From Mon Sep 27 09:48:06 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 27 Sep 1999 16:51:08 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 6249 invoked from network); 27 Sep 1999 16:51:06 -0000
Received: from law-f186.hotmail.com (HELO hotmail.com) (209.185.131.249) by qg.egroups.com with SMTP; 27 Sep 1999 16:51:06 -0000
Received: (qmail 40918 invoked by uid 0); 27 Sep 1999 16:51:05 -0000
Message-ID: <19990927165105.40917.qmail@...>
Received: from 209.144.25.24 by www.hotmail.com with HTTP; Mon, 27 Sep 1999 09:51:05 PDT
X-Originating-IP: [209.144.25.24]
From: "Nagamanickam Ganesan"
To: agathiyar@egroups.com
Cc: selvakum@...
Date: Mon, 27 Sep 1999 09:51:05 PDT
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: Representing alien letters/sounds in Tamil
Mime-Version: 1.0
Content-Type: text/plain; format=flowed
Content-Transfer-Encoding: 7bit
X-Yahoo-Message-Num: 2251


அன்புச் செல்வா,

வணக்கம்.

1) நீங்கள் அளித்துள்ள முறையில் baapu
என்னும் பெயரை 'பா"பு என்று குறிப்பதைவிடவும்
'பா|பு என்று குறித்தல் நலம் எனத் தோற்றுகிறது.
இன்னொரு காட்டு: gOpi => 'கோ|பி .
விசைப்பலகை யாவிலும் | (piping sign) உள்ளது.

2) இந்த ~ (tilde) குறியை நீக்கிவிடல் நன்று. பதிலாக,
" (double quote) பொருந்தும். மாதிரி: sarasvati
என்பவரை "சர"ச்வதி என்று எழுதலாம்.

3) Sh என்னும் ஒலிக்கு ^ச் என்றோ, அல்லது 'ழ் என்றோ
குறி காட்டியுள்ளீர்; சூரியனின் மனைவியான உஷா தமிழ்
இலக்கியத்தில் உழை என்று வருகிறது.

^ட் என்பதும் பொருத்தமே.

ஔஷதம் = ஔடதம்; விஷம்=விடம்; கஷ்டம்=கட்டம்; நஷ்டம்=நட்டம்;
கக்ஷி = கட்சி; ((கக்ஷம் = கக்கம் (இடுப்பு))) என்னுமாப் போலும்
வட-தென் மொழித் தொடர்புகளை நோக்குக.

ஆக, உங்கள் முறையில் ஒரு சிறு மாற்றம்;
(~)-ஐ நீக்கி, (")-ஐ இடம் மாற்றி, (|)-ஐப் பயன்படுத்துவோம்.

வேற்றெழுத்துக்களும், அவற்றுக்கு நேரான தமிழ்க்குறிகளும்:
------------------------------------------------------
1) f = 'வ்
2) h = ஃ
3) j = 'ச்
4) g = 'க்
5) D= 'ட்
6) d('dh') = 'த்
7) b = 'ப்
8) s = "ச்
9) S('sh' )= ^ச் (அல்லது 'ழ் அல்லது ^ட்)