From Tue Sep 28 10:33:42 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 28 Sep 1999 17:36:45 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 20546 invoked from network); 28 Sep 1999 17:36:42 -0000
Received: from avocet.prod.itd.earthlink.net (207.217.121.50) by qh.egroups.com with SMTP; 28 Sep 1999 17:36:42 -0000
Received: from default (pool0467.cvx1-bradley.dialup.earthlink.net [209.178.129.212]) by avocet.prod.itd.earthlink.net (8.9.3/8.9.3) with SMTP id KAA17426 for ; Tue, 28 Sep 1999 10:36:38 -0700 (PDT)
Message-ID: <002001bf09bb$fe6305e0$d481b2d1@default>
From: "N. Swaminathan"
To:
Date: Tue, 28 Sep 1999 10:15:59 -0400
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
Subject: [agathiyar] Re: New word for cell phone?
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2288

கடைகளில் பிளாஸ்டிக்கில் (பிளா'ச்டிக் ?) செய்த பொம்மைக் கைத்தொலைபேசி
ஒரு டாலருக்கு விற்கிறார்கள். காசுகொடுத்து உண்மையான தொலைபேசி
வாங்காமல், இதைக்கையில் வைத்துக்கொண்டு யாரிடமோ பேசுவதுபோல்
நடிக்கலாம். பேசலாம், தொலைக்கலாம், பேசித்தொலைக்கலாம். சும்மா ஒரு
இமேஜுக்குத்தான். ஆனால் ஏதாவது ஒரு அவசரம் என்று
ஒருவர் இரவல் கேட்டால் வம்பு. (ஸாரி, பேட்டரி தீந்திட்டுதுங்க)

இந்த நவீன சாதனங்கள் தொடர்பை எளிதாக்கிவிட்டன. இதனால் கடிதம் எழுதுவதே
மறந்து வருகிறது. எங்கள் தாத்தா தபால் கார்டில் எழுதுவார். இடம் தீர்ந்துவிட்டால்
பக்கவாட்டில் ஓரத்தில் எழுதுவார். பின்பக்கத்தில் தபால் தலை, விலாசம் எழுதுமிடம்
மட்டும் தவிர்த்து எல்லாவிடத்திலும் எழுதுவார். முடிந்தால் தபால்காரர் முதுகிலும்
எழுதியிருப்பார். ஒரு சிறிய கார்டில் குடும்ப விவகாரங்கள், விவசாய விவரங்கள்,
வரப்போகும் பண்டிகைகள், குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டிய சுலோகங்கள்,
கிரக மாற்றத்தால் ஏற்படவிருக்கும் நன்மை தீமைகள், அரசின் தேவையற்ற தலையீடுகளை
ப்பற்றிய தன் கண்டனம், இன்னும் படிக்கமுடியாத (நுணுக்கி எழுதப்பட்டதால்)செய்திகள்
எல்லாம் இருக்கும். படிக்கும்போது நேரில் வைத்து ஒரு தடவை, வலது பக்கம்
திருப்பி ஒரு தடவை, இடது பக்கம் திருப்பி ஒரு தடவை என்று பல கோணங்களில்
படிக்க நேரிடும். இதைப்படிப்பவரை தூரத்தில் இருந்து பார்த்தால் ஏதோ கண்ணாடியில்
முகத்தை அழகு பார்ப்பது போலிருக்கும்.

கடிதங்களை ஒரு கம்பியில் குத்தி சுவற்றில் ஒரு ஆணியில் மாட்டியிருப்போம்.
Database, Information retrivel போன்ற சொற்கள் ஏற்படாத காலம் அது. சாவுக்
கடுதாசிகள், தந்திகள் மட்டும் படித்த உடனே கிழித்தெறியப்படும். கடிதம் நிறைய
சேர்ந்துவிட்டால் இன்னொருகம்பி தயாராகும். எப்பொழுதாவது ஜாதகம் பற்றிய
சந்தேகம் வந்தால், எங்களில் ஒருவரை அழைத்து "விசுவோட ரெண்டாவது பொண்ணு பொறந்த நேரம்
எழுதியிருந்தான், பாத்து சொல்லு" என்று search command போடுவார்கள்.
வரிசை குலையாமல் மெதுவாக கடிதங்களை நகர்த்தி படித்து சொல்லுவோம்.

பள்ளிகளில் கடிதம் எழுதுவது போதிக்கப்பட்டது. யாரை எப்படி விளிப்பது,
கையெழுத்திடுமுன் விசுவாசத்துடனா, அன்புடனா,நன்றியுடனா, கீழ்ப்படிதலுடனா
என்றெல்லாம் விலாவரியாகச்சொல்லிக்கொடுத்தார்கள். காதலில் கடிதங்களின்
அவசியம் சினிமாவில் போதிக்கப்பட்டது. கடிதம் வழியாகவே கதை நகர்ந்தது.

வெளியூருக்கு போகும்போது "போய் கடுதாசு போடு" என்பார்கள். இப்ப
"ஒரு போன் அடி", "இமெயில் போடு" என்பதாக மாறிவிட்டது. இமெயிலில்
"How are you?" என்று எழுதப்போக ஒரு நண்பர் "எதற்கு இத்தனை keystroke
செய்கிறாய். How R U என்று போட்டல் போதாதா" என்று கடிந்துகொண்டார்.
S என்று ஒத்துக்கொள்ளவேண்டியிருந்தது. போகிறபோக்கில் (;-), (;-(,(;-/) போன்ற
குறிகள் மட்டும் பயன்படுத்தி செய்திப்பரிமாற்றம் செய்யவேண்டியதாகுமோ என்று பயமாக
இருக்கிறது.

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
==============



<ஜெயபாரதி எழுதினார்>
>>
> பழைய வடமொழி பழமொழி ஒன்று உண்டு:
> "உத்யோகம் புருஷ லக்ஷணம்
> புஸ்தகம் ஹஸ்தாலங்காரம்"
> என்று தொடர்ந்து வரும். மற்றதுகளெல்லாம் மறந்துபோய்விட்டது.
> இப்போதெல்லாம் புத்தகத்தை கையில் அலங்காரமாக யார் வைத்திருக்கிறார்கள்?
> கைப்பேசிதான் இருக்கிறது. காலாவதியானபின்னும் சும்மாவாவது
> வைத்துக்கொண்டுதான் சிலர் இருக்கிறார்கள்.
>
>