From Palaniappan A Sun Sep 26 09:04:23 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 26 Sep 1999 16:07:25 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 23319 invoked from network); 26 Sep 1999 16:07:23 -0000
Received: from sunny.pacific.net.sg (203.120.90.127) by qg.egroups.com with SMTP; 26 Sep 1999 16:07:23 -0000
Received: from pop1.pacific.net.sg (pop1.pacific.net.sg [203.120.90.85]) by sunny.pacific.net.sg with ESMTP id AAA27644; Mon, 27 Sep 1999 00:07:15 +0800 (SGT)
Received: from liverpool.ntu.edu.sg (ppp51.dyn80.pacific.net.sg [210.24.80.51]) by pop1.pacific.net.sg with SMTP id AAA24753; Mon, 27 Sep 1999 00:07:13 +0800 (SGT)
Message-Id: <3.0.3.32.19990926120306.019f3210@...>
X-Sender: pala@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.3 (32)
Date: Sun, 26 Sep 1999 12:03:06 +0800
To: globaltamil@..., agathiyar@egroups.com
From: Palaniappan A
Mime-Version: 1.0
Subject: [agathiyar] The week that was
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2235

இஅன்பு நண்பர்களே,
கடந்த வார நினைவுகள்

கடந்த வாரம் நடைபெற்ற பல நிகழ்வுகள்மனதைத் தொடக்கூடியதாக, சஞ்சலம்தரக்கூடியதாக இருந்தன. ஊக்கம்
தரக்கூடியவையும் இடம்பெற்றன. கடந்தவாரத்தின் நிகழ்வுகளின் தொகுப்பு.

மரணங்கள்

கடந்த வாரம் இந்திய சமூகத்திற்கு மிகவும் பழக்கமான இரு தமிழர்கள் மரணத்தைத் தழுவினர். ஒருவர்
அருணாசலம் செட்டியார். மற்றவர் கண்ணுசாமி.
அருணாசலம் அவர்கள் சைவ சமயத்தில்,தமிழில் ஆர்வம் கொண்டவர். மிகவும் அமைதியானவர்.
தமிழப்பற்றினால் தன் பிள்ளைகளுக்கு தூய பெயர்களை வைத்தவர். செங்குட்டுவன்,மகிழ்நன், முல்லை,
இளஞ்சேரன் என்று பிள்ளைகளுக்குப் பெயரிட்டவர். தமிழ் வழிபாட்டைப் போற்றியவர். சிங்கப்பூரில்
திருமுறைகளைப் பரப்புவதற்காக திருமுறை மாநாடு நிதி அமைக்கப்பட்ட போதுஅதற்கு $5000.00 கொடுத்து
நிதியைத் தொடக்கி வைத்தவர்களில்அவரும் ஒருவல். எதையும் திட்டமிட்டுச் செயலாற்றுபவர்.தனி
மரணத்திற்குப் பிறகு நடைபெறக்கூடியசடங்குமுறைகள எவ்வாறு செய்யவேண்டும் என்று எழுதிவைத்துச்சென்றவர்.
மரணம் இயற்கையானது அழுவதைத் தவிர்க்கவேண்டும் என்று கருதியவர். இருப்பினும்பலரின் நெஞ்சங்கள்
கனத்ததுபோல் என் நெஞ்சமும் அவரின்மரணத்தால் என் நெஞ்சும் கனக்கத்தான்செய்தது.

திரு கண்ணுசாமி அவர்களை அறியாதவர்கள் இருக்கமுடியாது என்றுதான் சொல்லவேண்டும். தமிழ் என்றால் அவருக்கு
உயிர். சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளில் தமிழும் ஒன்று. அதுஇடம்பெறாத அதிகாரத்துவப்
பிரசுரங்கள், பதாகைகள்(பேனர்கள்)போன்றவற்றைப் பார்த்துவிட்டால் போதும். உடனடியாக அது குறித்து
தகுந்த அதிகாரிகள் அல்லது அமைச்சுகள்ஆகியவற்றி எழுதுவார். கோயில்களில்கூட தமிழில் பதாகைகளைக்
கட்டாதபோது, ஆங்கிலத்தில் செய்தவர்கள் தமிழில் செய்தால் என்ன என்றுஎழுதிக்கேட்டவர். குட்டி
இந்தியா(லிட்டல் இந்தியா) என்று கருதப்படும் சிராங்கூன் வட்டாரத்தில் அரசாங்கக் கட்டிய
சந்தைக்கட்டடத்தொகுதியின் முன் பகுதியில் ஆங்கிலத்திலும் சீன மொழியிலும் கட்டடத்தின் பெயர்
குறிப்பிடப்பட்டிருப்பதை அவ்வட்டாரத்திற்குப் பிரதமர் வந்தபோது அதனைச்சுட்டிக்காட்டி கடிதம் கொடுத்தார்.
ஒரு சில நாட்களில் அக்கட்டடத்தில் தமிழ் எழுத்தக்களும் சேர்க்கப்பட்டது. அக்கட்டடம் இன்னும் இருக்கிறது.
அதனைக் கடந்து செல்லும்போதெல்லாம்கண்ணில் படும் தமிழ் எழுத்துக்களைப்பார்க்கும்போது திரு
கண்ணுசாமியின் தொண்டு நினைவுக்கு வரும். தமிழ் அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் அவர்
அழைப்பின்றிச் செல்வார். அங்கு தன்கருத்துக்களைக் கூறுவார். தமிழர்களிடையே இருக்கும் ஒற்றுமை
இன்மையைச் சுட்டிக்காட்டி ஒன்றுபட்டுச்செயலாற்றுங்கள் என்பார். திருமணம், மரணம் போன்ற சடங்கு
முறைகளில், சமூகத்திற்குச் சமூகம், பலவிதமான வேறுபாடுகள் இருப்பதைச் சுட்டிக்காட்டி, எல்லாருக்கும்
பொதுவான ஒரு முறையை உருவாக்க வேண்டும் என்று அறைகூவல் விடுப்பார். சிங்கப்பூர் இந்து சபையின்
தலைவராக இருந்தவர்.
சிங்கப்பூரில் பிறந்த அவர் திருமணம்செய்துகொள்ளவே இல்லை. அவர் தன் வாழ்நாளில் தமிழகத்திற்கும்
சென்றதில்லை. ஆனால் சென்ச ஆண்டு அங்குசெல்லவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டு அதனை ஒரு சிலரிடம் சொல்ல
அவர்கள் அவருக்கு நிதி திரட்டிக்கொடுக்கும் எண்ணத்தில் நிகழ்ச்சி நடத்தினர்.ஆனால் அவருடன் செல்வதற்கு
யாரும் தயாராக இல்லை. கடந்த ஒரு சிலமாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் கடந்த வாரம்
காலமானார். என்னைப் பாதித்தவர்களில் திரு கண்ணுசாமியும் ஒருவர். அவரின்இறுதிச் சடங்கில் என் கண்கள்
என்னையும் அறியாமல் பனித்து நின்றன.

தமிழ்ப்பெரியார்
பி கோவிந்தசாமிப் பிள்ளை எனும் பெயரைச் சிங்கப்பூர்த் தமிழர்களும் தமிழகத் தமிழர்களும்
அறிந்திருப்பர். சிராங்கூன் சாலையில்அவரின் புடவைக்கடையும் பலசரக்குக் கடையும் பிரபலமாக
விளங்கின. கடையைவிட அவரின் வள்ளல்தன்மையால் எழுந்த பெருமாள் கோயில்கல்யாண மண்டபம்,
ராஜகோபுரம் ஆகியவை அவரின் புகழைஇன்னும் பறைசாற்றிக்கொண்டிருக்கின்றன. அவற்றைப்போலவே
திருச்செந்தூர் போன்ற இடங்களிலும் அவரின் நன்கொடையால் கட்டப்பட்ட திருமண மண்டபங்கள் போன்றவை
அவரின் பெயரைத் தாங்கி நிற்கின்றன.அவர் இறந்து சில காலமாகி விட்டாலும் அவரின் பெயரில்
தொழில் ஒன்று அவரின் மருமகளால் நடத்தப்பட்டு வந்தது. அக்கடை ஏலத்தில் போகப் போகின்ற செய்தி
எல்லோரையும் உலுக்கியது. 23.9.99 என்று தமிழ் முரசில் பிஜிபி கடை ஏலம் என்ற தலைப்பில்
வெளியான செய்தி இது:

" உலகப்போருக்கு முன்னும் பின்னும் புகழோடு விளங்கிய திரு பி கோவிந்தசாமிப் பிள்ளை விட்டுச் சென்ற
சொத்துக்களில் மிள்சிய கடைசிக் கடையும் ஏலத்துக்குப் போகிறது.
கேம்பல் லேனில் உள்ள பிஜிபி கடையின் பேரில் எட்டு மில்லியன் வெள்ளி கடன் இருந்தது. கடனைத்
திருப்பி அடைக்கமுடியாததால் ஈடுவைக்கப்பட்டிருந்த சொத்துகளை வங்கி முடக்கி, அவற்றை ஏலத்தில்
விற்கவிருக்கிறது.
திரு கோவிந்தசாமிப் பிள்ளை பார்ட்லி ரோட்டில் உள்ள ராமகிருஷ்ண மடத்தைக் கட்டித் தந்வதர்.
சிராங்கூன் சாலையில் உள்ள ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில் கோபுரத்தையும்கல்யான மண்டபத்தையும் கட்டித்
தந்தவரும் அவரே.
திரு கோவிந்தசாமிப் பிள்ளை நேர்மையான, திறமையான வர்த்தகர் என்று அனைவராலும் போற்றப்பட்டவர்.
இந்தியாவிலிருந்து வந்து கடும் உழைப்பால் பெரும்சொத்து சேர்த்தார். சமூகத்தலைவராகவும் அறப்பணிகளுக்குத்
தாராநமாக வழங்கிய வள்ளலாகவும் பெயர் பெற்றார்.
ஜவுளிக்கடை, மளிகைக்கடை,மொத்தவியாபாரம் சில்லறை வியாபாரம் என்று பல கடைகளை நிறுவினார்.
அவர் விட்டுச் சென்ற கடைகளில் எஞ்சியிருந்த கடைசி சொத்தும் ஏலத்துக்கு வந்துள்ளது.
" அன்று இந்தியாவிலிருந்து பலரும் வந்துஉழைப்பால் பொருள் ஈட்டினார்கள். ஆனால் அவர்களுக்குப் பிந்திய
கலைமுறைகள் அந்தச் சொத்தையும் சிறப்பையும் இழந்துவிடுகின்றன. இந்த நிலைசிங்கப்பூரில் பல இந்திய
குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ளது" என்று பெயர்வெளியிட விரும்பாத வணிகர் ஒருவர்வருத்தத்தோடு கூறினார்."

பெருமாள் கோயில் ராஜகோபுரம் கட்டும்பொழுது அக்கோயிலின் செயலாளராக முதன் முதலில் என் கோயில்
தொண்டூழியப்பணி தொடங்கியது. அக்கோயில் இந்து அறக்கட்டளை வாரியத்திற்குச் சொந்தட்.
வாரியத்திற்குச் சொந்தமான கடைத்தொகுதியில்தான் பெரியவர் கோவிந்தசாமி தொழிலை
நடத்திவந்தார். கோயில் திருப்பணிதொடர்பாக அவரைக் கடையில் அடிக்கடிசந்திக்கும் வாய்ப்புக்
கிடைத்தது. அவர் என்னை ஒருதடவைகூட நீ என்று சொல்லிக்கேட்டதில்லை. சிறுவயதுப் பையன் என்று கூட
கருதாமல் என்னை வாங்க போங்க என்றுதான் அழைப்பார். கும்பாபிஷேகம் முடிவடைந்து கணபதி
சன்னிதானத்திற்கு அருகில் போடப்பட்டிருந்த கொட்டகையின் கீழ் அவர் அமர்ந்திருந்தார். அவருடன் உள்ளூர்
பிரமுகர்களும் திருமதி சுப்புலட்சுமிஅவரின் கணவர் சதாசிவம் போன்றோர்அமர்ந்திருந்தனர். அப்போது
அவர்களில் ஒருவர்,
" சந்தோசமுங்க. ராஜகோபுரம் கட்டிகும்பாபிஷேகத்தை முடித்துவிட்டீர்கள். தை உங்களால் மட்டும்தான் செய்ய
முடியும்" என்றார். அதற்கு அவர், "இல்லை.உங்களால்கூட முடியும். உங்களிடம் இல்லாத பணமா" என்று மறுப்புரை
கூறினார். "ஆமாம், என்னிடமும் பணம் இருக்கு. ஆனா உங்களைப் போல மனசு இல்லை" என்று அவரிடம் கூறியது
இன்னும் பசுமையாக என் நினைவில் நிற்கிறது.

தீபாவளிக்கு முன்னர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிக நடிகையரை எங்கள் நாட்டுநிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்
அழைத்துவந்து நிகழ்ச்சிகளை நடத்துவர்.அதன் முதல் நிகழச்சியயாக கடந்த வாரம் நடிகர்
பிரசாந்த்,சிம்ரன் போன்றோர் நிகழ்ச்சியை சனிக்கிழமை நடத்தினர்.

சிங்கப்பூர் தமிழர் தமவல் தொழில்நுட்பக்கழகமும் சிங்கப்பூர் ஒன் எனும் கணினிப்பயிற்சி நிலையமும்
இரண்டாம் வாரமாகத் தமிழில் இணையப்பயற்சி வகுப்பை நடத்தின. 100 பேர் அதில் கலந்துகொண்டு
இணையப் பக்க உருவாக்கம், வீடியோகான்பரன்சிங் போன்ற பலவற்றைக்கற்றுக்கொண்டனர். அதற்கு முந்திய
வாரமும் பயிற்சி நடைபெற்றது. அதுபற்றிய விவரத்தையும் படங்களையும்
homex.s-one.net.sg/member2/stitsஇ எனும் முகவரியில்பார்க்கலாம். அப்படங்களில் நானும்
இருக்கிறேன். எங்கிருக்கிறேன் என்றுகண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

வரும் வாரம் நாளும் சில சொற்களுடன் மீண்டும் வருவேன்.
அன்புடன்
பழனி