From Mon Sep 27 08:51:19 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 27 Sep 1999 15:54:22 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 27404 invoked from network); 27 Sep 1999 15:54:18 -0000
Received: from giasmd01.vsnl.net.in (202.54.6.1) by qh.egroups.com with SMTP; 27 Sep 1999 15:54:18 -0000
Received: from giasdmd01.vsnl.net.in ([203.197.134.14]) by giasmd01.vsnl.net.in (8.9.3/8.9.3) with SMTP id VAA22495 for ; Mon, 27 Sep 1999 21:24:14 +0530 (IST)
Message-Id: <199909271554.VAA22495@...>
Date: Mon, 27 Sep 1999 21:22:0 +0500
From: "Dr.RM.Krishnan"
To: "agathiyar@egroups.com"
Organization: poosoft
X-mailer: FoxMail 2.1 [en]
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: tamil equivalent of the word 'design'
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="us-ascii"
Content-Transfer-Encoding: 8bit
X-Yahoo-Message-Num: 2248

At 9/26/99 9:51:00 PM, you wrote:
>At 08:08 PM 9/25/99 -0700, you wrote:
>>
>>>
>>> இன்றுங் கூட தமிழகத்தில் உள்ள மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பொருள்களை
>>> ஓரிடத்தில்
>>> ஒழுங்காக அடுக்கி வைப்பதை அடைந்து வைப்பது என்று சொல்லுவார்கள். 'என்னப்பா, பரண் முழுக்க
>>> அடஞ்சாச்சா ?'
>>> இதே கருத்தை எதிர்மறையில் 'ஒரே அடசலா இருக்கே; ஒழுங்கா வச்சுக்கிறதில்லையா?'
>>> என்பார்கள். தமிழில் மண்
>>> அல்லாததை மணல் என்பது போல அடைசு ஆகாது கிடப்பது அடைசல்.
>>
>>அல் என்னும் பின்னொட்டின் இத்தைகய நுணுகிய நீர்மையைச் சுட்டியமைக்கு நன்றி.
>>
>>
>>>....>
>>> முடிவாகச் சொன்னால்,
>>>
>>> design engineer - அ()டவுப் பொறியாளர்
>>> designer - அ()டவாளர்
>>> design - அ()டவு
>>> floral design - பூக்கோல அ()டவு.
>>> engineering design - பொறியியல் அ()டவு
>>>
>>> இந்த அ()டவு என்னும் ஆக்கத்தில் ஒரே ஒரு குறைவு என்று சொன்னால், 'கட்டங்களைப் பூர்த்துவதையும்
>>> (filling up)
>>> அடைதல் என்றே நாம் சொல்லுகிறோம்'.
>
>
> இந்த "அடைவு" என்னும் சொல்பற்றிய மேல்விபரம் கொஞ்சத்தை
> "இட்டு ரொப்புகிறேன்".(இதுவும் சிவகங்கை வட்டார வழக்குத்தான்).
> [இட்டு நிரப்புதல்].
> தேவாரப்பதிகங்கள் மீட்டு எடுக்கப்பட்டபின்னர், அவற்றிற்குரிய பண்களை
> பொல்லாப்பிள்ளையார் வழிகாட்டலால், திருநீலகண்ட யாழ்ப்பாணர் வழிவந்த
> யாழினி ஒருத்தியின் துணையோடு கண்டுபிடித்தார்களாம்.
> அவ்வாறு இன்ன பதிகத்துக்கு இன்ன பண் என்று நிர்ணயிக்கப்பட்டதை
> "பண் அடைவு" என்று சொல்வார்கள்.
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>
>
தங்கள் விவரத்திற்கு மிக்க நன்றி.

இங்குமே பண் அடைவு என்பது இசைப் புலத்தில் design, arrangment என்ற பொருள்களில் வந்திருப்பது ஏற்கனவே
கூறிய கருத்திற்கு அணை சேர்க்கிறது. பல வட்டார வழக்குகளில் இருந்து எத்தனையோ சொற்களுக்கு புதுப் பயன்
காண முடியும். நம்மில் ஒவ்வொருவரும் தத்தமது வட்டார வழக்குகளை அவ்வப்போது எண்ணிப் பார்த்துக் கொள்வது
தேவை தான்.

அன்புடன்,
இராம.கி.