From Mon Sep 27 23:35:31 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
X-eGroups-Approved-By: agathiyar@... via web
Received: (listserv 1.259); by mz; 28 Sep 1999 06:38:35 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 1477 invoked from network); 28 Sep 1999 00:12:53 -0000
Received: from valluvar.uwaterloo.ca (129.97.90.29) by qg.egroups.com with SMTP; 28 Sep 1999 00:12:53 -0000
Received: from kural.UWaterloo.ca (cnts3p33.uwaterloo.ca [129.97.130.33]) by valluvar.uwaterloo.ca (8.8.8/8.8.8) with ESMTP id UAA16542; Mon, 27 Sep 1999 20:12:49 -0400 (EDT)
Message-ID: <37F009BA.63119003@...>
Date: Mon, 27 Sep 1999 20:20:15 -0400
From: "C.R. (Selva) Selvakumar"
X-Mailer: Mozilla 4.01 [en] (Win95; I)
MIME-Version: 1.0
To: Nagamanickam Ganesan
CC: kumar@..., agathiyar@egroups.com, tamil@..., manim@...
X-Priority: 3 (Normal)
References: <19990927213908.9466.qmail@...>
Subject: [agathiyar] Re: [tamil] Representing alien letters/sounds in Tamil
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset=x-user-defined
Content-Transfer-Encoding: 8bit
X-Yahoo-Message-Num: 2274

Nagamanickam Ganesan wrote:

> I have seen the diacriticals prefixed when used thru' dumb
> VT10terminal. But, probably, Mr. Manivannan and Mr. Kuamar's
> suggestions are the way to go.
>
> Regards,
> N. Ganesan
>

அன்புள்ள கணேசன், இளங்கோ, மணிவண்ணன், குமார், ^சாபு,
~ச்ரீனிவாசு, சங்கரன் மற்றும் நண்பர்களுக்கு:

வணக்கம். உங்கள் கருத்துக்களுக்கெல்லாம் மிக்க நன்றி.

என்ன குறியீட்டைப் பயன் படுத்துவது, முன்கொட்டா, பின்கொட்டா
என்பதெல்லாம் என்னைப் பொருத்தவரையில் ஒரு பெரும்
பொருட்டேஅல்ல. ஏதோ ஒரு சிறிய உருவம் உடைய
ஒரு சில குறிகளை மட்டுமே கொண்டு தமிழ் எழுத்தின்
முன்போ, அல்லது பின்போ, அல்லது மேலேயோ, அல்லது கீழையோ
இட்டு G,J,D,Dh, B, F, Sh, S/Z, H முதலான
ஒலிகளைக் குறிக்க பயன் படுத்தலாம் என்பதே எண்ணம்.

இதனால் தமிழில் வழங்கும் வேற்று மொழிச் சொற்கள்
ஒரு சிறிதேனும் தெளிவாக ஒலிக்கும் என்பது என் நினைப்பு.

(கீழே உள்ள எடுத்துக்காட்டுகளில்
இப்போதைக்கு முன்கொட்டு இட்டு வேற்றொலிகளைக் காட்டி
உள்ளேன்).

ஆங்கிலத்தில் 'காந்தி என்பதை Candy என்பதைப்போல
'கேண்டி என்று பலுக்குகிறார்கள். புத்தப் பெருமானை 'பு'த்'தா
என்பதற்கு பதிலாக 'பூ'ட்'டா என்கிறார்கள். இத்தனைக்கும்
ஆங்கிலத்தில் this, that, the என்னும் சொற்களில் எல்லாம்
தகர ஒலி தெளிவாகவே உள்ளது ஆனால் அவர்களால் தகரத்தை
பிற வேற்றுச் சொற்களில் பயன் படுத்த முடிவதில்லை.
எப்படியிருந்தாலும் ஆங்கிலம் தமிழ் போல் எழுத்துடன்
இணங்கி ஒலிக்கும் ஒலிச்சீர்த்தி கொண்ட மொழியில்லை.
அவர்கள் எழுதுவது ஒருவாறு இருந்தாலும், பல்வேறு
விதமாக ஒலித்துக்கொள்ளலாம். நாம் அப்படிச் செய்தால்
நம் மொழியின் ஒழுக்கே மாறிவிடும். இதற்காகவே
இந்த சிறிய ஏற்பாடு. ஏற்கனவே புதிய முறைகளில்
எழுதி ஊக்கம் அளித்த எல்லோருக்கும் (^சாபு, குமார்,
சங்கரன், மணி, கணேசன் ..) என் நன்றிகள்.

கடைசியாக மணிக்கு : முன்கொட்டாக இருந்தால்
ஒலித்திரிபை சட்டென்று உணர்த்தும் என்று
எண்ணி அப்படி இட்டேன். ஆனால் அப்படித்தான்
இருக்க வேண்டும் என்றில்லை. எப்படிச் செய்தால்
அதிகப் பயனளிக்குமோ அப்படித்தான் செய்யவேண்டும்.

அன்புடன் செல்வா