From Periannan Chandrasekaran Sat Sep 25 20:34:13 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 26 Sep 1999 03:37:15 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 7487 invoked from network); 26 Sep 1999 03:37:15 -0000
Received: from web701.mail.yahoo.com (128.11.23.21) by qg.egroups.com with SMTP; 26 Sep 1999 03:37:15 -0000
Message-ID: <19990926035114.13136.rocketmail@...>
Received: from [209.86.40.97] by web701.mail.yahoo.com; Sat, 25 Sep 1999 20:51:14 PDT
Date: Sat, 25 Sep 1999 20:51:14 -0700 (PDT)
From: Periannan Chandrasekaran
To: agathiyar@egroups.com
MIME-Version: 1.0
Subject: [agathiyar] Re: [kalaichol] tamil equivalent of the word 'design'
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
Content-Transfer-Encoding: 7bit
X-Yahoo-Message-Num: 2225



--- "Mani M. Manivannan" wrote:
From:
"Mani M. Manivannan" | Block address
To:

CC:

...



புதியன:

..>
'முதுகண்' = guardian
.....
>'நெடுநீர்' = delay
....
>வலவன் = pilot: பாகன், மீகான், நீகான், மாலுமி என்னுஞ் சொற்களையும் காண்க:
பாகுதல் = ஓட்டுதல், செலுத்தல், காடாவுதல்;
நீத்தல் = வடமொழியின் "nI" என்னும் தேரோட்ட வேர்ச்சொல்லை யொக்கும்!

driver என்பதற்குப் பாகன் என்னும் சொல் மிகப் பொருந்தும்.
அந்நாளிற் றேர்ப்பாகன்; இந்நாளிற் கார்ப்பாகன் :-))

>புறனடை = exception
மிக அழகியது ! நன்றி..இன்று என் கருவூலத்தில் சில மணிகளின் புதுவரவு!

என்று வழக்கில் வந்து கொண்டிருக்கும் சில சொற்களை எடுத்துக் காட்டுகிறார்.

>"சுருக்கமும் இனிமையும் நிறைந்தது தமிழ் மொழி. Please என்னுமொரு சொல்
'>க' என்னுமோர் எழுத்திலேயே அடங்கிவிடும்"
அரிய செய்தி. நன்றி.


>கொணர்க = please bring
please fetch என்பது இன்னும் துல்லிய மொழியாக்கமாமோ?

>தட்டச்சு செய்க = please type
ஒன்றரையடி நீண்டது...!
தட்டுக, தட்டெழுதுக?

>உறுதி செய்க = please ensure

>'அடுத்தன செய்க' = Please take further action

சூறைக்காற்றென்னுஞ் சொல் பற்றிப் பேசியபோது நான் குறிப்பிட்டவாறு
தமிழர் அண்மையில் இவ்வாறு நெடுந்தொடரான கலைச்சொற்கள் படைக்க முயல்கின்றனர்.
இந்த செய்யென்னும் சொல் தேவையில்லாதது.
அந்நூலின் ஆசிரியரே இவ்வாறு சொற்கள் படைப்பது நம் சமுதாயத்தில் இப்பழக்கம் எவ்வளவு
ஊரறியுள்ளதென்பதி
இதுகாட்டும்.

இங்கு ஒரு சிறிய தலையாய குறிப்பு:
தற்காலத் தமிழ் பல வினைச்சொற்களின் சுருக்கத்தையும் தன்வினைமையையும் (intransitive
form)
active voice உருவையும் தொலைத்துவிட்டுத் திண்டாடுகிறது.
ஆதலாற்றான் சங்கக் காலத்தில் குடகுமலைக் காவிரிபோல் ஆற்றாலுடன் குத்திட்துப் பாய்ந்த மொழி
இப்போது இந்நாட்பூம்புகார்க் காவிரிபோல் சொங்கிப்போய் தள்ளாடுகிறது. அதனாற் றான்
ஊன்றுகோற்போல்
துணைக்கு மேற்கணட தொடரில் உள்ளதுபோல் "செய்" போன்ற சொற்களைத் தமிழன் வேண்டுகின்றான்.
விரிவாகப் பின்னர்.




>தமிழன். இயம்புதல், மொழிதல், சாற்றுதல், கழறுதல், விளம்புதல், செப்புதல்,
>அறைதல் எனச் சொல்லுவதற்குரிய சொற்களை அடுக்கிச் சொன்னவன் தமிழன்.
கொலோனில் "tell" என்னும் ஆங்கிலச் சொலைத்தட்டித் தமிழ்ச்சொற்கள் தேடின்
சுமார் 25க்கும் நீண்ட பட்டியல் கிட்டும்.
இன்னும் say, utter, speak, talk, explain, announce என்று ஆங்கில/இலத்தீன்
சொற்களைத் தட்டின்
மேலும் பல கிட்டும்!

>.. ஒங்கல், பிறங்கல்,
>பொருப்பு, வெற்பு என மலையின் வகையறிந்து பெயரிட்டவன் தமிழன்.
தேவாரம்:சம்பந்தர்:திருமருகல்
"...
இலங்கைக் கரசன் விலங்கல் எடுப்பத்
துலங்கல் விரலூன் றலுந்தோன் றலனாய்.."

மலைக்கு விலங்கல் என்னும் ஒரு மிக நுணுக்கம் பொதிந்த சொல்லொன்றும் உண்டு.

அது விலங்குதல் என்னும் வினைச்சொல்லின் அடியானது.
ந.இனியர்:
"....
புள்ளார் இயத்த விலங்குமலைச் சிலம்பின்..." = குறிஞ்சிப் பாட்டடிகளில்
"...புட்களின் ஓசை நிறைந்த ஒன்றை யொன்று குறுக்கிட்டுக் கிடக்கும் மலைகளின்சாரலில்..."
என்று உரைகூறுவார்!
அதாவது "crisscross" என்னும் மிக நுணுகிய பொருள் அடியில் அக்காலத் தமிழன்
பெயரிட்டான்! இதைப் படித்தவுடன் மெய் சிலிர்த்தேன்!
மேளும் இரண்டாவதுய் சிலிர்ப்பல்டை பாய்ந்தது? ஏன்?
"overlap" ஏனும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான ஒரு ஆழமான தொன்மையான சொல்லொன்று
கிட்டியதென்று!

முத்தமிழின் முதற்றமிழின் ஐங்கூறுகளின் இரண்டாங் கூறின் கோடியில் ஒருபங்கைச் சுவைக்கவே இவ்வளவு
இனிப்பின் தமிழ் முழுதும் அறிய எத்துணைக் கோடிப் பிறவி வேண்டும்?!

("
எண்ணும் எழுத்தும் இயல் ஐந்தும் பண்ணான்கும்
பண்ணின்ற கூத்துப் பதினொன்றும் - மண்ணின்மேல்
போக்கினால் பூம்புகார்ப் பொற்றொடி மாதவிதன்
வாக்கினாள் ஆடரங்கில் வந்து." - இளங்கோ: அரங்: இறுதி வெண்பா)





>பண்ணை, பணை, செய், கழனி, பழனம், புலம், வரப்புள் என்னும் பல
>சொற்களால் விளைநிலத்தை விளக்கியவன் தமிழன். அவனுக்கா
>புதிய சொற்களை ஆக்க முடியாது?



> எழுத எழுதத்தான் தமிழின்
>இனிப்புத் தெரியும்."

>அன்புடன்,

>மணி மு. மணிவண்ணன்
>நூவர்க், கலி., அ.கூ.நா.

நன்றி!
பெ.சந்திரசேகரன்...
அட்லாண்டா, அமெரிக்கா!
__________________________________________________
Do You Yahoo!?
Bid and sell for free at http://auctions.yahoo.com