From Sat Sep 25 16:52:12 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
X-eGroups-Approved-By: agathiyar@... via web
Received: (listserv 1.259); by mz; 25 Sep 1999 23:55:14 -0000
Reply-To: agathiyar@egroups.com
X-Duplicate: Duplicate(2)--1399359815
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 25172 invoked from network); 25 Sep 1999 14:33:17 -0000
Received: from giasmd01.vsnl.net.in (202.54.6.1) by qh.egroups.com with SMTP; 25 Sep 1999 14:33:17 -0000
Received: from giasdmd01.vsnl.net.in ([203.197.133.229]) by giasmd01.vsnl.net.in (8.9.3/8.9.3) with SMTP id UAA15318; Sat, 25 Sep 1999 20:02:59 +0530 (IST)
Message-Id: <199909251432.UAA15318@...>
Date: Sat, 25 Sep 1999 20:1:3 +0500
From: "dr.RM.Krishnan"
To: "tamil@..."
CC: "agathiyar@egroups.com" , "kalaichol@egroups.com"
Organization: poosoft
X-mailer: FoxMail 2.1 [en]
Mime-Version: 1.0
Subject: [agathiyar] tamil equivalent of the word 'design'
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="us-ascii"
Content-Transfer-Encoding: 8bit
X-Yahoo-Message-Num: 2222

அன்புள்ள இணையத்தாருக்கு,

திட்டம் என்ற சொல் design என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக இப்பொழுதும் அரசுப் பொதுப்பணித் துறை,
பெருவழித்துறை போன்றவற்றில் பயன்பட்டு வருகிறது. (design,plan,project என எல்லாவற்றிற்கும் திட்டம் தான்.)
பலரும்
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழியாகத் தான் இதைப் பயன் படுத்தி வந்தனர். நானும் சில காலம் முன் design
என்ற
ஆங்கிலச் சொல்லுக்குப் பொருத்தமான தமிழ்ச் சொல் இன்னும் புழக்கத்திற்கு வரவில்லை என்று இணையத்தில்
சொல்லியிருந்தேன். அந்நிலையைச் சரிசெய்ய ஒரு முயற்சியாக இந்த மடல்.

design என்று அறிவியல், பொறியியல் மற்றும் நுட்பியலில்(technology) பயன்படும் சொல்லின் கிரேக்க வேர்ச் சொல்
'tassein'
என்று ஏற்கனவே அறிந்திருந்தேன். ஆனால் சரியான தமிழ்ப் பொருள் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன்.
(designate
என்று வேரொரு பொருளில் வருவதை இங்கு குறிக்க வில்லை.)

அண்மையில் Asko Parpolo-வின் Deciphering the Indus script என்ற நூலைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் syntax
என்ற சொல்லை விளக்கும் போது syn 'together'+tassein 'to arrange' என்று (6வது அதிகாரத்தில், பக்கம் 89-ல்) பிரித்து
விளக்கியிருந்தார். அப்பொழுதுதான் திடீரென்று விளங்கியது. தமிழில் arrange என்பதற்கான சொல்லை அடுக்கு என்று
சொல்லுகிறோம். அடுக்கு என்ற சொல்லையே எல்லாக் களங்களிலும் design என்ற பொருளில் வழங்குவது குழப்பத்தில்
முடியும். மாறாக, இணைச் சொற்கள் எதேனும் உண்டா என்று ஓர்ந்த போது, எங்களூர் வழக்கு நினைவுக்கு வந்தது.

இன்றுங் கூட தமிழகத்தில் உள்ள மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பொருள்களை ஓரிடத்தில்
ஒழுங்காக அடுக்கி வைப்பதை அடைந்து வைப்பது என்று சொல்லுவார்கள். 'என்னப்பா, பரண் முழுக்க அடஞ்சாச்சா ?'
இதே கருத்தை எதிர்மறையில் 'ஒரே அடசலா இருக்கே; ஒழுங்கா வச்சுக்கிறதில்லையா?' என்பார்கள். தமிழில் மண்
அல்லாததை மணல் என்பது போல அடைசு ஆகாது கிடப்பது அடைசல். இந்த வழக்காற்றை வைத்துப் பார்க்கும்
பொழுது
'அடைசு' என்பது 'arrangement' என்னும் பொருளில் பயன்பட்டிருப்பது புரிகிறது. முடிவாக, அடைசிற்கான design-ஐ
அ()டவு என்று சொல்லின் மூலம் மீட்க முடியும்.

அடு-அடை-அடைசு-அடைவு

கூடவே 'அடசு' என்ற வழக்குச் சொல் tassein என்ற கிரேக்கச் சொல்லோடும் 'அடஞ்சு' என்ற வழக்குச் சொல் 'arrange'
என்ற ஆங்கிலச் சொல்லோடும் ஒலியில் ஒத்திருப்பது எங்கோ ஒரு ஆழ்ந்த தொடர்பைக் காட்டுவதாக உணர்கிறேன்.
(இது போல எத்தனையோ தொடர்புகளை நூற்றுக் கணக்கான சொற்களில் கண்டிருக்கிறேன்; அவற்றைப் பிரிதொரு
மடலில் என்றாவது சொல்லப் பார்க்கிறேன்.)

முடிவாகச் சொன்னால்,

design engineer - அ()டவுப் பொறியாளர்
designer - அ()டவாளர்
design - அ()டவு
floral design - பூக்கோல அ()டவு.
engineering design - பொறியியல் அ()டவு

இந்த அ()டவு என்னும் ஆக்கத்தில் ஒரே ஒரு குறைவு என்று சொன்னால், 'கட்டங்களைப் பூர்த்துவதையும் (filling up)
அடைதல் என்றே நாம் சொல்லுகிறோம்'. இன்னொரு பக்கம் பார்த்தால், அது அவ்வளவு குறையாகப் படவில்லை; ஒரு
ஒழுங்கு முறைக்குள் தானே அடைகிறோம். அதுவும் design தானே! தவிர நாட்டியத்திலும் அடவு என்பது ஏற்கனவே
முன்னமைத்த தோற்றங்களை (designs)த் தானே குறிக்கிறது.

நாளா வட்டத்தில் அடைவில் 'வு' என்ற ஈறு தொக்கி அடை என்றே பழக்கப் பட்டால் மிக நல்லது. அதற்குக் காத்திருக்க
வேண்டும். இப்பொழுதே அதை விட்டு விடுவது கொஞ்சம் முந்திரிக் கொட்டை போல ஆகிவிடும்.

(தொழில் நுட்பவியலை நுட்பியல் என்றும், மின்சாரத்தை மின் என்றும் சொல்லுவது ஒரு நாற்பதாண்டுப் பழக்கத்திற்குப்
பின்
தானே சரியென்று தென்படுகிறது.)

அன்புடன்,
இராம.கி.