From Vassan Tue Sep 28 12:42:17 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 28 Sep 1999 19:45:20 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 24675 invoked from network); 28 Sep 1999 19:45:17 -0000
Received: from mailer.cia-g.com (207.66.82.36) by qg.egroups.com with SMTP; 28 Sep 1999 19:45:17 -0000
Received: from default (gup-069-dpm2.cia-g.com [207.66.82.149]) by mailer.cia-g.com (8.8.8/8.8.5) with SMTP id NAA21881; Tue, 28 Sep 1999 13:45:09 -0600 (MDT)
Message-Id: <3.0.5.32.19990928135738.007a2550@...>
X-Sender: vishnu@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.5 (32)
Date: Tue, 28 Sep 1999 13:57:38 -0600
To: meeswa99@..., agathiyar@egroups.com
From: Vassan
In-Reply-To: <002001bf09bb$fe6305e0$d481b2d1@default>
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: New word for cell phone?
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 2292


அன்பின் நண்பர் சுவாமி

At 10:15 09/28/1999 -0400,you wrote:
>கடைகளில் பிளாஸ்டிக்கில் (பிளா'ச்டிக் ?) செய்த பொம்மைக் கைத்தொலைபேசி
>ஒரு டாலருக்கு விற்கிறார்கள். காசுகொடுத்து உண்மையான தொலைபேசி
>வாங்காமல், இதைக்கையில் வைத்துக்கொண்டு யாரிடமோ பேசுவதுபோல்
>நடிக்கலாம். பேசலாம், தொலைக்கலாம்,பேசித்தொலைக்கலாம். சும்மா ஒரு
>இமேஜுக்குத்தான். ஆனால் ஏதாவது ஒருஅவசரம் என்று
>ஒருவர் இரவல் கேட்டால் வம்பு. (ஸாரி,பேட்டரி தீந்திட்டுதுங்க)


நான் வேலை பார்க்கும் ஸூனி(zuni)செவ்விந்திய reservation/pueblo 'வில்
கைத்தொலைபேசி என்னும் cellular/mobile phoneபரவலாக ஆரம்பித்த கடந்த
சில வருடங்களில் நிகழ்ந்தவை:

காரில் ஃபோன் இல்லாத சில இளசுகள்வீண் ஜம்பத்திற்காக தங்கம் மற்றும் வெள்ளி நிறத்தில்
$9.99 விலைக்கு காரின் பின் கண்ணாடிபலகையில் antenna வை மட்டும் சொருகி
கொண்டு திரிந்தனர்!

கைத்தொலைபேசியில் வெளி மாநிலஅழைப்புகளுக்கு(calls) ஆகும் தொகை
மிக அதிகம்[air time+tax & roaming +tax ] என்பது தெரியாத சிலர்
கன்னா பின்னாவென்று அதனை பயன்படுத்தி,வந்த 400,500 டாலர் தொகைக்கான மாதாந்திர
bill-ஐ கட்ட முடியாமல் விழி பிதுங்கலாயினர்.

அவ்வளவாக எனக்கு தெரிந்திராத சிலர் கூட,வசான்(வாசன் என்பதையே) உன்னுடைய
தொ.பே எண் என்ன-இதோ என்னுடைய எண்என்று,நான் கேட்காதபோதும் ஒரு அதிகப்படியான
பெருமிதத்துடன் கொடுத்து சென்றனர்:)

என்னிடம் விற்பதற்காக நகைகளை செய்யும் சிலரிடமிருந்து "நான் என்னுடையபண்ணையில்[ranch]
ஆடுகளுக்கும்,மாடுகளுக்கும்,பன்றிகளுக்கும்தீவனம் வைத்துகொண்டுள்ளேன்,பின்னர்உன்னிடம்
நகைகளை கொண்டுவருகிறேன்,7 மணி வரை பொறுத்திரு" என்பது போன்ற அழைப்புகளும் அவப்போது
எனக்கு வர ஆரம்பித்தன.

[நறுக்]
>
>கடிதங்களை ஒரு கம்பியில் குத்தி சுவற்றில் ஒரு ஆணியில் மாட்டியிருப்போம்.
>Database, Information retrivel போன்ற சொற்கள் ஏற்படாத காலம் அது. சாவுக்
>கடுதாசிகள், தந்திகள் மட்டும் படித்த உடனே கிழித்தெறியப்படும். கடிதம் நிறைய
>சேர்ந்துவிட்டால் இன்னொருகம்பி தயாராகும். எப்பொழுதாவது ஜாதகம் பற்றிய
>சந்தேகம் வந்தால், எங்களில் ஒருவரைஅழைத்து "விசுவோட ரெண்டாவது பொண்ணு பொறந்த நேரம்
>எழுதியிருந்தான், பாத்து சொல்லு" என்றுsearch command போடுவார்கள்.
>வரிசை குலையாமல் மெதுவாக கடிதங்களை நகர்த்தி படித்து சொல்லுவோம்.

இதுபோன்று கம்பியில் குத்தப்பட்டுதொங்கிகொண்டிருக்கும் கடிதங்களால்
இன்னொரு பயனுமுண்டு என்னுடைய மாமாக்கள் சிலருக்கு.வீட்டிற்கு வந்து
சிகையலங்காரம் செய்துவிட்டு செல்லுபவர் சவரம் செய்து விடும் போது சோப்பை
வழிப்பதற்கும் சில பழைய கடிதங்கள்பயன்படுத்தப்படும்.[1970களில்]

மழைக்காலத்தில் சாதா மற்றும் கத்திகப்பல் செய்து விடுவதற்கும் அவை எனக்கு
பயன்பட்டதுண்டு!

[நறுக்]
>பள்ளிகளில் கடிதம் எழுதுவது போதிக்கப்பட்டது. யாரை எப்படி விளிப்பது,
>கையெழுத்திடுமுன் விசுவாசத்துடனா,அன்புடனா,நன்றியுடனா, கீழ்ப்படிதலுடனா
>என்றெல்லாம் விலாவரியாகச்சொல்லிக்கொடுத்தார்கள்.

how can we ever forget "yours obediently" :)

காதலில் கடிதங்களின்
>அவசியம் சினிமாவில் போதிக்கப்பட்டது. கடிதம் வழியாகவே கதை நகர்ந்தது.
>
>வெளியூருக்கு போகும்போது "போய் கடுதாசு போடு" என்பார்கள். இப்ப
>"ஒரு போன் அடி", "இமெயில் போடு" என்பதாக மாறிவிட்டது. இமெயிலில்
>"How are you?" என்று எழுதப்போக ஒரு நண்பர் "எதற்கு இத்தனை keystroke
>செய்கிறாய். How R U என்று போட்டல் போதாதா" என்று கடிந்துகொண்டார்.
>S என்று ஒத்துக்கொள்ளவேண்டியிருந்தது.போகிறபோக்கில் (;-), (;-(,(;-/) போன்ற
>குறிகள் மட்டும் பயன்படுத்தி செய்திப்பரிமாற்றம் செய்யவேண்டியதாகுமோ என்று பயமாக
>இருக்கிறது.

சமீபத்தில்,
"ஈ-மெயில்" வசதி இல்லாமலிருக்கும் ஓர்தமிழக ஊரில் வசிக்கும் மாமாவுக்கு
"அப்பாவுக்கு தலைக்கு தடவ,சந்தனாதி தைலம்" வாங்கி அனுப்புன்னு
bharathmail.com வழியா மின் அஞ்சல் அனுப்பினேன்.மின் அஞ்சல் அனுப்பி
3 நாளைக்கப்பறம் திருச்சியிலேந்து உன்மின் அஞ்சல் எனக்கு அனுப்பப்பட்டதுன்னு,
மாமா எழுதின 'நத்தை'கடிதம் 15 நாள் கழிச்சு எனக்கு கிடைச்சது !!!

[நறுக்]
வாசன்

கேலப்,புது மெக்சிக்கோ...அ.கூ.நா