From Tue Sep 28 15:59:37 1999
Delivered-To: listsaver-of-agathiyar@egroups.com
Mailing-List: contact agathiyar-owner@egroups.com
X-Mailing-List: agathiyar@egroups.com
X-URL: http://www.egroups.com/list/agathiyar/
Received: (listserv 1.262); by m5; 28 Sep 1999 23:02:38 -0000
Reply-To: agathiyar@egroups.com
Delivered-To: listsaver-egroups-agathiyar@egroups.com
Received: (qmail 32181 invoked from network); 28 Sep 1999 23:01:11 -0000
Received: from law-f115.hotmail.com (HELO hotmail.com) (209.185.131.178) by qh.egroups.com with SMTP; 28 Sep 1999 23:01:10 -0000
Received: (qmail 59832 invoked by uid 0); 28 Sep 1999 23:01:10 -0000
Message-ID: <19990928230110.59831.qmail@...>
Received: from 216.118.13.58 by www.hotmail.com with HTTP; Tue, 28 Sep 1999 16:01:10 PDT
X-Originating-IP: [216.118.13.58]
From: "Nagamanickam Ganesan"
To: agathiyar@egroups.com
Cc: tamil@...
Date: Tue, 28 Sep 1999 16:01:10 PDT
Mime-Version: 1.0
Subject: [agathiyar] Re: New word for cell phone?
Mime-Version: 1.0
Content-Type: text/plain; format=flowed
Content-Transfer-Encoding: 7bit
X-Yahoo-Message-Num: 2293



மணிவண்ணன் சொல்வது சரிதான்.
காகம் கரைவது, பெருமாளை அழைக்கும் யானை கரைவது (ஆனயு கரதரே),
கலம்கரைவிளக்கு என்பதிலெல்லாம் முயற்சி/வலி/கடுமை சற்றுத் தெரிகிறது.
அகவி என்பது அகவுதல் என்னும் வினையடிப் பிறந்து pager-க்கு வெகு பொருத்தம்.

சில கணிய நண்பர்கள் அகத்தில், வாரயிறுதியைக் கழிக்கையில் பார்த்தது:
வேலை நிமித்தம், அகவியை அலுவலகம் அளித்துவிடும்; நடு நிசியில்,
அந்த அகவி கரையும்; அப்போது மாத்திரம், அகவியைக் "கரைவி" எனல்
அதன் பண்புப்பெயர் :-)

ஒரு ஐயம்! தமிழ் நன்கு தெரிந்த கணியர்களைக் "கணிஞர்" எனலாமோ?!
கணியன் = any programmer
கணிஞன் = tamil-versatile programmer

மூக்குக் கண்ணாடியைப் பற்றித், கி. வா. 'சகந்நாதையர் கட்டுரையைப் படித்த
ஞாபகம் வருகிறது; (அவர் கொங்குநாட்டுக்காரர்; பரமத்தி வேலூருக்கு
எதிரே காவேரிக்கரையில் இருக்கும் மோகனூர், சிலம்பொலி செல்லப்பன் அவர்களும்
அதே ஊர்தான்). கிவாஜவை, 'கிண்டிக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றுபேச
வைத்ததுண்டு; அவர் இன்னும் சில நூல்களை பதிப்பித்திருக்கலாம், கதைகள்
எழுதுவதைக் குறைத்து).

முகத்தில் எல்லா உறுப்புகளுக்கும் நகைகள் உள. கண்ணுக்கு மாத்திரம் இல்லை.
அதற்கு மேனாட்டார் கண்ணாடி கண்டுவிட்டனர்;
எனவே, அதை நயன பூஷணம் என்று சுவைபட எழுதியுள்ளார்.

கண்ணாடியை நயன பூஷணம் என்னுமாப்போலே,
பொத்தகத்தின் இடத்தைப் பிடித்த செல்பேசியை ஹஸ்தபூஷணம் என்னலாமோ?!!

அன்பன்,
நா. கணேசன்







______________________________________________________