From Sat Sep 25 12:53:19 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 25 Sep 1999 19:56:21 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 1368 invoked from network); 25 Sep 1999 19:56:17 -0000
Received: from dfw-ix14.ix.netcom.com (206.214.98.14) by qg.egroups.com with SMTP; 25 Sep 1999 19:56:17 -0000
Received: (from smap@localhost) by dfw-ix14.ix.netcom.com (8.8.4/8.8.4) id OAA21692; Sat, 25 Sep 1999 14:56:16 -0500 (CDT)
Received: from sji-ca7-59.ix.netcom.com(209.109.235.59) by dfw-ix14.ix.netcom.com via smap (V1.3) id rma021687; Sat Sep 25 14:56:05 1999
Message-ID: <003301bf078f$92d7d7c0$3beb6dd1@namakkal>
From: "Mani M. Manivannan"
To:
Cc:
Date: Sat, 25 Sep 1999 12:52:59 -0700
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3612.1700
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3612.1700
Subject: [agathiyar] Re: [kalaichol] tamil equivalent of the word 'design'
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2218

தமிழ்த்தொண்டர் கோ. முத்துப்பிள்ளை அவர்கள் "மொழிபெயர்ப்பு வேடிக்கைகள்"
என்ற நூலில் "கல்வெட்டையும் செப்பேட்டையும் படிக்கத் தெரிந்து கொண்டால்"
நல்ல சொற்களை உருவாக்க முடியும் என்று எழுதுகிறார். "ஆளத் தெரிந்தவன்
தமிழன். ஆண்டு வந்தவன் தமிழன். தன்னுடைய ஆட்சியின் சிறப்பையெல்லாம்
அவன் கல்லிலும் செம்பிலும் பொறித்து வைத்துள்ளான். ஆட்சியின் சிறப்பைக்
கூறுமிடமெல்லாம் ஆட்சிச் சொற்கள் அணியணியாத் திரண்டு நிற்பதில்
வியப்பென்ன?" என்கிறார்.

'கையூட்டு' = லஞ்சம், bribe
'முதுகண்' = guardian
'வேளாண்மை" = agriculture
'எழுதுகோல்' = pen
'நெடுநீர்' = delay
அங்காடி = market
வலவன் = pilot
புறனடை = exception

என்று வழக்கில் வந்து கொண்டிருக்கும் சில சொற்களை எடுத்துக் காட்டுகிறார்.

"சுருக்கமும் இனிமையும் நிறைந்தது தமிழ் மொழி. Please என்னுமொரு சொல்
'க' என்னுமோர் எழுத்திலேயே அடங்கிவிடும்"

பேசுக = please speak
கொணர்க = please bring
தட்டச்சு செய்க = please type
அனுப்புக, வெளியிடுக = please issue
உறுதி செய்க = please ensure
கேட்டறிக = please ascertain
'அடுத்தன செய்க' = Please take further action

"அரும்பு, முகை, போது, மலர், அலர், வீ எனப் பூவின் பருவ நிலைகளை
வகுத்தவன் தமிழன். பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை,
தெரிவை, பேரிளம்பெண் எனப் பெண்ணின் பருவ நிலைகளை வகுத்தவன்
தமிழன். இயம்புதல், மொழிதல், சாற்றுதல், கழறுதல், விளம்புதல், செப்புதல்,
அறைதல் எனச் சொல்லுவதற்குரிய சொற்களை அடுக்கிச் சொன்னவன் தமிழன்.
ஞாயிறு, கதிரவன், சுடரவன், பரிதி, எல்லோன், வெயிலோன், வெய்யோன்
எனப் பகலவனுக்குப் பல பெயர்களைக் கண்டவன் தமிழன். ஒங்கல், பிறங்கல்,
பொருப்பு, வெற்பு என மலையின் வகையறிந்து பெயரிட்டவன் தமிழன்.
பண்ணை, பணை, செய், கழனி, பழனம், புலம், வரப்புள் என்னும் பல
சொற்களால் விளைநிலத்தை விளக்கியவன் தமிழன். அவனுக்கா
புதிய சொற்களை ஆக்க முடியாது? எழுத எழுதத்தான் தமிழின்
இனிப்புத் தெரியும்."

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
நூவர்க், கலி., அ.கூ.நா.