From Sun Sep 26 06:30:06 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 26 Sep 1999 13:33:08 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 30433 invoked from network); 26 Sep 1999 13:33:07 -0000
Received: from iris.iupui.edu (134.68.220.32) by qg.egroups.com with SMTP; 26 Sep 1999 13:33:07 -0000
Received: from rravindr.iupui.edu (as5304-p120.dialin.iupui.edu [149.166.233.122]) by iris.iupui.edu (8.9.1a/8.9.1/1.18IUPUIPO) with SMTP id IAA17019 for ; Sun, 26 Sep 1999 08:33:04 -0500 (EST)
Message-Id: <3.0.3.16.19990926083101.4c679398@...>
X-Sender: rravindr@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.3 (16)
Date: Sun, 26 Sep 1999 08:31:01 -0500
To: agathiyar@egroups.com
From: "Ram S. Ravindran"
In-Reply-To: <003301bf078f$92d7d7c0$3beb6dd1@namakkal>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] tamil of yesterday and today
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Yahoo-Message-Num: 2228

At 12:52 PM 9/25/99 -0700, you wrote:
>தமிழ்த்தொண்டர் கோ. முத்துப்பிள்ளை அவர்கள் "மொழிபெயர்ப்பு வேடிக்கைகள்"
>என்ற நூலில் "கல்வெட்டையும் செப்பேட்டையும் படிக்கத் தெரிந்து கொண்டால்"
>நல்ல சொற்களை உருவாக்க முடியும் என்று எழுதுகிறார். "ஆளத் தெரிந்தவன்
>தமிழன். ஆண்டு வந்தவன் தமிழன். தன்னுடைய ஆட்சியின் சிறப்பையெல்லாம்
>அவன் கல்லிலும் செம்பிலும் பொறித்து வைத்துள்ளான். ஆட்சியின் சிறப்பைக்
>கூறுமிடமெல்லாம் ஆட்சிச் சொற்கள் அணியணியாத் திரண்டு நிற்பதில்
>வியப்பென்ன?" என்கிறார்.
>
>'கையூட்டு' = லஞ்சம், bribe
>'முதுகண்' = guardian
>'வேளாண்மை" = agriculture
>'எழுதுகோல்' = pen
>'நெடுநீர்' = delay
>அங்காடி = market
>வலவன் = pilot
>புறனடை = exception
>
>என்று வழக்கில் வந்து கொண்டிருக்கும் சில சொற்களை எடுத்துக் காட்டுகிறார்.
>
>"சுருக்கமும் இனிமையும் நிறைந்தது தமிழ் மொழி. Please என்னுமொரு சொல்
>'க' என்னுமோர் எழுத்திலேயே அடங்கிவிடும்"
>
>பேசுக = please speak
>கொணர்க = please bring

>
>"அரும்பு, முகை, போது, மலர், அலர், வீ எனப் பூவின் பருவ நிலைகளை
>வகுத்தவன் தமிழன். பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை,
>தெரிவை, பேரிளம்பெண் எனப் பெண்ணின் பருவ நிலைகளை வகுத்தவன்
>தமிழன். இயம்புதல், மொழிதல், சாற்றுதல், கழறுதல், விளம்புதல், செப்புதல்,
>அறைதல் எனச் சொல்லுவதற்குரிய சொற்களை அடுக்கிச் சொன்னவன் தமிழன்.
>ஞாயிறு, கதிரவன், சுடரவன், பரிதி, எல்லோன், வெயிலோன், வெய்யோன்
>எனப் பகலவனுக்குப் பல பெயர்களைக் கண்டவன் தமிழன். ஒங்கல், பிறங்கல்,
>பொருப்பு, வெற்பு என மலையின் வகையறிந்து பெயரிட்டவன் தமிழன்.
>பண்ணை, பணை, செய், கழனி, பழனம், புலம், வரப்புள் என்னும் பல
>சொற்களால் விளைநிலத்தை விளக்கியவன் தமிழன்.

அவனுக்கா
>புதிய சொற்களை ஆக்க முடியாது? எழுத எழுதத்தான் தமிழின்
>இனிப்புத் தெரியும்."

அந்தத் தமிழன் அந்தகாலத்து வெளிப்பாடுகளுக்கு தேவையன சொற்களை உருவாக்கினான், நடைமுறையிலும்
உபயோகித்தான்.

அவன் எழுதவேண்டிய கருத்துக்கள் அவன் மனதிலேயே உருவாகியவை. ஆகவே அதற்கேற்ற துல்லிய, நுணுக்கமான
பொருளடங்கிய சொற்களை அவனால் உருவாகமுடிந்தது. இயல்பாகவும் வெளிவந்தது.

ஆனால் இக்காலத்தில் உலகத்தில் நடைமுறைக்கு வந்துள்ள கருத்துக்கள் வெளிநாட்டுக்காரர்களின் மனதில்
உருவானவை.

சராசரி தமிழன் அதை தமிழில் வெளிப்படுத்துவதில் (எழுத்திலும், பேச்சிலும்) முயலுவதில்லை.முயலும்போது
நம்பிக்கையிழந்து ஆங்கில பயனீட்டை நாடுகிறான்.

தமிழ் வல்லுனர்களோ, இக்காலப் பிரச்சனையில் கலந்துகொள்ளாமல் "இலக்கிய போதையிலேயே" உழல
விரும்புகிறார்கள். இல்லையென்றால் தெளிவற்ற ஒரே வார்த்தையை சூழலுக்குத் தகுந்த மாதிரி
பயன்படுத்துகிறார்கள்

புதியதாக உருவாக்கிய சொற்கள், தமிழர்கள் மனதில் பரவலாகத் தென்படவில்லை,ஏற்றப்படவுமில்லை.
அப்படியிருக்கையில் கருத்துக்கள் தமிழில் எவ்வாறு வெளிவரும்?

தொழில், அறிவியல், தொழில்நுட்பம், புதிய கலாச்சாரம், உலகமுழுவதும் பேசப்படும் கருத்துக்கள், தமிழ்
ஊடகங்களில் இடம் பெறுவதில்லை.

கொலோன் தமிழ் களஞ்சியத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட சொற்கள் இன்னும் ஏற்றப் படவில்லை.

தற்காலத்தில் தொழில் , இண்டியா டுடே ஆகிய வெகுசில பத்திரிகைகளில் தான் புதிய கருத்துகள்
தமிழில் வெளிப்படுத்தப் படுகின்றன. அதைப் படிக்கும் தமிழர்கள் வெகு குறைவு.

தமிழ் நாட்டு அரசாங்க அமைப்புகளும் சிக்கலான விடயங்களை தமிழில் எழுதுவதில்லை. இவ்வாறு
நிலைமையிருக்கையில் சராசரித் தமிழன் எவ்வாறு நவீன கருத்துக்களை இலகுவாக வெளிப்படுத்தும் ஆற்றல்
பெறமுடியும்?

மொழியின் வளம் அது கொண்டுள்ள சொற்களின் வளத்தைச் சார்ந்ததல்லவா?

இதற்கு நாம் என்ன செய்யலாம்

கொலோன் அகராதி, மற்றும் இதர அகராதிகளில் கண்டிராத புதுத் தமிழ் சொற்களைத் தொகுத்து இணைய
அகராதியில் சேர்த்துவைக்கலாம். இவ்வாறான அகராதி ஏற்கனவே உள்ளது. அதற்கு வேண்டியது ஒருமித்த புதிய
சொற்கள்தான்.

இண்டி ராம்



>
>அன்புடன்,
>
>மணி மு. மணிவண்ணன்
>நூவர்க், கலி., அ.கூ.நா.
>
>
>------------------------------------------------------------------------
>
>eGroups.com home: http://www.egroups.com/group/agathiyar
>http://www.egroups.com - Simplifying group communications
>
>
>
>
>