From Mon Sep 27 14:45:38 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 27 Sep 1999 21:48:41 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 475 invoked from network); 27 Sep 1999 21:48:37 -0000
Received: from dfw-ix3.ix.netcom.com (206.214.98.3) by qh.egroups.com with SMTP; 27 Sep 1999 21:48:37 -0000
Received: (from smap@localhost) by dfw-ix3.ix.netcom.com (8.8.4/8.8.4) id QAA08208 for ; Mon, 27 Sep 1999 16:48:31 -0500 (CDT)
Received: from pc-242-57.corp.3com.com(139.87.242.57) by dfw-ix3.ix.netcom.com via smap (V1.3) id rma008152; Mon Sep 27 16:48:03 1999
Message-ID: <001801bf0931$e8af18e0$39f2578b@...>
From: "Mani M. Manivannan"
To:
Date: Mon, 27 Sep 1999 14:47:32 -0700
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.5
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
Subject: [agathiyar] Re: New word for cell phone?
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Yahoo-Message-Num: 2258

>> அகவி என்பது personal phone, mobile phone, cell phone என்பதற்கு
>> இணையான சொல்லோ?
>
>Merriam-Webster says:
>Inflected Form(s): paged; paging
>1 : to wait on or serve in the capacity of a page
>2 : to summon by repeatedly calling out the name of
>
>And அகவுதல் means 'Calling'. (உ-ம்: மயில் அகவும்)


கொலோன் வலையகராதியில்:

akavu-tal akavu-tal 01 1. to utter sound, as a peacock; 2. to sing; 3. to
dance, as a peacock; 4. to become long, lengthen out to call, summon

To Summon என்பதால் பொருத்தமே.

விளித்தல் என்றாலும், to call, summon என்ற பொருள் உண்டு. ஆனால், விளிப்பான்,
விளிப்பொறி, விளிப்பி என்ற சொற்கள் சரியெனத் தோன்றவில்லை.

"கரைதல்" என்ற சொல்லுக்கும் "to call, invite" என்ற பொருள் உண்டு. காக்கை
கரைந்து தன் சுற்றத்தை அழைப்பது போல், நம்மையும் நண்பர்கள் அழைக்கலாம்.
ஆனால், மீண்டும், pager என்பதற்குக் "கரைவி" என்ற சொல் சரியெனத்
தோன்றவில்லை.

'அகவி' சுருக்கமாகவும், இனிமையாகவும் உள்ளது. அது சரி, 'அகவி' என்ற சொல்லை
pagerக்குப் பயன்படுத்தும் சிங்கைத் தமிழர்கள், mobile phone, cell phone இவைக்கு
என்ன சொற்களைப் பயன்படுத்துகிறார்கள்? மலேசியத் தமிழர்கள் சிலர் கைப்போன்
என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன். செல்லி, செல்பேசி என்ற சொற்களையும்
கேட்டிருக்கிறேன். Internet phoneக்கு வலைபேசி என்று பெயரிடலாமா? Satellite
phoneக்குக் கோள்பேசி (கோள் மூட்டுவதால் இல்லை! செயற்கைக் கோள்
தொலைபேசியைச் சுருக்குவதால்). ;-)) நண்பர் சந்திரா சற்றும் சளைக்காமல்,
தொலைக்காட்சியை தொ.கா. எனச்சுருக்கி தொக்கா என்று அழைக்கிறார்.
TV என்பது போல் தொகாவும் வழக்கில் வரலாம். ஆமாம், இதை விதியை
தொலைபேசி என்ற சொல்லுக்கும் இட்டால்? (தொ.பே. -->> தொப்பே!) ;-)))

"அறுப்புக்கோட்டை" மணி மு. மணிவண்ணன்
நூவர்க், கலி., அ.கூ.நா.