From jaybee Tue Sep 28 08:43:00 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 28 Sep 1999 15:46:03 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 20017 invoked from network); 28 Sep 1999 15:46:00 -0000
Received: from smtp.mail.yahoo.com (128.11.68.32) by qh.egroups.com with SMTP; 28 Sep 1999 15:46:00 -0000
Received: from sp-69-208.tm.net.my (HELO user) (202.188.69.208) by smtp.mail.yahoo.com with SMTP; 28 Sep 1999 08:50:45 -0700
Message-Id: <3.0.3.32.19990928234406.007e2210@...>
X-Sender: jaybee555@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Tue, 28 Sep 1999 23:44:06 +0700
To: agathiyar@egroups.com
From: jaybee
In-Reply-To: <3.0.3.32.19990928081748.018ade70@...>
References: <3.0.3.32.19990928160709.00859100@...> <3.0.3.32.19990927192912.019f6da0@...> <003501bf090b$0e3667c0$39f2578b@...>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: New word for cell phone?
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2286


அன்புள்ள பழனி,

At 08:17 AM 9/28/99 +0800, you wrote:
>இஅன்பு டாக்டர் JB,
>
>>ஆகவே அந்த போபி பாபியைக் காட்டிக்கொடுத்த கைடெலிபோனை தொல்லை"பேசி என்றும்
>சொல்லலாமோ? இந்த வேலையையே பேஜர் செய்திருந்தால் அதனை "பேஜார்" என்று அழைக்கலாமே.>
>
>நிச்சயமாக! அலுவலகங்களில்.எம்ஆர்டியில்(பெருவிரைவு ரயில் சேவை) என ஒரு இடத்தில்கூட கொஞ்சம்
>நிம்மதியாகத் கண்ணயர்ந்து தூங்க விடாதுங்க! பக்கத்துலெ உள்ள ஒவ்வொரு ஆளும்(-பொண்ணும்ம்-தா) இல்லெ
>ஒண்ணைத்தூக்கிட்டு வர்ராக!
>இப்போ 100 வெள்ளி கொடுத்து வாங்கிடலாம். ஆனா முந்தி மாதத்துக்கு சந்தாவாங்கினாங்க. இப்போ
>ussage -பயன்பாட்டு அடிப்படையில் கட்டணமில்லெ வாங்குறாக!
>
பழைய வடமொழி பழமொழி ஒன்று உண்டு:
"உத்யோகம் புருஷ லக்ஷணம்
புஸ்தகம் ஹஸ்தாலங்காரம்"
என்று தொடர்ந்து வரும். மற்றதுகளெல்லாம் மறந்துபோய்விட்டது.
இப்போதெல்லாம் புத்தகத்தை கையில்அலங்காரமாக யார் வைத்திருக்கிறார்கள்?
கைப்பேசிதான் இருக்கிறது. காலாவதியானபின்னும் சும்மாவாவது
வைத்துக்கொண்டுதான் சிலர் இருக்கிறார்கள்.


><அப்போது போபிகள் தங்கள் அனுபவங்கள், செயல்பாட்டுத்திறன்,
>லீலைகள் போன்றவற்றை விலாவாரியாக என்னிடம் சொல்வார்கள். >
>இ
>ஆமாம் அந்த போபிகள் சொன்னதையெல்லாம் வைச்சு அவர்கள் அப்படியானதுக்கானகாரணம், பின்னணி,
>போதையர்களாக ஆகுறதுக்கு மரபணுக்கள்(ஜீன்ஸ்தான்-ஐஸ்வர்ய ராய் வராதது) தொடர்புன்னு பல சமூகவியல்,
>உளவியல் ஆய்வுகள் செய்யறதுக்காகபோபிகளோடெ குறிப்புகளெ எல்லாம்எழுதி வைச்சிருந்தீகளே
>அதெல்லாம் என்னா ஆச்சு? அந்தக் குறிப்புஏடுகளெயும் அவனுகளெ அபேஸ் பண்ணிட்டானுகளா?

ஆம். அந்த ஒரு டயரி திருட்டுப்போய்விட்டது. யார் எடுத்தது
என்பது தெரியவில்லை. போ.பி.க்களாகவும் இருக்கலாம். மற்றவர்களால்
ஏவப்பட்ட போ.பி.க்களாகவும் இருக்கலாம். அல்லது போ.பி.யல்லாது
வேறு யாராவதாகவும் இருக்கலாம்.
ஆனால் வேறுவகையில் அந்த தகவல்கள்சேர்க்கப்பட்டுவிட்டன.
ஆகையால் தவறிப்போனவை சில பகுதிகள்தாம். அவ்வளவு பாதிப்பு இல்லை.
போதையர் மீட்சித்திட்டத்தில் அணுகுமுறை மாற்றமும் பயிற்சிகளும்
வெகுவாக மாற்றியமைக்கப்படவேண்டியஅவசியம் நிறையவே இருக்கிறது.
ஒருமுறை மீட்சித்திட்டத்திற்கு ஒன்றரையாண்டு ஆளாகியவர்கள்,
மீண்டும் ஒரு சில தினங்களிலேயே பிடிபட்டு, மீட்சிமையங்களுக்கு
திரும்பி வருவது கவலைக்குரிய விஷயம். வெளியாகிய மாஜி போதையர்களை
சமுதாய வட்டத்திலும் rehab செய்யப்படவேண்டியது அவசியம்.
ஆனால் தமிழர்களிடையே எந்தவித சமுதாய ஒத்துழைப்போ,
உதவியோ இந்த மாஜி போதையர்களுக்குக் கிடைப்பது கிடையாது. ஆகவே
தமிழர்கள் மீண்டும் மீண்டும் தவறுவதுசர்வசாதாரணமாகிவிட்டது.
மலாய் இனத்தவரிடையே வெறும் போதைப்பழக்கம் மட்டுமே
இருப்பவர்கள் நிறையப்பேர் இருப்பார்கள். ஆனால் தமிழர்களிடயே
போதைப்பழக்கத்துடன் மற்ற குறைபாடுகளும் பெரும்பாலும் காணப்படும்.
பெரும் எண்ணிக்கையினர், குண்டர் குழுக்களில் சம்பந்தப்பட்டிருப்பார்கள்.
திருட்டு, போன்ற குற்றச்செயல்களில்சம்பந்தப்பட்டவர்களும் பலர்
இருப்பார்கள்.
நம்மிடம் நிறைய கோயில்கள், இயக்கங்கள், சங்கங்கள், கட்சிக்
கிளைகள் இருக்கின்றன. ஆனால் சமுதாயத்திற்கென்று வலுவான
infra-structure ஏதும் கிடையாது.நூற்றுக்கணக்கில் இளைஞர்
இயக்கங்கள் இருந்தும், தூங்கி தூங்கியே சுகம் காண்கின்றன. இளைஞர்களிடையே
விழிப்புணர்ச்சி ஏதும் ஏற்படுத்துவதுகிடையாது. ஒருவேளை அவ்வாறு அஞ்ஞான
மௌட்டீக அறியாமை இருளில் அவர்கள்உழல்வது யாருக்காவது லாபத்தைக்
கொடுப்பதாக இருக்கக்கூடும்.
ஒழுக்கத்தையும் பொறுப்புணர்ச்சியையும்,இரக்கம், ஈகை,
புரிந்துணர்வு, ஒத்துழைப்பு, நம்பிக்கைபோன்றவற்றுடன் கலந்து, பக்தி
மார்க்கத்தின் வழியே நடத்திச்செலுத்துதல் அறவே நடைபெறாமல்,
சடங்குகளைமட்டுமே பின்னடக்கிய சுரண்டல் வேலைகளே சமயத்தின்
வழி செய்யப்படுகின்றன.
இந்த இடத்தில் கோயில்கள், சமுதாயஅமைப்புகள் மிகப்பெரிய
பலவீனத்தை தமிழர்களிடையே ஏற்படுத்துகின்றன. Acts of omission
and commission என்று சொல்வது போல, இருவகைகளிலுமே
இந்த பலவீனங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன.
கவனிப்பாரற்ற இளைஞர்கள். கோரிக்கையற்று கிடக்கும்
வேரிற் பழுத்த பலாக்களாக அழுகிக்கொண்டிருக்கிறார்கள். அதனால்
ஏற்படும் பேதைமையே அவர்களின் போதைக்கு பாதையமைத்துக்
கொடுக்கிறது.

(அவர்களில் சிலர் வாழ்க்கையில் ஏற்பட்ட சில அனுபவங்களை
பெயர்கள் குறிப்பிடாமல் வேண்டுமானால் எழுதலாம்.)

அன்புடன்

ஜெயபாரதி

>
>> போபிமையத்திலேயே கலக்கல் சரக்கு தயாரிப்பது எப்படி? போன்றவையும்
>> இதில் அடங்கும். அவ்வளவு நம்பிக்கைஅவர்களுக்கு என்மேல்:-) >
>
>
>அன்புடன்
>பழனி
>
>
=======================================================================