From jaybee Mon Sep 27 03:39:57 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 27 Sep 1999 10:42:59 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 26899 invoked from network); 27 Sep 1999 10:42:57 -0000
Received: from smtp.mail.yahoo.com (128.11.68.32) by qh.egroups.com with SMTP; 27 Sep 1999 10:42:57 -0000
Received: from sp-69-59.tm.net.my (HELO user) (202.188.69.59) by smtp.mail.yahoo.com with SMTP; 27 Sep 1999 03:48:05 -0700
Message-Id: <3.0.3.32.19990927184138.00852ba0@...>
X-Sender: jaybee555@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Mon, 27 Sep 1999 18:41:38 +0700
To: agathiyar@egroups.com
From: jaybee
Cc: Palaniappan A
In-Reply-To: <3.0.3.32.19990926120306.019f3210@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: The week that was
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2244


அன்புள்ள பழனி,

At 12:03 PM 9/26/99 +0800, you wrote:
>இஅன்பு நண்பர்களே,
>மரணங்கள்
>
>கடந்த வாரம் இந்திய சமூகத்திற்கு மிகவும் பழக்கமான இரு தமிழர்கள் மரணத்தைத் தழுவினர். ஒருவர்
>அருணாசலம் செட்டியார். மற்றவர் கண்ணுசாமி.
>அருணாசலம் அவர்கள் சைவ சமயத்தில்,தமிழில் ஆர்வம் கொண்டவர். மிகவும்அமைதியானவர்.
>தமிழப்பற்றினால் தன் பிள்ளைகளுக்கு தூய பெயர்களை வைத்தவர். செங்குட்டுவன்,மகிழ்நன், முல்லை,
>இளஞ்சேரன் என்று பிள்ளைகளுக்குப் பெயரிட்டவர். தமிழ் வழிபாட்டைப் போற்றியவர். சிங்கப்பூரில்
>திருமுறைகளைப் பரப்புவதற்காக திருமுறை மாநாடு நிதி அமைக்கப்பட்ட போதுஅதற்கு $5000.00 கொடுத்து
>நிதியைத் தொடக்கி வைத்தவர்களில்அவரும் ஒருவல். எதையும் திட்டமிட்டுச்செயலாற்றுபவர்.தனி
>மரணத்திற்குப் பிறகு நடைபெறக்கூடியசடங்குமுறைகள எவ்வாறு செய்யவேண்டும் என்று எழுதிவைத்துச்சென்றவர்.
>மரணம் இயற்கையானது அழுவதைத் தவிர்க்கவேண்டும் என்று கருதியவர். இருப்பினும்பலரின் நெஞ்சங்கள்
>கனத்ததுபோல் என் நெஞ்சமும் அவரின்மரணத்தால் என் நெஞ்சும் கனக்கத்தான்செய்தது.


நம்முடைய முன்னாள் இணையத்தோழர்களில் ஒருவராகிய
அருண் மகிழ்னனிடம் அனைத்து இணையங்களின் சார்பாகவும்
ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துவிடுங்கள், பழனி.

அன்புடன்

ஜெயபாரதி

>
>திரு கண்ணுசாமி அவர்களை அறியாதவர்கள் இருக்கமுடியாது என்றுதான் சொல்லவேண்டும். தமிழ் என்றால் அவருக்கு
>உயிர். சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளில் தமிழும் ஒன்று. அதுஇடம்பெறாத அதிகாரத்துவப்
>பிரசுரங்கள், பதாகைகள்(பேனர்கள்)போன்றவற்றைப் பார்த்துவிட்டால் போதும். உடனடியாக அது குறித்து
>தகுந்த அதிகாரிகள் அல்லது அமைச்சுகள்ஆகியவற்றி எழுதுவார். கோயில்களில்கூட தமிழில் பதாகைகளைக்
>கட்டாதபோது, ஆங்கிலத்தில் செய்தவர்கள் தமிழில் செய்தால் என்ன என்றுஎழுதிக்கேட்டவர். குட்டி
>இந்தியா(லிட்டல் இந்தியா) என்று கருதப்படும் சிராங்கூன் வட்டாரத்தில் அரசாங்கக் கட்டிய
>சந்தைக்கட்டடத்தொகுதியின் முன் பகுதியில் ஆங்கிலத்திலும் சீன மொழியிலும் கட்டடத்தின் பெயர்
>குறிப்பிடப்பட்டிருப்பதை அவ்வட்டாரத்திற்குப் பிரதமர் வந்தபோது அதனைச்சுட்டிக்காட்டி கடிதம் கொடுத்தார்.
>ஒரு சில நாட்களில் அக்கட்டடத்தில் தமிழ் எழுத்தக்களும் சேர்க்கப்பட்டது. அக்கட்டடம் இன்னும் இருக்கிறது.
>அதனைக் கடந்து செல்லும்போதெல்லாம்கண்ணில் படும் தமிழ் எழுத்துக்களைப்பார்க்கும்போது திரு
>கண்ணுசாமியின் தொண்டு நினைவுக்கு வரும். தமிழ் அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் அவர்
>அழைப்பின்றிச் செல்வார். அங்கு தன்கருத்துக்களைக் கூறுவார். தமிழர்களிடையே இருக்கும் ஒற்றுமை
>இன்மையைச் சுட்டிக்காட்டி ஒன்றுபட்டுச்செயலாற்றுங்கள் என்பார். திருமணம், மரணம் போன்ற சடங்கு
>முறைகளில், சமூகத்திற்குச் சமூகம், பலவிதமான வேறுபாடுகள் இருப்பதைச் சுட்டிக்காட்டி, எல்லாருக்கும்
>பொதுவான ஒரு முறையை உருவாக்க வேண்டும் என்று அறைகூவல் விடுப்பார். சிங்கப்பூர் இந்து சபையின்
>தலைவராக இருந்தவர்.
>சிங்கப்பூரில் பிறந்த அவர் திருமணம்செய்துகொள்ளவே இல்லை. அவர் தன் வாழ்நாளில் தமிழகத்திற்கும்
>சென்றதில்லை. ஆனால் சென்ச ஆண்டு அங்குசெல்லவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டு அதனை ஒரு சிலரிடம் சொல்ல
>அவர்கள் அவருக்கு நிதி திரட்டிக்கொடுக்கும் எண்ணத்தில் நிகழ்ச்சி நடத்தினர்.ஆனால் அவருடன் செல்வதற்கு
>யாரும் தயாராக இல்லை. கடந்த ஒரு சிலமாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் கடந்த வாரம்
>காலமானார். என்னைப் பாதித்தவர்களில் திரு கண்ணுசாமியும் ஒருவர். அவரின்இறுதிச் சடங்கில் என் கண்கள்
>என்னையும் அறியாமல் பனித்து நின்றன.
>
>தமிழ்ப்பெரியார்
>பி கோவிந்தசாமிப் பிள்ளை எனும்பெயரைச் சிங்கப்பூர்த் தமிழர்களும் தமிழகத் தமிழர்களும்
>அறிந்திருப்பர். சிராங்கூன் சாலையில்அவரின் புடவைக்கடையும் பலசரக்குக் கடையும் பிரபலமாக
>விளங்கின. கடையைவிட அவரின் வள்ளல்தன்மையால் எழுந்த பெருமாள் கோயில்கல்யாண மண்டபம்,
>ராஜகோபுரம் ஆகியவை அவரின் புகழைஇன்னும் பறைசாற்றிக்கொண்டிருக்கின்றன. அவற்றைப்போலவே
>திருச்செந்தூர் போன்ற இடங்களிலும் அவரின் நன்கொடையால் கட்டப்பட்ட திருமண மண்டபங்கள் போன்றவை
>அவரின் பெயரைத் தாங்கி நிற்கின்றன. அவர் இறந்து சில காலமாகி விட்டாலும் அவரின் பெயரில்
>தொழில் ஒன்று அவரின் மருமகளால் நடத்தப்பட்டு வந்தது. அக்கடை ஏலத்தில் போகப் போகின்ற செய்தி
>எல்லோரையும் உலுக்கியது. 23.9.99 என்று தமிழ் முரசில் பிஜிபி கடை ஏலம் என்றதலைப்பில்
>வெளியான செய்தி இது:
>
>" உலகப்போருக்கு முன்னும் பின்னும் புகழோடு விளங்கிய திரு பி கோவிந்தசாமிப் பிள்ளை விட்டுச் சென்ற
>சொத்துக்களில் மிள்சிய கடைசிக் கடையும் ஏலத்துக்குப் போகிறது.
>கேம்பல் லேனில் உள்ள பிஜிபி கடையின் பேரில் எட்டு மில்லியன் வெள்ளி கடன் இருந்தது. கடனைத்
>திருப்பி அடைக்கமுடியாததால் ஈடுவைக்கப்பட்டிருந்த சொத்துகளை வங்கி முடக்கி, அவற்றை ஏலத்தில்
>விற்கவிருக்கிறது.
>திரு கோவிந்தசாமிப் பிள்ளை பார்ட்லி ரோட்டில் உள்ள ராமகிருஷ்ண மடத்தைக் கட்டித் தந்வதர்.
>சிராங்கூன் சாலையில் உள்ள ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில் கோபுரத்தையும்கல்யான மண்டபத்தையும் கட்டித்
>தந்தவரும் அவரே.
>திரு கோவிந்தசாமிப் பிள்ளை நேர்மையான, திறமையான வர்த்தகர் என்று அனைவராலும் போற்றப்பட்டவர்.
>இந்தியாவிலிருந்து வந்து கடும் உழைப்பால் பெரும்சொத்து சேர்த்தார். சமூகத்தலைவராகவும் அறப்பணிகளுக்குத்
>தாராநமாக வழங்கிய வள்ளலாகவும் பெயர் பெற்றார்.
>ஜவுளிக்கடை, மளிகைக்கடை,மொத்தவியாபாரம் சில்லறை வியாபாரம் என்று பல கடைகளை நிறுவினார்.
>அவர் விட்டுச் சென்ற கடைகளில் எஞ்சியிருந்த கடைசி சொத்தும் ஏலத்துக்குவந்துள்ளது.
>" அன்று இந்தியாவிலிருந்து பலரும் வந்துஉழைப்பால் பொருள் ஈட்டினார்கள். ஆனால் அவர்களுக்குப் பிந்திய
>கலைமுறைகள் அந்தச் சொத்தையும் சிறப்பையும் இழந்துவிடுகின்றன. இந்த நிலைசிங்கப்பூரில் பல இந்திய
>குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ளது" என்று பெயர் வெளியிட விரும்பாத வணிகர் ஒருவர்வருத்தத்தோடு கூறினார்."
>
>பெருமாள் கோயில் ராஜகோபுரம் கட்டும்பொழுது அக்கோயிலின் செயலாளராக முதன் முதலில் என் கோயில்
>தொண்டூழியப்பணி தொடங்கியது. அக்கோயில் இந்து அறக்கட்டளை வாரியத்திற்குச் சொந்தட்.
>வாரியத்திற்குச் சொந்தமான கடைத்தொகுதியில்தான் பெரியவர் கோவிந்தசாமி தொழிலை
>நடத்திவந்தார். கோயில் திருப்பணிதொடர்பாக அவரைக் கடையில் அடிக்கடிசந்திக்கும் வாய்ப்புக்
>கிடைத்தது. அவர் என்னை ஒருதடவைகூட நீ என்று சொல்லிக்கேட்டதில்லை. சிறுவயதுப் பையன் என்று கூட
>கருதாமல் என்னை வாங்க போங்க என்றுதான் அழைப்பார். கும்பாபிஷேகம் முடிவடைந்து கணபதி
>சன்னிதானத்திற்கு அருகில் போடப்பட்டிருந்த கொட்டகையின் கீழ் அவர் அமர்ந்திருந்தார். அவருடன் உள்ளூர்
>பிரமுகர்களும் திருமதி சுப்புலட்சுமிஅவரின் கணவர் சதாசிவம் போன்றோர்அமர்ந்திருந்தனர். அப்போது
>அவர்களில் ஒருவர்,
>" சந்தோசமுங்க. ராஜகோபுரம் கட்டிகும்பாபிஷேகத்தை முடித்துவிட்டீர்கள். தை உங்களால் மட்டும்தான் செய்ய
>முடியும்" என்றார். அதற்கு அவர், "இல்லை.உங்களால்கூட முடியும். உங்களிடம் இல்லாத பணமா" என்று மறுப்புரை
>கூறினார். "ஆமாம், என்னிடமும் பணம் இருக்கு. ஆனா உங்களைப் போல மனசு இல்லை"என்று அவரிடம் கூறியது
>இன்னும் பசுமையாக என் நினைவில் நிற்கிறது.
>
>வரும் வாரம் நாளும் சில சொற்களுடன்மீண்டும் வருவேன்.
>அன்புடன்
>பழனி
>
>
>------------------------------------------------------------------------
>
>eGroups.com home: http://www.egroups.com/group/agathiyar
>http://www.egroups.com - Simplifying group communications
>
>
>
>
>