From Sun Sep 26 06:38:18 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 26 Sep 1999 13:41:20 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 31984 invoked from network); 26 Sep 1999 13:41:20 -0000
Received: from law-f141.hotmail.com (HELO hotmail.com) (209.185.131.204) by qh.egroups.com with SMTP; 26 Sep 1999 13:41:20 -0000
Received: (qmail 52124 invoked by uid 0); 26 Sep 1999 13:41:19 -0000
Message-ID: <19990926134119.52123.qmail@...>
Received: from 216.118.13.20 by www.hotmail.com with HTTP; Sun, 26 Sep 1999 06:41:09 PDT
X-Originating-IP: [216.118.13.20]
From: "Nagamanickam Ganesan"
To: tamil@...
Cc: agathiyar@egroups.com
Date: Sun, 26 Sep 1999 06:41:09 PDT
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: ukara, uukaara uyirmay uruvam (2 parinthurai)
Mime-Version: 1.0
Content-Type: text/plain; format=flowed
Content-Transfer-Encoding: 7bit
X-Yahoo-Message-Num: 2230


Here is my recommendations for the orthographic changes in
u and uu series (uyirmey). The URL is
http://www.blkbox.com/~speri/ganesan/ganesan.jpg
It is a small file, 47k in size.

This can be done few years later, like what Prof. Selva says.

1) The first reco comes up with an inverted "oRRai-cuzhi-kombu".
Just two easy symbols to produce the whole series of u,uu
series of uyirmey letters.

2) The second one rearranges existing forms. Only minimal
changes in the existing u-uu series of uyirmey.

Please tell me of your thoughts and,
which one you like. If there is a better suggestion,
please post it or email to me also.

Thanks,
N. Ganesan



உகர, ஊகார உயிர்மெய் எழுத்து உருவ மாற்றம்
--------------------------------------------------------------------
டாக்டர். நா. கணேசன், ஹூஸ்டன்

1. தமிழ் எழுத்துச் சிறப்பு
-----------------------------------

ஒலியன்களை (phonemes) எழுத்துக்களாகக் கொண்ட உலக மொழிகள்
அனைத்திலும் தமிழ் ஒன்றே மிகக்குறைந்த எழுத்துக்களால் இயங்குவது.
உயிர் 12, மெய் 18, ஆய்தம் 1. ஆக, 31 எழுத்துக்களே தமிழில் உள. உயிர்
மெய்யின்மேல் உறையும்போது உருவாகும் உயிர்மெய்கள் 216ஐயும் தனி
எழுத்துக்களாக எண்ணத் தேவையில்லை.

தாளில் அச்சிடல் (printing), தட்டெழுத்து (typing), கணினி எழுத்துருக்கள்
(computer fonts), கணினிவழி அச்சீடு (DTP), வலையகராதி (Online dictionary),
இலக்கியங்களுக்கு வலைமேடை (Cologne project, Project Madurai), இருமொழி
எழுத்துரு (bilingual fonts) மூலம் மின்மடல் போன்றன தமிழில் ஏனைய மொழிகளுக்கு
முன்னர் சாத்தியம் ஆவதும் இந்த எளிமை காரணமாகத்தான். தமிழ் ஒலியியல்
கோட்பாடுகளைப் (Tamil Phonological Rule) பயனாக்கி, நாம் படிப்பதை
கணினிக்கோப்புகளாக எழுதிக்கொள்ளவும், தமிழ் எழுத்துக்களைத்
தானியங்கிக் கருவிகள்கொண்டு வாசிக்கச் செய்யவும் ஏதுவாகும் நாள் தொலைவில்
இல்லை. தமிழ் அச்சுநூல்கள் ஒளியெழுதி மென்கலத்தால் (OCR) தட்டெழுத்துக்
கருவியில் மனிதர் உழைக்காமலேயே கணினி ஏடுகளாய் மாறும் விந்தையையும்
கணியர்கள் முயன்றால் நிகழ்த்த முடியும். வடமொழி, இந்தி போன்றவற்றில் உள்ள
கூட்டெழுத்துக்கள் (சம்யுக்தாக்ஷரம்) என்ற தொல்லை நமக்கு இல்லை. எழுத்துருக்கள்,
தட்டெழுத்து முதலிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தமிழில் முதலில் தலையெடுக்க
அதன் எழுத்துக்கள் முத்து முத்தாய்த் தனித்திருப்பது முக்கியக் காரணம்.
தொல்காப்பியம் விளக்கும் "புள்ளி" ஓர் அரிய கண்டுபிடிப்பு. புள்ளியியல் கோட்பாடு
வடமொழியில் இல்லை. எனவே தான், ப'கவானை ப'க்வான் என்றும், இராமநாராயணனை
இராம்நாராயணன் என்றும் வடக்கே பிழைபட வாசித்தல் நேர்கிறது..

2. தமிழ் எழுத்து வளர்ச்சி
-------------------------------------

முதன்முதலில் தமிழ் பனையோலை ஏடுகளில் எழுதப்பட்டு வந்தது. கல்லிலும்,
செம்பிலும் ஆவணங்களை வெட்டுவதும் உண்டு. பனையோலைப் பக்கங்களில் மஞ்சள்
சார்த்தி, எழுத்துக்கள் மீது கருநிற மையைத் தோய்த்துக் கவனமாகப் பயன்படுத்தினர்.
தமிழ்க் குழந்தை மஞ்சளில் குளித்து, மையிட்டு, அலங்கரித்து, குறள் என்னும் முப்பால்
அருந்தி வளர்ந்தாள் என்று இந்த மையாடுதலைத் தமிழ்விடு தூது அழகாகக் குறிக்கிறது.

மஞ்சள் குளிப்பாட்டி, மையிட்டு, முப்பாலும்
மிஞ்சப் புகட்ட மிகவளர்ந்தாய்!

வானமாகிய ஏட்டில் தீட்டப்பட்ட எழுத்துக்கள் போல விண்மீன்கள் விளங்கின. கரிய மை
தடவிய ஏடுபோல வானம் இருள் கப்பியிருந்தது. வெண்துகிலால் மையை ஏட்டிலிருந்து
போக்குவது போல, கடலில் தோன்றிய நிலவின் ஒளிக்கற்றைகள் இருளை வானிலிருந்து
துடைத்தன. திருவிளையாடல் புராணம் தீட்டும் சித்திரம் இது.

சேய தாரகை வருணமாத் தீட்டிய வானம்
ஆய ஏட்டினை இருள் என்னும் அஞ்சனம் தடவி
தூய வாள் நிலா எனும் வெண் தூசினால் துடைப்பான்
பாய வேலையில் முளைத்தனன் பனிமதிக் கடவுள்.

தாளில் அச்சிடல் பெருவழக்காக மலர்ந்தபோது, பல நூற்றாண்டுகளாக எழுத்தாணிகளால்
வரையப்பட்ட தமிழுக்கு ஒரு சிறந்த மாற்றத்தை வீரமாமுனிவர் செய்தார். "மெய்யின்
இயற்கை புள்ளியோடு நிலையல்; எகர ஒகரத்து இயற்கையும் அற்றே" என்பது தொல்காப்பியம்.
ஆனால் தெளிவு கருதி, வீரமாமுனிவர் உயிர் எழுத்துக்களில் இருந்து புள்ளியை
அகற்றிவிட்டார். மேலும், எகர, ஏகார, ஒகர, ஓகார உயிர்மெய் வரிசைகளில் வேறுபாடு
விளங்குமாறு புதிதாக இரட்டைச் சுழிக் கொம்பை உருவமைத்தார். காரைக்குடி
சொ. முருகப்பா 1930ல் தொடங்கி, பெரியார் பரவலாகப் பயன்படுத்திய ணா, றா,
னா, னை, ணை, லை, ளை என்னும் ஏழு வரிவடிவங்களைத் தமிழக அரசு நடைமுறை
ஆக்கிவிட்டது. தற்போதைய தமிழ் எழுத்துக்களின் நெடுங்கணக்கை நோக்கினால்
உகர, ஊகார உயிர்மெய் எழுத்துக்கள் தவிர ஏனைய எழுத்துக்களின் வடிவ
ஒழுங்கமைதி சீராகத் தெரிகிறது.

3. வரிவடிவில் சிறுமாற்றம்
----------------------------------------

தமிழில் உள்ள உயிர்மெய் எழுத்து வரிசையைப் பாருங்கள். உகர, ஊகார
வரிசையில்தான் வடிவ ஒழுங்கு சற்றுக் குறைகிறது. இதனால், தமிழ் படிப்போருக்கு
மனத்தில் படியவைக்க இடர்ப்பாடு. :-(

i) கு ஙு சு ஞு டு ணு து நு பு மு யு ரு லு வு ழு ளு று னு
ii) கூ ஙூ சூ ஞூ டூ ணூ தூ நூ பூ மூ யூ ரூ லூ வூ மூ ளூ றூ னூ

இந்தச் சிக்கலைச் சரிசெய்ய ஒரு மாற்றத்தை அறிஞர்கள் பல்லாண்டுகளாய்ச்
சொல்லிவருகின்றனர். விளக்கம்: எந்தவொரு அகரமேறிய மெய் எழுத்தையும்
O என்ற ஒரு குறியீட்டால் குறிப்போம். அதாவது, ஒரு மெய் + அ = O;
உகர, ஊகார உயிர்மெய்களைக் குறிக்க u, U என்னும் குறிகளைப் பாவிப்போம்.
அதன்படி, O என்னும் எழுத்தின் உயிர்மெய்வரிசை ஒழுங்கடையும்:

O O O O Ou OU O O O O O Oள

மேலே உள்ள (i), (ii) வரிசைகள் u, U குறிகளால் சீர்பெறும்:

i) கu ஙu சu ஞu டu ணu தu நu பu மu யu ரu லu வu ழu ளu றu னu
ii) கU ஙU சU ஞU டU ணU தU நU பU மU யU ரU லU வU ழU ளU றU னU

புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டியது இரண்டே இரண்டு குறிகளே!!

உதாரணத்துக்கு, u, U குறிகளுக்கு , என்னும் கிரந்தக்குறிகளைப்
பயன்படுத்திக் காட்டுகிறேன்.

i) க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன
ii) க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன

இந்தக் கிரந்தக் குறிகள்தான் சிறந்தனவா என்பது பார்க்கப்படவேண்டும்.
குகர எழுத்தில் உள்ள கீழ்வளையம் போன்று விலங்கிட்டும், அவ்வளையத்தில்
சுழியிட்டும் இப்போதிருக்கும் உகர, ஊகார உயிர்மெய்களுக்கு ஏறத்தாழ
ஒத்தவகையில் நான் ஒரு எழுத்தமைப்பும் உருவாக்கியுள்ளேன்.
எதுவாயினும் எனக்கு உகப்பே.

இந்த u, U என்னும் உகர, ஊகாரக் குறிகளுக்குத் தமிழுக்கியைந்த நல்ல
வடிவுகளை மலையகம், சிங்கை, ஈழம் நாட்டார் உள்ளடங்கிய அறிஞர்
குழுவமைத்துத் தமிழக அரசு தேர்வு செய்யவேண்டும்.

எடுத்துக்காட்டு:

நடைமுறை:
-------------------
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

பரிந்துரை:
--------------
சிறப்பொடu பUசனை செல்லாதu வானம்
வறக்கuமேல் வானோர்க்கuம் ஈண்டu

4. விளையும் நன்மை:
-------------------------------

ஆயிரக்கணக்கான சித்திர எழுத்துக்கள் உள்ள சீன, 'சப்பானிய மொழி எழுத்துக்கள்
கணினிக்கு ஏறும்போது, நம் அருமைத் தமிழுக்கு இம்மாற்றம் அவசியமா? என
ஐயுறலாம். நான் இந்த மாற்றத்தைப் பரிந்துரைப்பது கருவிகளின் தேவைக்காக
அல்லவே அல்ல.

தமிழ் பயில்வோர் எளிதில் தமிழ் எழுத்துக்களை உள்ளத்தில் பற்றிக்கொள்ளவே
இந்த உகர, உகார உயிர்மெய் உருவ மாற்றம் பரிந்துரைக்கப்படுகிறது. குழந்தைகளும்,
இளமையில் கற்க இயலாதவரும், வெளிநாடுகளில் தமிழ் கற்க முன்வருவோரும்
தமிழ் கற்கும் முயற்சி எளிதாக உகர, ஊகார வரிசைகளுக்குச் சீர்மை ஏற்படுவது
அவசியம். தமிழ் எழுதும் மரபுக்கு ஏற்றவாறு மாறுதல்களைச் சற்றுச் செய்தால் அவை
நேர்பெறும். சில மணித்துளிகள் செலவிட்டால், பழைய முறை அறிந்தோர் புதிய முறையைக்
கற்றுக்கொள்ள இயலும். வருங்காலத்தில் புதுமுறை மாத்திரம் தெரிந்தோர், சிறிது
நேரப் பயிற்சியால் பழைய எழுத்துக்களைப் படித்து விடலாம். புதுமுறை அறிந்தோர்
பழைய முறையைப் படிக்க வேண்டிய தேவை சிலருக்கே இருக்கும்.

உலக நெறிகளுள், மாறுவது ஒன்றே மாறாத இயற்கை. இம்மாற்றத்தால் உயிர் 12, மெய் 18,
ஆய்தம் 1, , , , (u), (U), , , என்னும் 39 குறியீடுகளால் தமிழை அடக்கிட இயலும்.
தமிழ் எழுத்துக்களைக் குழந்தைகளும், கற்றறியா முதியோரும், தமிழ் மரபு அல்லது
ஆர்வம் பற்றித் தமிழ்கற்க விழைவோரும் எளிதில் கற்கலாம்.

மாறுவது வையத்து மரபு. உகர, ஊகார உயிர்மெய் எழுத்துக்களுக்கு இந்த எளிய,
ஒழுங்கமைதிக்கு ஒத்த, நல்ல மாற்றத்தைப் படிப்படியாகச் செய்வது தக்கது. ஒரு
இடைக்கால நிலையில் இரண்டுவித எழுத்துக்களும் உலவும். அரசு வெளியீடுகளும்,
சில இதழ்களும் சில ஆண்டுகள் புதுமுறையில் பதிப்பிக்கப்பட வேண்டும். புதுமுறை
பழக்கமாகச் சிறு பயிற்சி போதும். சொல்லப் போனால், சற்றுச் சிந்தித்தால் தானே
விளங்கிவிடும். காலப்போக்கில் பழக்கம் வழக்கமாய்க் கனிந்துவிடும்.

குழந்தையரும், மற்றவரும் தமிழ் கற்றுக் கொள்வது எளிமைப்பட, வரிவடிவில்
பொருத்தம் உடையதும், தீங்கு விளைக்காததும் ஆகிய மாற்றத்தை ஏற்றுக் கொள்ள
அரசும், மக்களும் முன்வர வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி; வணக்கம்.

நா. கணேசன்
9-9-99





Selva makes a very good point. Let us wait.
May be 2050 AD. No problems. My dream is *one day*
a simple, aesthitically pleasing, and fitting with Tamil orthography
is chosen for Tamil "ukara-uukaara uyirmey" letters.
This is the only change needed, when? It does not matter.
as I said, may be 2050 AD.

Then, teaching Tamil to Children will be easier than present:
Only 38 symbols to represent Tamil, 12 for uyir (existing today),
18 for mey (existing today), 1 aaytham (as existing today),
7 for uyir-mey. Only 38 symbols in all! (Compare to 52 symbols
for even English).

BTW, I very much like your propsal to use single quotes
to represent alien sounds from other languages. That is
the use of single quotes (mun-koTTu) for f,h,j,g,s,D(.d),d,b,sh.
Stripping those "munkoTTu"s will render the naturalized
Tamil forms for the foreign words right away. Your proposal
will apply for all words from any non-Tamil language,
exaple: English or Sanskrit.

Regards,
N. Ganesan


-----------------------------------------------------------------


When tamil.net was started, a lot of discussion tookplace
about this very same ukara Ukaara reform. I argued with Germany Kannan
and others for not advancing this reform at this stage. While the
reform is certainly needed, it is NOT the time; what we will lose
in the process is all that we have got now.
Numerous books (hundreds of thousands), numerous magazine
issues of past 100 years, pamphlets. We would need specialists like
archelologists (kalveTTu padippaaLarkaL கல்வெட்டு வல்லுனர்கள்) to know what
is written. Connectivity with our literature and heritage is crucial.
Tamil is in a delicate situation now (due to the situation
in India, Sri Lanka, unprecedented impact of technology etc.)
We *CAN* and *SHOULD* implement the reform for ukaram and
Ukaaram, at a time when we have electronically and digitally stored
all our documents (it *is* possible) using OCR etc. so that we can
substitute any symbol for our letters and still read without any
difficulty. And when the GDP or economic affluence of an average
Tamils is significantly better than now. Until such time it is
*UNWISE* to effect this reform. It is not same as the previous
reforms or like the ones for grantam. I don't think even the
introduction of Roman letters is bad (for the whole of India),
except that I believe we don't have to due to the availability of
terrific technology. I earnestly hope that people will spend more
time and effort on creating valuable content in Tamil than proposing such
critically dangerous reforms. Sometimes, a small
critical disturbance can destroy the whole system. I believe
we are at a critical juncture at this point in time and it would be
unwise to implement reforms of the type suggested for ukaram and Ukaaram.
Dr. Ganesan's systems are excellent and I like them;and people like Dr.
V.C. Kulandaiswamy have suggested many
reforms in the past, but is it wise to do it when Tamils are in
the state they are in. காலம் அறிதல் அறிவுடைமை !


செல்வா

N. Ganesan wrote:
> Grantham is not the only choice; It is just one among
> many options.
>
> Another option:
> Pl. consider inverted "oRRai cuzhi kombu" and
> the same with a knot at the end.
>
> Regards,
> N. Ganesan
>
Chandra writes:
<<<
2050??? even if you threw a number, it is too far away.
I would like to clarify my comment yesterday: I simply intended to
state that Selva's was a new way of *analyzing* the consequences,
since it brought an entirely new but important dimension to the
problem. Now that we need to have that perspective too, still we
need to discuss what weightage is due to it.
>>>

My point is that it is a *good* change. When? I can wait.
Say, 2025 or 2050 or 2100 AD. It does not matter.

Briefly: Earlier, many authors were advocating "ezhuththu
cIrthirththam" for the sake of helping typewriting efforts;
Arranging Tamil letters on a Typewriter keyboard, etc.,
Now, the technology has rendered them all obsolete and unnecessary.

I am not forwarding the "ukara, uukaara uyirmey" format changes
for any machine. It is needed (at some point in time. 2050 AD??)
to simplify teaching the "culture" tongue to Tamil children.

Other than this "u-uu" uyirmey format change, NOTHING else
is needed. Why? There is a *great* order in all the rest of
Tamil orthography.

Some suggest changing vowels' shape. For example:
Let me call "kAl" = the lengthening symbol that makes
any "akaram ERiya mey" into "aakaara neTil" like kaa, caa, Taa.

Some have written that the Tamil vowels aa, ii, uu, ee, oo
can be written as a+kAl, i+kAl, u+kAl, e+kAl, o+kAl
respectively. If you ask me, it is not *good* or *needed* at all.
All these vowel linearizations are not at all
needed, since "kAl" is used only to create "aakaaram" series,
and not for "ii", "uu", and so forth. The 12 vowels are just fine
and easy to pick up. Any other series in Tamil neDumkaNakku also
need not change, since there is *great* order in them.

Only, ukara and uukaara uyirmey letters need to change.
Then 39 symbols: 12 for uyir, 18 for mey, 1 for aaytham,
8 for creating the entire uyir-mey matrix.

Like you say below, effecting ukara-uukaara uyirmey change
with a suitable, pleasing and simple post-modifier to a mey letter
will not be disastrous. We can bring this change well planned
at a later date, say 2050 A.D.

In Tamil, the basic books, ancient and modern, will *not*
exceed about 2000. We must write more path breaking
books and render many new knowledge into Tamil.
The subject range in Tamil is rather not too broad.
We can easily convert the 2-5 thousand Tamil books
and publish them all in the new format of u,uu uyirmey series.
I do not think it is a major hurdle in terms of cost or technology.
Once the TN Govt. enforces, market forces will take care of them.

anbuDan,
nA. kaNEcan


______________________________________________________