From Periannan Chandrasekaran Sat Sep 25 19:51:19 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 26 Sep 1999 02:54:21 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 1447 invoked from network); 26 Sep 1999 02:54:20 -0000
Received: from web705.mail.yahoo.com (128.11.23.25) by qh.egroups.com with SMTP; 26 Sep 1999 02:54:20 -0000
Message-ID: <19990926030818.28450.rocketmail@...>
Received: from [207.69.11.98] by web705.mail.yahoo.com; Sat, 25 Sep 1999 20:08:18 PDT
Date: Sat, 25 Sep 1999 20:08:18 -0700 (PDT)
From: Periannan Chandrasekaran
To: agathiyar@egroups.com
MIME-Version: 1.0
Subject: [agathiyar] Re: tamil equivalent of the word 'design'
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
Content-Transfer-Encoding: 7bit
X-Yahoo-Message-Num: 2224

--- "dr.RM.Krishnan" wrote:
> அன்புள்ள இணையத்தாருக்கு,
அன்புள்ள திரு. இராம.கி.
வணக்கம்.
>
> திட்டம் என்ற சொல் design என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக இப்பொழுதும் அரசுப்
> பொதுப்பணித் துறை,
> பெருவழித்துறை போன்றவற்றில் பயன்பட்டு வருகிறது. (design,plan,project என
> எல்லாவற்றிற்கும் திட்டம் தான்.)
ஆம். அது நிறைவான நிலைமை யன்று. மணிவண்ணன் மேற்கோள் காட்டியதுபோல் செல்வத் தமிழன்
பிச்சைக்காரன்போல் நடக்கும் நிலையே அது.
மன்றமையத்தின் "தினமொரு வார்த்தை" யென்னுந் திரியில் project, plan, scheme ஆகிய
பொருட்கொத்துகான
சொற்களைப் பற்றிய வினாவை யெழுப்பியிருந்தேன்.
வலையகராதியை ஆய்ந்து கண்ட சில சொற்களையும் ஆங்கே இட்டிருந்தேன்:
நடவை, ஆமாறு, எடுப்பு

நடவை = நடாத்தும் வகை; ஆமாறு = ஆகும் வழி;
நடவை = plan: இது மிகப் பொருந்தும்: plan என்பது பொதுவாகவே எடுத்தகாரியத்தி நடத்தி
முடிக்கும்வழி யன்றோ?!
எடுப்பு என்னுஞ் சொற்கு இம்மடல் வரையுங்காற் றோன்றிய நேர் ஆங்கிலச் சொல்: undertaking!
எடுத்த காரியம்!
இன்னும் scheme, mechanism போன்ற இப்பொருட்கொத்தில் அடங்கும் சொற்களுக்கு இணையான
தமிழ்ச்சொற்களைக்
காண விழைகிறேன்.
அவ்வகராதியில் என் தேடல் முடியவில்லை. அவையோரையும் தேடத் தூண்டுகிறேன்.
scheme என்பது device பொறி, எந்திரம் என்னும் பொருட்சாய்வுடைத்து என்பது என் பாணிப்பு.


> பலரும்
> கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழியாகத் தான் இதைப் பயன் படுத்தி வந்தனர். நானும் சில
> காலம் முன் design
> என்ற
> ஆங்கிலச் சொல்லுக்குப் பொருத்தமான தமிழ்ச் சொல் இன்னும் புழக்கத்திற்கு வரவில்லை என்று
> இணையத்தில்
> சொல்லியிருந்தேன். அந்நிலையைச் சரிசெய்ய ஒரு முயற்சியாக இந்த மடல்.
>
> ....> விளக்கியிருந்தார். அப்பொழுதுதான் திடீரென்று விளங்கியது. தமிழில் arrange
என்பதற்கான
> சொல்லை அடுக்கு என்று
> சொல்லுகிறோம். அடுக்கு என்ற சொல்லையே எல்லாக் களங்களிலும் design என்ற பொருளில்
> வழங்குவது குழப்பத்தில்
> முடியும். மாறாக, இணைச் சொற்கள் எதேனும் உண்டா என்று ஓர்ந்த போது, எங்களூர் வழக்கு நினைவுக்கு
> வந்தது.

ஓர்ந்த என்னும் ஆட்சி மிகச் சீரியது.!
design என்பதன் பல பொருள் வகைகளில் இங்கு எடுப்பை நடத்தும் திரன் பற்றிய பொரூளில்
நோக்குகிரீர்கள்.
அவ்வாங்கிலச் சொல் கோலம் (pattern), ஒரு பண்டத்தையோ அமையத்தையோ உருவாக்குதல் என்னும்
மற்ற
பொருள்களிலும் ஆளும்.
மென்கலத் தச்சன் (software architect) என்னும் என் தொழின்முறையில் மென்கலவமையத்தை
உருவாக்குதல் என்னும் பொரூளில்
அச்சொல் ஆளும். அதற்கு யான் பொருத்தமாகக் கருதும் தமிழ்ச்சொல்: வடிப்பு.
analysis = பகுப்பு
design = வடிப்பு
implementation (coding) = ?
testing = தேர்ப்பு(?)
deployment= ?

கொலோன்:
vaTi-ttal

otl vaTi-ttal vaTi-ttal 02 1. to cause to flow out; to shed, as tears;
to drain; 2. to strain, as conjee from cooked rice; to filter; 3. to
squeeze out; 4. to distill, as oil; 5.to refine, polish; to perfect; 6.
to express in choice language; 7. to win over; to bring under control;
8. to tame, train, as wild elephants; 9. to practise; 10. to cook,
asrice; 11. to sharpen; 12. to comb and fasten, as hair; 13. to flatten
out; 14. to lengthen; 15. to stroke with the fingers over, as the
string of a lute in playing; 16. to quip, as a horse; 17. to
investigate, examine; 18. to select, choose; 19. to pluck, nip

ஈங்கு: refine, polish, select, choose என்னும் பொருட்பட அமைதல் காண்க. #4, #5,
#6, #11, #12, #18

மேலுஞ்சில சான்றுகளைப் பின்னர் இடுகிறேன்.


அவையோர் கருத்தறிய அவா.

>
> இன்றுங் கூட தமிழகத்தில் உள்ள மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பொருள்களை
> ஓரிடத்தில்
> ஒழுங்காக அடுக்கி வைப்பதை அடைந்து வைப்பது என்று சொல்லுவார்கள். 'என்னப்பா, பரண் முழுக்க
> அடஞ்சாச்சா ?'
> இதே கருத்தை எதிர்மறையில் 'ஒரே அடசலா இருக்கே; ஒழுங்கா வச்சுக்கிறதில்லையா?'
> என்பார்கள். தமிழில் மண்
> அல்லாததை மணல் என்பது போல அடைசு ஆகாது கிடப்பது அடைசல்.

அல் என்னும் பின்னொட்டின் இத்தைகய நுணுகிய நீர்மையைச் சுட்டியமைக்கு நன்றி.


>....>
> முடிவாகச் சொன்னால்,
>
> design engineer - அ()டவுப் பொறியாளர்
> designer - அ()டவாளர்
> design - அ()டவு
> floral design - பூக்கோல அ()டவு.
> engineering design - பொறியியல் அ()டவு
>
> இந்த அ()டவு என்னும் ஆக்கத்தில் ஒரே ஒரு குறைவு என்று சொன்னால், 'கட்டங்களைப் பூர்த்துவதையும்
> (filling up)
> அடைதல் என்றே நாம் சொல்லுகிறோம்'.
எம் முன்னீட்டையும் கருதுக.


நன்றி.
பெ.சந்திரசேகரன்,
அட்லாண்டா, அமெரிக்கா.
__________________________________________________
Do You Yahoo!?
Bid and sell for free at http://auctions.yahoo.com