From Sun Sep 26 16:17:40 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
X-eGroups-Approved-By: agathiyar@... via web
Received: (listserv 1.259); by mz; 26 Sep 1999 23:20:43 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 22491 invoked from network); 26 Sep 1999 20:04:22 -0000
Received: from valluvar.uwaterloo.ca (129.97.90.29) by qg.egroups.com with SMTP; 26 Sep 1999 20:04:22 -0000
Received: from kural.UWaterloo.ca (cnts6p27.uwaterloo.ca [129.97.13.27]) by valluvar.uwaterloo.ca (8.8.8/8.8.8) with ESMTP id QAA23859; Sun, 26 Sep 1999 16:04:15 -0400 (EDT)
Message-ID: <37EE7DFA.2A0205CF@...>
Date: Sun, 26 Sep 1999 16:11:40 -0400
From: "C.R. (Selva) Selvakumar"
X-Mailer: Mozilla 4.01 [en] (Win95; I)
MIME-Version: 1.0
To: Swaminathan Sankaran
CC: tamil@..., agathiyar@egroups.com, selvakum@...
X-Priority: 3 (Normal)
References: <01JGF8TI3Q7K8Y9BXC@...>
Subject: [agathiyar] Re: [tamil] Representing alien letters/sounds in Tamil
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset=x-user-defined
Content-Transfer-Encoding: 8bit
X-Yahoo-Message-Num: 2236

Swaminathan Sankaran wrote:

> "சங்கர்" "ச" வும் "ஷண்முகன்" "ஷ" வும் ஒன்றல்ல. ஆகையால் "சங்கர்" "ச"வுக்கு
> வேறொரு குறி தேவை.
>
> இந்த எழுத்துச் சீர்திருத்தம் ஒரு நல்ல முயற்சி. நாம் இணையத்தில் இயன்றவரைக்
> கடைப்பிடித்து/பரிசோதித்துப் பார்க்கலாம்.ஆனால் இந்த முயற்சியின் வரவேற்பு (acceptance)
> அல்லது மறுதளிப்பு (rejection) தமிழ்நாட்டில் தான் தெரிய வரும்.
>
> மேலும் இது ஒரு பிற மொழி எதிர்ப்பாகவோ, காழ்ப்பாகவோ இருக்கக் கூடாது. ஏனெனில்
> அப்படியிருந்தால் இதற்கு ஆதரவும் வரவேற்பும் கிடைப்பது கடினம். அப்படியிருந்தால் மாற்றார்
> குறிகளான ',^
> ஆகியவற்றை நாம் ஏன் வரவேற்கவேண்டும் என்ற கேள்வி எழலாம். ஆனால் இதனால்
> எழுத்துக் குறிகளின் எண்ணிக்கையும் தட்டெழுத்து உபயோகத்தின் பொழுது ஓய்ச்சல்(effort)
> சேமிப்பும், கால சேமிப்பும் கிடைக்குமா என்பதைக் கண்டறிந்து அதை விளம்பரப் படுத்தினால்
> ஒரு வேளை இந்த முயற்சிக்கு ஆதரவும், வரவேற்பும் இருக்கலாம்.
>
> ?சங்கரன், 'ச'ச்கச்சுவான், கனடா.
>

'டாக்டர் சங்கரன் அவர்களுக்கு,


வணக்கம்.

ஆங்கிலத்தில் Shankar, Usha , paraiah, என்றெல்லாம் எழுதும் பொழுது
எப்படி வெவ்வேறு ஒலிகளை ஆங்கிலப்படுத்தி எழுதுகிறார்களோ
அதே போலத்தான் நான் கூறுவதும். தமிழ்ப்படுத்தித் தான்
எழுத வேண்டும். சமசுகிருதத்திலும் ஃஇந்தியிலும்
மற்ற பிற மொழிகளிலும் உள்ள ஒலிகளையெல்லாம்
திரிபே இல்லாமல் தமிழில் எழுதுவதற்காக
அத்திட்டத்தைப் பரிந்துரைக்கவில்லை.
இதனை தெளிவாக விளங்கிகொள்வது நலம்.
ஓரளவுக்குத் தமிழில் அதிகம் ஒலித்திரிபில்லாமல் G,F,B ..
முதலிய ஒலிகளை வழங்கவே
முன்கொட்டு (அல்லது வேறு ஒரு குறியை முன்)
இட்டு எழுதும் ஒரு முறையைக் கையாளலாம்
என்று சொன்னேன். சமசுகிருதத்திலோ அல்லது ஃஇந்தியிலோ
உள்ள ஒரு நூலைத் தமிழில் விரிவாக மூல மொழித் தொடர்களை
எழுதிப் பின்னர் தமிழில் விளக்கம் தர வேண்டி இருந்தால், அந்த
தனித்துறை நூலில், மீண்டும் சொல்லுகிறேன் அந்த தனித்துறை
நூலில், அதன் மொழிபெயர்ப்பு ஆசிரியர்
பிற மொழி ஒலியன்களைத் தமிழ் எழுத்துக்களில்
எவ்வாறு சிறப்புத் திரிபுக் குறிகள் இட்டு குறிக்கின்றார் என்று
தெளிவாக விளக்கி எழுத வேண்டும். இதைத்தான் ஆங்கிலம் மற்றும்
பல மேற்கு ஐரோப்பிய மொழிகளும் பாங்குற கையாளுகிறார்கள்.
அவர்கள் ஒன்றும் தங்கள் நெடுங்கணக்கையே மாற்றிக் கொண்டும்
பள்ளிச் சிறார்களுக்கும் பயிற்றுவித்து கொண்டும் திரிவதில்லை.
இத்தனைக்கும் சமசுகிருதம் அவர்கள் மொழிக்கு
நெருக்கான மொழிதான். எனவே தமிழில் வெளி வரும் நூல்
உருசிய (ர^சிய அல்லது ர'ழிய) மொழி பற்றியது என்றால்
அதெற்கென தனி 'சகர ஒலி கலந்த ழகரத்திற்கு ஒரு தனி திரிபுக்
குறி எல்லாம் முன்னுரைப்பக்கங்களில் விளக்கி எழுத வேண்டும்.
அதேபோல அராபிய மொழி நூல்களுக்கும் பிற மொழி நூல்களுக்கும்.

சமசுகிருத மொழியில் உள்ள உ^சா என்னும் பெயரில்
வரும் காற்றொலி (சற்றே வலிந்து) கலந்து வரும்
ழகர-சகர கூட்டொலி வேறு, ^சங்கர் என்னும் பெயரில்
வரும் சற்றே மென்மையான சகர ஒலி வேறு, சரசுவதி
என்னும் பெயரில் வரும் இன்னும் மென்மையான சகரம் வேறு.
ஆனால் அதெல்லாம் சமசுகிருதத்தில்.
ஆனால் தமிழில் வழங்கும் பொழுது
உசா, சங்கர், சரசுவதி என்பதே போதும் - அதுதான்
எளிய முறையும். இதில் தவறேதும் இல்லை. என்றாலும்,
சற்றே வேறு படுத்திக்காட்ட உ'ழா என்றோ உ^சா என்றோ
எழுதலாம்; 'ழங்கர் என்றோ ^சங்கர் என்றோ எழுதி
ஆங்கிலத்தில் இருப்பது போல sh என்னும் ஒலிக்கு
ஒரு சிறிது காட்டலாம் என்பதே நோக்கம்.

கடைசியாக, பிறமொழி எதிர்பொன்றும் என் நோக்கம்
இல்லை. தமிழ் மொழியின் அருமை காப்பதே என் சிறு
முயற்சி. தமிழில் அருமையாக மிகச் சிக்கனமாக
வழங்கும் ஒலிப்பு முறையைக் கெடுக்காமல்
எவ்வாறு இப்பொழுது இருப்பதை விட அதிகமான
வேற்றொலிகளை சிறுபான்மை தமிழில் வழங்கலாம்
என்று எண்ணியதின் விளவு.
எடுத்துக்காட்டாக அண்மையில் இவ்வலையில்
திரு குமாரபாரதி (மா.கா.கா)
என்பார் Boolean என்பதை பூலியன் என்று எழுதினார்கள்.
அது எனக்கு முழுவதும் ஏற்புடைத்தே. ஆனால் தமிழர்கள்
pooliyan என்று (தமிழ் முறைப்படி) படிப்பதுதான் முறை.
ஆனால் Boolean என்று முதல் ஒலியை அதிகம் திரிபு
இல்லாமல் சொல்ல வேண்டுமென்றால் 'பூலியன்
என்று எழுதிச் சுட்டலாமே என்பதுதான் என் குறிப்பு.

மற்றும் முன் கொட்டு (') , கூரைக்குறி (^) என்னும்
வேற்று மொழியினரின் குறியீடுகளை மட்டும் ஏன்
ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டீர்கள்.
தனிக் குறிகளை வடித்துக் கொள்வது ஒன்றும்
கடினம் இல்லை, ஆனால் அதெல்லாம் தேவை இல்லை.
வேண்டும் என்றாலும் செய்துகொள்ளலாம்.
எடுத்துக்காட்டாக, tilda (~) என்பதை எழுத்தின்
மேற்புறமாக இன்னும் அதிக நெளிவுடன்
அளவில் இன்னும் சிறியதாக இருந்தால் Sa
என்னும் ஒலியைத் தமிழில் ~ச என்று வழங்க
இசைவாக இருக்கும். கணியர் முத்து நெடுமாறன்
மற்றும் எழுத்து முகப்பு அமைக்கும் மற்ற கணியார்வலர்கள்
தேர்ந்து வடிக்கலாம்.

இணையத்தோர்கள் விரைந்தெண்ணித் தேர்ந்து
எடுத்தாண்டால் வழக்கூன்றும். நானும் ஆவன செய்வேன்.


(மற்றவர்களுக்கும் பயனுடையதாக இருக்கும் என எண்ணி
tamil.net , agathiyar முதலிய வலைக் குழுவினர்களுக்கும்
படி விடுத்துள்ளேன்)


செல்வா