From Palaniappan A Tue Sep 28 05:19:14 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 28 Sep 1999 12:22:17 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 6860 invoked from network); 28 Sep 1999 12:22:13 -0000
Received: from sunny.pacific.net.sg (203.120.90.127) by qh.egroups.com with SMTP; 28 Sep 1999 12:22:13 -0000
Received: from pop2.pacific.net.sg (pop2.pacific.net.sg [203.120.90.86]) by sunny.pacific.net.sg with ESMTP id UAA01207 for ; Tue, 28 Sep 1999 20:22:09 +0800 (SGT)
Received: from liverpool.ntu.edu.sg (ppp33.dyn92.pacific.net.sg [210.24.92.33]) by pop2.pacific.net.sg with SMTP id UAA19795 for ; Tue, 28 Sep 1999 20:22:05 +0800 (SGT)
Message-Id: <3.0.3.32.19990928081748.018ade70@...>
X-Sender: pala@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.3 (32)
Date: Tue, 28 Sep 1999 08:17:48 +0800
To: agathiyar@egroups.com
From: Palaniappan A
In-Reply-To: <3.0.3.32.19990928160709.00859100@...>
References: <3.0.3.32.19990927192912.019f6da0@...> <003501bf090b$0e3667c0$39f2578b@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: New word for cell phone?
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2281

இஅன்பு டாக்டர் JB,

>ஆகவே அந்த போபி பாபியைக் காட்டிக்கொடுத்த கைடெலிபோனை தொல்லை"பேசி என்றும்
சொல்லலாமோ? இந்த வேலையையே பேஜர் செய்திருந்தால் அதனை "பேஜார்" என்றுஅழைக்கலாமே.>

நிச்சயமாக! அலுவலகங்களில். எம்ஆர்டியில்(பெருவிரைவு ரயில் சேவை) என ஒருஇடத்தில்கூட கொஞ்சம்
நிம்மதியாகத் கண்ணயர்ந்து தூங்க விடாதுங்க! பக்கத்துலெ உள்ள ஒவ்வொரு ஆளும்(-பொண்ணும்ம்-தா) இல்லெ
ஒண்ணைத்தூக்கிட்டு வர்ராக!
இப்போ 100 வெள்ளி கொடுத்து வாங்கிடலாம். ஆனா முந்தி மாதத்துக்கு சந்தா வாங்கினாங்க. இப்போ
ussage -பயன்பாட்டு அடிப்படையில் கட்டணமில்லெ வாங்குறாக!

<அப்போது போபிகள் தங்கள் அனுபவங்கள், செயல்பாட்டுத்திறன்,
லீலைகள் போன்றவற்றை விலாவாரியாக என்னிடம் சொல்வார்கள். >

ஆமாம் அந்த போபிகள் சொன்னதையெல்லாம் வைச்சு அவர்கள் அப்படியானதுக்கானகாரணம், பின்னணி,
போதையர்களாக ஆகுறதுக்கு மரபணுக்கள்(ஜீன்ஸ்தான்-ஐஸ்வர்ய ராய் வராதது) தொடர்புன்னு பல சமூகவியல்,
உளவியல் ஆய்வுகள் செய்யறதுக்காகபோபிகளோடெ குறிப்புகளெ எல்லாம்எழுதி வைச்சிருந்தீகளே
அதெல்லாம் என்னா ஆச்சு? அந்தக் குறிப்புஏடுகளெயும் அவனுகளெ அபேஸ் பண்ணிட்டானுகளா?

> போபிமையத்திலேயே கலக்கல் சரக்குதயாரிப்பது எப்படி? போன்றவையும்
> இதில் அடங்கும். அவ்வளவு நம்பிக்கைஅவர்களுக்கு என்மேல்:-) >

பாத்திகளா! அதெயெல்லாம் எங்களுக்குநீங்க சொல்லிக்கொடுக்கலியே. கஞ்சா மாதிரி கொஞ்சம் கிக்
தர்ர எங்க பாட்டன் காலத்து சரக்கு இருக்கவே இருக்கு. அதைப்பத்தி இப்படி ஒரு புலவன் சொன்னான்:

நாலெழுத்துப் பூடு நடுவே நரம்பிருக்கும்
காலுந் தலையுங் கடைச்சாதி-மேலாக
ஒட்டு முதலெழுத்து மோதுமூன்றா மெழுத்தும்
விட்டார் பரமனுக்கு வீடு

அப்பாட்டுக்கு உரை இப்படிப்போகுது.
நாலெழுத்துப் பூடு-நாலெழுத்தினாலாகிய ஒரு பூண்டு, நடுவே நரம்பிருக்கும்-அதன்நடுவில் நரம்புவோன்ற சிறு
தண்டிருக்கும், காலும் தலையும் கடைச்சாதி-முதலெழுத்தையும் கடைசி யெழுத்தையும்சேர்த்தால் இழிந்த சாதியை
உணர்த்தும், மேலாக ஒட்டு முதலெழுத்தும் ஓதும் மூன்று எழுத்தும் விட்டார் பரமனுக்குவீடு-எஞ்சி நின்ற பகுதி
சிவபெருமான் இருப்பிடத்தை யுணர்த்தும்.

இது என்னான்னு கண்டுபிடிச்சு சொல்றவங்களுக்கு அதையே பரிசாக் கொடுத்திடலாம்!

அன்புடன்
பழனி


At 04:07 PM 9/28/99 +0700, you wrote:
>At 07:29 PM 9/27/99 +0800, you wrote:
>>இஅன்பு நண்பர்களே,
>>பேஜரைத்தான் இங்கு அகவி என்று அழைக்கிறோம்.
>
>----------------------------cut
>>
> சிங்கைத் தமிழர்கள், mobile phone, cell phone இவைக்கு
>>என்ன சொற்களைப் பயன்படுத்துகிறார்கள்?
>>
>>கைத்தொலைபேசி, கையடக்கத்தொலைபேசி என்று அழைக்கிறோம். ஆங்கிலத்தில்கூட இங்கு handphoneஇ
>>அல்லது mobileஇ என்று கூறுகிறோம். செல்என்றெல்லாம் சொல்லிப் பழகவில்லை.
>>
>>பழனி
>
> ஓய்வுக்காலத்தின்பின்னர், போதைப்பித்தர்கள் மீட்பு மையங்களில்
> ஒப்பந்த மருத்துவ ஆலோசகராக இருந்தேன். அப்போது கம்ப்போங் செலாமாட்
> என்னும் மையத்திற்கும் வாரமிரு முறைசெல்வதுண்டு.
> அது ஒரு hard-core centre. போ.பி.களில் பலவகையினர்
> உண்டு. சிலர் முழுக்கமுழுக்க 100 % போபியாக இருப்பார்கள். சிலர்
> குற்றவாளிகளாக இருந்துகொண்டு போபிகளாக இருப்பார்கள். வேறு சிலர்
> போபிகளாக இருப்பதால், தேவையைமுன்னிட்டும், போதையினாலும்,
> நட்பினாலும், குற்றவாளிகளாக இருப்பார்கள்.
> இந்த ஹார்ட்-கோர் ஆசாமிகள் இருக்கிறான்கிளே, அவர்கள்
> குற்றங்களுடன் போபியாக இருப்பவர்கள். அதாவது பாபியாகவும்
> போபியாகவும் இருப்பார்கள்.
> கம்போங் செலாமாட்டில் கொலையாளிகள், கற்பழித்தோர், கார்திருடி
> முதல் காண்டேய்னர் லாரி கடத்தல், vice-ringoperators, சயாமியப்
> பெண்களை விலைக்கு வாங்கி வாடகைக்கு விடுபவர்கள் என்று பலான
> பேர் இருப்பார்கள்.
> அங்கு மருத்துவ உதவியாளர்கள் தங்குவதில்லை. ஓடிவிடுவார்கள்.
> ஆகவே, ஆங்கிலம் தெரிந்த, கொஞ்சம்யோக்கியமான ஆசாமிகளுக்கு
> பயிற்சி கொடுத்து ஆர்டர்லியாகவைத்திருப்போம். அவர்களைப்போலவே
> சண்டியர்த்தனம் இருப்பவர்களே அந்தமாதிரி மையங்களை நடத்துவார்கள்.
> போபிகளுக்கும் ஆளை முதலிலேயேஆழம்பார்த்துவிடுவார்கள்.
> அந்த மாதிரி ஆசாமிகளுக்கு நடுவே,ஆர்டர்லிகளின் உதவியோடு
> ஒன்றரையாண்டு வெகு நிம்மதியாக காலம் தள்ளினேன். (அதான்
> சண்டியர்த்தனம் வகையறா பற்றியெல்லாம் சொன்னேனே? கவனிக்கவில்லையா?)
> அப்போது போபிகள் தங்கள் அனுபவங்கள், செயல்பாட்டுத்திறன்,
> லீலைகள் போன்றவற்றை விலாவாரியாக என்னிடம் சொல்வார்கள்.
> போபிமையத்திலேயே கலக்கல் சரக்குதயாரிப்பது எப்படி? போன்றவையும்
> இதில் அடங்கும். அவ்வளவு நம்பிக்கைஅவர்களுக்கு என்மேல்:-)
> ஒருவன் நாற்பத்தேழு குற்றங்கள் புரிந்தவன். அவன் ஏழில் மட்டுமே
> மாட்டி, உள்ளுக்குச்சென்றவன். அவன் மாட்டியது எப்படி
> என்று ஒரு முறை விசாரித்துக் கொண்டிருந்தேன். அவன் சொன்னதில்
> ஒரு சம்பவம் இது.
> அவனும் அந்த சம்பவத்தை விவரித்தான்.
> "வெரட்டிட்டே வந்தானுவ வாத்யாரே(அதாவது ஜேய்பி). பிடிபடல.
> கார் பார்க்குல, காருக்கு கீள படுத்துட்டேன். பாத்தானுவ. சுத்திமுத்திலும்
> ஈகாக்கெய காணம். அப்பொ ஒர்த்தன்சொல்ரான், "ஓய்! மான டீயா
> லாரி? தாக் நாம்ப்பாக்ப்புன்?" (எங்கடாஓடினான்? பார்க்கமுடியவில்லையே?)
> இன்னொரு ......(censored) சொல்ரான், "மரிகித்தா பாலே.
> மான டீயா போலே லாரி? காலாவ் தாக்போலே கெனா ஹரி இனி,
> லைன் காலி மிஸ்த்தி தாங்க்காப்." (வாடா போகலாம். இன்றைக்கு கண்டு
> பிடிக்கவில்லையென்றாலும் இன்னொரு முறை கட்டாயம் பிடித்துவிடலாம்).
> கொஞ்சம் நவந்து அங்கிட்டு போனானுவலா? "அப்பாடா, தப்பிச்சோம்
> இன்னைக்கு"ன்னுட்டு நெனச்சென். அப்பப் பாருங்க வாத்யாரே. இந்த
> ஹேண்ட் போன் அடிச்சிதி. நேரா வந்தானுவ. கைய காருக்கடில வுட்டு,
> தரதரன்னுட்டு, பன்னிய இளுத்துப்போடுரமாதிரியே இளுத்துப்போட்டானுவ...
> (censored)....அப்பரமா தலானி ஒரை அடி அடிச்சானுவ பாருங்க
> வாத்யாரே. நெனாச்சாவே இன்னம் வலிக்கிது."
>
> ஆகவே அந்த போபி பாபியைக் காட்டிக்கொடுத்த கைடெலிபோனை
> "தொல்லை"பேசி என்றும் சொல்லலாமோ?
> இந்த வேலையையே பேஜர் செய்திருந்தால் அதனை "பேஜார்"
> என்று அழைக்கலாமே.
>
> என்ன பழனி, என்ன நான் சொல்றது?
>
> அன்புடன்
>
> ஜெயபாரதி
>
>==============================================>>
>
>
>------------------------------------------------------------------------
>
>eGroups.com home: http://www.egroups.com/group/agathiyar
>http://www.egroups.com - Simplifying group communications
>
>
>
>
>