From jaybee Sun Sep 26 23:33:52 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 27 Sep 1999 06:36:55 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 32664 invoked from network); 27 Sep 1999 06:36:53 -0000
Received: from smtp.mail.yahoo.com (128.11.68.32) by qg.egroups.com with SMTP; 27 Sep 1999 06:36:53 -0000
Received: from sp-69-132.tm.net.my (HELO user) (202.188.69.132) by smtp.mail.yahoo.com with SMTP; 26 Sep 1999 23:42:01 -0700
Message-Id: <3.0.3.32.19990927143537.007dd4e0@...>
X-Sender: jaybee555@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Mon, 27 Sep 1999 14:35:37 +0700
To: agathiyar@egroups.com
From: jaybee
In-Reply-To: <01JGE2KP25HE8Y9JTY@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Poompuhar monuments in a bad shape
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2242


அன்புள்ள டாக்டர் சங்கரன்,

At 02:25 PM 9/25/99 -0600, you wrote:>
> நான் பிறந்த ஊரைப் (நாட்டரசன்கோட்டை) பற்றி திரு ஜே.பி. எழுதியிருக்கிறார்.
> நான் கேட்டறிந்தவரை, இவ்வூருக்கு மிக அருகில் உள்ள கல்லல்
> (இதற்கு நடராஜபுரம் என்றும் ஒரு பெயர் வழங்குகிறது) என்ற ஊரில் தான் கம்பன்
> சமாதி இருப்பதாக நம்பகம் இருக்கிறது. முடிந்தவர்கள் நாட்டரசன்கோட்டைபோய்
> கண்ணாத்தாள் கோயில், வீராணம்குளம், செங்கமலத்தான் ஊரணி, கண்ணாத்தாள்
> ஆசுபத்திரி பார்த்து விட்டு வாருங்கள்! கண்ணாத்தாள் கோயில் மிக அழகு, மிக சுத்தம் - எல்லா
> நகரத்தார் கோயிலும் போல.இக்கோயிலில் விசேஷம் கண் வியாதிஉள்ளவர்கள் அம்மனுக்குக்
> கண் சாத்துவது (கீற்றிலும், வெள்ளியிலும்,...).

நீங்கள் பிறந்த ஊரைப் பற்றி அழகியதொரு பிரபந்தம்
இருக்கிறது. "கண்ணுடையம்மன் பள்ளு" என்பதுஅதன் பெயர்.
பள்ளு பிரபந்தங்களில் இது சற்று நீளமானதாக இருக்கிறது.
அழகாகவும் இருக்கிறது.பெரிதும் சிறிதுமான பாடல்கள் மொத்தம் 139.

இதனை எழுதியவர் முத்துக்குட்டிப் புலவர்என்பவர். கண்ணுடைய
நாச்சியாரின் வரப்பிரசாதம் பெற்றவர் என்று கூறப்பட்டிருக்கிறார். இந்த
நூலிலும், பள்ளுப் பாடல்களாக இருப்பினும்கூட, கண்ணுடைய நாச்சியாரின்
பெயரைச் சொல்லிச் சொல்லியே நெடுகிலும் அமைத்திருக்கிறார்.
இந்த நூலின்மூலம் பலவிஷயங்கள் தெரியவருகின்றன. நாட்டரசன்
கோட்டையை "வடகலைவேள்வி நாட்டரசன்கோட்டை" என்றும்
"தென்பனசைமாநகர்" என்றும் அழைத்திருக்கிறார்கள்.
பெரும்பாலும் பாயிரப்பகுதியிலோஅல்லது அவையடக்கத்திலோ
இயற்றியவர் தன்னுடைய பெயரைச்சொல்லிக்கொள்வார். ஆனால்
இந்த நூலில் பெயர் காணப்படவில்லை.

"திருமாதிசைநாமகள்புவிமகள்ஜெயமாதிவளாம்"எனவரிசைசெய்
சிவகாரணிநாரணிதிருபுரைஜெகன்மாதா
இருமாநிலமேலுயர்பனசைநன்னகர்மேவியதேவிதன்னுடையவள்
எனையாள்பவள்மீதில்இனியபள்ளிசைகூற

அருமாமறைதேடியபொருளுயரருள்சேர்மகமாயிசன்னிதிதனில்
அபிஷேகவிநாயகர்திருவரசடிவாழ்வாய்
வரும்ஆதிவிநாயகர்வடதிசைவளர்தேசிவிநாயகர் இவருடன்
வருமூவர்விநாயகர் துணையென மகிழ்வேனே!"

என்று காப்புக்கு அடுத்து பாயிரத்தைஆரம்பிக்கிறார்.

நகரவளம் என்னும் பகுதியில் இந்தச் செய்யுள் வருகிறது.
இதில் கம்பனைப் பற்றிய குறிப்பு வருகிறது.

கற்றவர்புகழ்மூன்றாங்குலம்வாழ்கக்
கம்பனார் கோயிற்செம்பொன்னால்வேய்ந்தோர்
உற்றசீரகத்தார்புனைமார்பர்
உயர்ந்த சிங்கக்கொடிவிருதுள்ளோர்
கற்றமாமறையேழுகற்புள்ளவர்
துங்கமாமலைத்தேனாறுடையோர்
நற்றமிழ்கண்ணுடையாளைப் போற்றும்
நகரமெங்கள்நகரம்காண்ஆண்டே!

நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்களே,அந்த "வீராணம் குளம்,
செங்கமலத்தான் ஊரணி,". இவையும்கூடதீர்த்தச்சிறப்பு என்னும்
பகுதியில் வருகின்றன.

விண்டலம்பணி தேவி திருக்குளம்
வீரகண்டான் மெய்ச் செங்கமலத்தான்
மண்டலம்பெறு தீர்த்தார் குளம்நல்ல
வாத்தியாரோடை நாயமார் வாவி
எண்டிசைக்கு முயர் சொக்கனூரணி
ஏழுதீர்த்தமுஞ் சூழும் தடாகம்
கண்டுளமகிழ் நாட்டரசன் கோட்டைக்
கண்ணுடையவள்ஊர் எங்கள்ஊரே!
>
"வீரகண்டான்" என்பது இப்போது "வீராணம்" என்று மருவியுள்லது
போலும்.
"வீராணம்" என்ற ஏரி ஒன்று தொண்டைமண்டலத்தில் உண்டு.
இது ஆரம்பத்தில் "வீரநாராயணசோழப்பேரேரி" என்ற பெயரில் நிலவியது.
இந்த இடத்தில் "வீரநாராயணம்"வீராணமாகியிருக்கிறது.
இங்குதானே "ஏரி காத்த பெருமாள் கோயில்" இருக்கிறது? அல்லது
வேறெங்குமா?

அன்புடன்

ஜெயபாரதி

>சங்கரன், ரெஜைனா, ஸஸ்கச்சுவான், கனடா.
>
=========================================