From Nagarajan Chinnasamy Mon Sep 27 23:35:31 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
X-eGroups-Approved-By: agathiyar@... via web
Received: (listserv 1.259); by mz; 28 Sep 1999 06:38:35 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 30848 invoked from network); 28 Sep 1999 02:00:57 -0000
Received: from kodos.tinet.ie (159.134.237.29) by qg.egroups.com with SMTP; 28 Sep 1999 02:00:57 -0000
Received: from p375.as1.adl.dublin.eircom.net ([159.134.229.119] helo=tinet.ie) by kodos.tinet.ie with esmtp (Exim 2.05 #23) id 11VmZV-0004HI-00; Tue, 28 Sep 1999 03:00:50 +0100
Message-ID: <37F02239.DEA7486C@...>
Date: Tue, 28 Sep 1999 03:04:41 +0100
From: Nagarajan Chinnasamy
X-Mailer: Mozilla 4.6 [en] (Win98; I)
X-Accept-Language: en
MIME-Version: 1.0
To: "C.R. (Selva) Selvakumar"
CC: Nagamanickam Ganesan , kumar@..., agathiyar@egroups.com, tamil@..., manim@...
References: <19990927213908.9466.qmail@...> <37F009BA.63119003@...>
Subject: [agathiyar] Re: [tamil] Representing alien letters/sounds in Tamil
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset=x-user-defined
Content-Transfer-Encoding: 8bit
X-Yahoo-Message-Num: 2275

அன்புள்ள செல்வா,

பிறமொழிச் சொற்கள் அல்லது பிறமொழி எழுத்துக்கள்
கலந்த சொற்களை தன்மொழியில் எழுத மற்றும் உச்சரிக்க
அதன் எழுத்துக்ளையும் விதிமுறைகளையுமே பயன்படுத்த
வேண்டும்.

தாங்கள் முன்னர் சொன்னது:

> For example we write
> Gandhi's name in Tamil as Kaandhi. As per Tamil rules
> we out to pronounce only as Kaandhi, which is fine by me.
>

எனவே மேற்சொன்ன கருத்தில் தங்களுக்கும் உடன்பாடே.

இதில் மாற்றம் வேண்டும் என்று நினைப்பதே இலக்கண விதியில்
மாற்றம் வேண்டும் என்பது போல் தானே??!!!

அதாவது தாங்கள் சொல்ல வருவது:

மெல்லிய ஒலிகள் தமிழில் உள்ளன. அவை இலக்கண விதிகளால்
ஆளப்பட்டு வருகின்றன. இந்த விதிகளைத் தமிழ் சொற்களல்லாத
வேற்று மொழிச் சொற்களில் மட்டுமே தளர்த்த வேண்டும் என்றும் மிகக்
கண்டிப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

ஆயினும் பின் வரும் காரணங்களுக்காக, தங்களின் முன்வைப்பை
மறுக்கிறேன்:

வேற்று மொழி உச்சரிப்புகளுக்கு மட்டுமே இதனைப் பயன்படுத்த
வேண்டும் என்பது தங்கள் விருப்பமாய் இருக்கலாம். ஆனால்
அது விதியாகி விடாது. வேற்று மொழியில் இருந்து வந்து முழுதும்
தமிழ் உடை அணிந்து விட்ட கணேசன் கூட எளிதாய் 'கணேசன்
ஆவதையோ அல்லது 'கணே"சண் ஆவதையோ தங்களால்
கட்டுப்படுத்த முடியாது.

தாங்கள் முன்னர் சொன்னது போல், அன்பு, சங்கு போன்றவை
அன்'பு மற்றும் சங்'கு என்றாவதை எவ்வாறு நிறுத்தப் போகிறீர்கள்.
இன்னும் கொஞ்ச நாள் கழித்து யாருக்குத் தெரியும் (அல்லது
யாருக்கு அக்கறை) இச் சொற்கள் தமிழ்ச் சொற்களா இல்லையா
என்று???!!!!

இலக்கண விதிகளை இன்னும் கொஞ்சம் கடினப் படுத்தக் கூடியது
அல்லவா இது???!!!!

நாளைய குழுந்தைகள் எப்பொழுது முன்கொட்டு இடுவது?...
முதல் எழுத்தில் மட்டுமா???.... நடுவிலும் வருமா???....
தமிழ்ச்சொல்லிலும் வருமா??? வேற்று மொழிச் சொல்லில் மட்டும்
தான் வருமா??? சரி இச்சொல் தமிழ்ச்சொல்லா இல்லை வேற்று
மொழிச்சொல்லா??? என்றெல்லாம் கேட்டால்...????!!!!!!!!!!

இது அகரமுதலிகளில் சரியான ஒலிப்பு முறையைக் காண்பிக்க
நல்ல ஒலிப்பெயர்ச்சி முறையாகப் பயன்படுத்தப் படலாம்.

ஆனால் வழக்குத் தமிழாய் கொண்டு வருவது, புதிய
விதிகள்/ஒலிகளைக் கொண்டு வருவதே ஆகும். அப்படி
அவை மிகத் தேவை(நான் தேவை என்று கருதவில்லை)
எனக் கருதுவீர்களேயானால் அவற்றுக்கென்று முறையாய்
எழுத்துக்களைக் கொண்டு வரலாம். ' | " ^ போன்ற
குறிகளைப் பயன்படுத்துதல் அக்குறியீடுகளின் பயன்பாட்டை
சுமைப்பதோடு(ஓவர்லோடிங்) அல்லாமல் படிக்கும் எளிமை
கெடும்.

தங்களின் கருத்தறிந்து மேலும் புரிந்து கொள்ள ஆவல்...

அன்புடன்,
நாகு.