m

a + p + pa + n2 appan, (dad/dear person) Double p.

a + pa + ya + n2 abayan (Sanskrit abhaya) p is intervocalical
********************************************************************
pi + Rai piRai (crescent) R is intervocalical, softens

ka + R + pu kaTRpu (chastity) double 'hard' consonants

te+ n2+ Ra+ l tenDRal (breeze) R follows n2, softens

o + R + Ru + mai oTTRumai (unity) double R, TRTR -> TTR
*********************************************************************

Tamil grammar, starting from TolkAppiyam onwards, allows for
distinguishing between "k" and "g/h", "c" and "j/s", "T (.t)"
and "D (.d)", "t" and "d","p" and "b", etc., in speech, EVEN THOUGH
THEY ARE WRITTEN ONLY AS "k", "c", "T", "t", "p" respectively.
They follow a consistent rule and take multiple phonetic values.
These letters are called 'hard' consonants - vallinam in tamil.
But kh, ch, bh, gh etc., sounds are not accorded any formal
status in Tamil.
>>



______________________________________________________