From jaybee Tue Sep 28 01:20:33 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 28 Sep 1999 08:23:36 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 27817 invoked from network); 28 Sep 1999 08:23:35 -0000
Received: from smtp.mail.yahoo.com (128.11.68.32) by qh.egroups.com with SMTP; 28 Sep 1999 08:23:35 -0000
Received: from j9.spt1.jaring.my (HELO user) (161.142.105.143) by smtp.mail.yahoo.com with SMTP; 28 Sep 1999 01:28:47 -0700
Message-Id: <3.0.3.32.19990928160709.00859100@...>
X-Sender: jaybee555@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Tue, 28 Sep 1999 16:07:09 +0700
To: agathiyar@egroups.com
From: jaybee
In-Reply-To: <3.0.3.32.19990927192912.019f6da0@...>
References: <003501bf090b$0e3667c0$39f2578b@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: New word for cell phone?
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2278

At 07:29 PM 9/27/99 +0800, you wrote:
>இஅன்பு நண்பர்களே,
>பேஜரைத்தான் இங்கு அகவி என்று அழைக்கிறோம்.

----------------------------cut
>
சிங்கைத் தமிழர்கள், mobile phone, cell phone இவைக்கு
>என்ன சொற்களைப் பயன்படுத்துகிறார்கள்?
>
>கைத்தொலைபேசி, கையடக்கத்தொலைபேசி என்று அழைக்கிறோம். ஆங்கிலத்தில்கூட இங்கு handphoneஇ
>அல்லது mobileஇ என்று கூறுகிறோம். செல்என்றெல்லாம் சொல்லிப் பழகவில்லை.
>
>பழனி

ஓய்வுக்காலத்தின்பின்னர், போதைப்பித்தர்கள் மீட்பு மையங்களில்
ஒப்பந்த மருத்துவ ஆலோசகராக இருந்தேன். அப்போது கம்ப்போங் செலாமாட்
என்னும் மையத்திற்கும் வாரமிரு முறைசெல்வதுண்டு.
அது ஒரு hard-core centre. போ.பி.களில் பலவகையினர்
உண்டு. சிலர் முழுக்கமுழுக்க 100 % போபியாக இருப்பார்கள். சிலர்
குற்றவாளிகளாக இருந்துகொண்டு போபிகளாக இருப்பார்கள். வேறு சிலர்
போபிகளாக இருப்பதால், தேவையைமுன்னிட்டும், போதையினாலும்,
நட்பினாலும், குற்றவாளிகளாக இருப்பார்கள்.
இந்த ஹார்ட்-கோர் ஆசாமிகள் இருக்கிறான்கிளே, அவர்கள்
குற்றங்களுடன் போபியாக இருப்பவர்கள்.அதாவது பாபியாகவும்
போபியாகவும் இருப்பார்கள்.
கம்போங் செலாமாட்டில் கொலையாளிகள், கற்பழித்தோர், கார்திருடி
முதல் காண்டேய்னர் லாரி கடத்தல், vice-ringoperators, சயாமியப்
பெண்களை விலைக்கு வாங்கி வாடகைக்குவிடுபவர்கள் என்று பலான
பேர் இருப்பார்கள்.
அங்கு மருத்துவ உதவியாளர்கள் தங்குவதில்லை. ஓடிவிடுவார்கள்.
ஆகவே, ஆங்கிலம் தெரிந்த, கொஞ்சம்யோக்கியமான ஆசாமிகளுக்கு
பயிற்சி கொடுத்து ஆர்டர்லியாகவைத்திருப்போம். அவர்களைப்போலவே
சண்டியர்த்தனம் இருப்பவர்களே அந்தமாதிரி மையங்களை நடத்துவார்கள்.
போபிகளுக்கும் ஆளை முதலிலேயேஆழம்பார்த்துவிடுவார்கள்.
அந்த மாதிரி ஆசாமிகளுக்கு நடுவே,ஆர்டர்லிகளின் உதவியோடு
ஒன்றரையாண்டு வெகு நிம்மதியாக காலம் தள்ளினேன். (அதான்
சண்டியர்த்தனம் வகையறா பற்றியெல்லாம் சொன்னேனே? கவனிக்கவில்லையா?)
அப்போது போபிகள் தங்கள் அனுபவங்கள், செயல்பாட்டுத்திறன்,
லீலைகள் போன்றவற்றை விலாவாரியாக என்னிடம் சொல்வார்கள்.
போபிமையத்திலேயே கலக்கல் சரக்குதயாரிப்பது எப்படி? போன்றவையும்
இதில் அடங்கும். அவ்வளவு நம்பிக்கை அவர்களுக்கு என்மேல்:-)
ஒருவன் நாற்பத்தேழு குற்றங்கள் புரிந்தவன். அவன் ஏழில் மட்டுமே
மாட்டி, உள்ளுக்குச்சென்றவன். அவன் மாட்டியது எப்படி
என்று ஒரு முறை விசாரித்துக் கொண்டிருந்தேன். அவன் சொன்னதில்
ஒரு சம்பவம் இது.
அவனும் அந்த சம்பவத்தை விவரித்தான்.
"வெரட்டிட்டே வந்தானுவ வாத்யாரே(அதாவது ஜேய்பி). பிடிபடல.
கார் பார்க்குல, காருக்கு கீள படுத்துட்டேன். பாத்தானுவ. சுத்திமுத்திலும்
ஈகாக்கெய காணம். அப்பொ ஒர்த்தன்சொல்ரான், "ஓய்! மான டீயா
லாரி? தாக் நாம்ப்பாக்ப்புன்?" (எங்கடாஓடினான்? பார்க்கமுடியவில்லையே?)
இன்னொரு ......(censored) சொல்ரான், "மரி கித்தா பாலே.
மான டீயா போலே லாரி? காலாவ் தாக்போலே கெனா ஹரி இனி,
லைன் காலி மிஸ்த்தி தாங்க்காப்." (வாடா போகலாம். இன்றைக்கு கண்டு
பிடிக்கவில்லையென்றாலும் இன்னொரு முறை கட்டாயம் பிடித்துவிடலாம்).
கொஞ்சம் நவந்து அங்கிட்டு போனானுவலா? "அப்பாடா, தப்பிச்சோம்
இன்னைக்கு"ன்னுட்டு நெனச்சென். அப்பப் பாருங்க வாத்யாரே. இந்த
ஹேண்ட் போன் அடிச்சிதி. நேரா வந்தானுவ. கைய காருக்கடில வுட்டு,
தரதரன்னுட்டு, பன்னிய இளுத்துப்போடுரமாதிரியே இளுத்துப்போட்டானுவ...
(censored)....அப்பரமா தலானி ஒரை அடி அடிச்சானுவ பாருங்க
வாத்யாரே. நெனாச்சாவே இன்னம் வலிக்கிது."

ஆகவே அந்த போபி பாபியைக் காட்டிக்கொடுத்த கைடெலிபோனை
"தொல்லை"பேசி என்றும் சொல்லலாமோ?
இந்த வேலையையே பேஜர் செய்திருந்தால் அதனை "பேஜார்"
என்று அழைக்கலாமே.

என்ன பழனி, என்ன நான் சொல்றது?

அன்புடன்

ஜெயபாரதி

==============================================>>